செய்திகள் :

மன்னார்குடி: டி.ஆர்.பாலு மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை; செந்தில் பாலாஜி வழக்கு தொடர்பாகவா?

post image

சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுமார் 41 இடங்களில்  இன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே கர்ணாவூரில் அமைந்துள்ள தி.மு.க பொருளாளரும், எம்.பி-யுமான டி.ஆர்.பாலுக்குச் சொந்தமான மதுபான ஆலையில், காலை முதல் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு போலீஸார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று காலை 8 மணி அளவில் தொடங்கிய இந்தச் சோதனையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் அதிகாரி சித்ரா தலைமையில் சுமார் 10 பேர் கொண்ட குழுவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மது ஆலையில் சோதனை நடத்தப்படுவதால் மன்னார்குடி பகுதி மிகவும் பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் சோதனை நடக்கும் மது ஆலையைச் சுற்றி தி.மு.க-வினர் திரண்ட வண்ணம் இருப்பதால், மன்னார்குடி நகர போலீஸார் அப்பகுதியில் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக (Disproportionate Assets) ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இந்த வழக்கில்  சில மதுபான ஆலை நிறுவனங்களும் (Distillery Companies) சேர்க்கப்பட்டிருந்தன.

அந்த அடிப்படையில் மன்னார்குடியில் உள்ள டி.ஆர்.பாலுவிற்கு சொந்தமான இந்த மதுபான ஆலையில் சோதனை நடைபெற்று வருவதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் தரப்பில், தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சோதனையின்போது மது ஆலையில் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள், நிதிப் பரிவர்த்தனைப் பதிவுகள் மற்றும் விசாரணைக்குத் தேவையான பிற ஆதாரங்களை அதிகாரிகள் சேகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

தி.மு.க-வின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் டி.ஆர்.பாலுவுக்கு சொந்தமான மது ஆலையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அதிகாரிகளால் சோதனை நடத்தப்படுவதால் அப்பகுதி மிகவும் பரபரப்புடன் காணப்படுகிறது.

NEET 2026 முறைகேடு: 13 கைது, 360 சாட்சிகளுடன் குற்றப்பத்திரிகை - CBI சொல்வது என்ன?

டெல்லி ஜந்தர் மந்தரில் தொடங்கி கடந்த ஒரு மாதமாக இந்தியாவையே உலுக்கி எடுத்தப் போராட்டம், 'நீட் வினாத்தாள் கசிவிற்கு எதிரான காக்ரோச் ஜனதா கட்சியின் போராட்டம்'.இந்தப் போராட்டத்தின் வெற்றியாக கடந்த சனிக்க... மேலும் பார்க்க

'ஆர்த்தோ டாக்டர்களுடன் சட்டமன்றத்தை நடத்த வேண்டியிருக்கும்!' - முதல்வரை எச்சரித்த திமுக கவுன்சுலர்!

சென்னை ரிப்பன் பில்டிங்கில் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் அதியமான் முதல்வர் விஜய்யை எச்சரிப்பதை போல பேசியிருந்தார்.மாமன்ற கூட்டம்நேரமில்லா நே... மேலும் பார்க்க

'சென்னை மாநகராட்சியில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்பட்டதா?' - மனம் வருந்திய விசிக கவுன்சிலர்!

சென்னை மாநகராட்சியின் ரிப்பன் பில்டிங்கில் ஜூலை மாதத்துக்கான மாமன்றக் கூட்டம் நடந்து வருகிறது. இந்தக் கூட்டத்தில் விசிக கவுன்சிலர் கோபிநாத், மாநகராட்சி மாமன்ற அரங்கில் அம்பேத்கர் படம் ஓரங்கட்டப்படுவதா... மேலும் பார்க்க

`இளைஞர்களின் கருத்தை முட்டாள்கள் கேட்பதில்லை; அமித் ஷா அவைக்கு வராதது ஏன்?'- நாடாளுமன்றத்தில் ராகுல்

நாடாளுமன்றத்தில் பொதுத்தேர்வு திருத்த மசோதா மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. விவாதத்தின்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "அமித் ஷா அவைக்கு வராதது ஏன்? அவருக்கு துணிச்சல் இல்லையா? நீட் ... மேலும் பார்க்க

அமெரிக்க தளத்தில் ஈரான் தாக்குதல், ட்ரம்ப்-நெதன்யாகு, ஜெலன்ஸ்கி மீட், ஈராக் தாக்குதல் ஏன்?|#AllInOne

ஈரான் போர், அதிபர்கள் சந்திப்பு உள்ளிட்ட முக்கிய உலக செய்திகளை இங்கே சின்னச் சின்ன செய்திகளாக காணலாம். ஈரான் தாக்குதல்: ஜூலை 24-ம் தேதிக்கு முன்பு, தொடர்ச்சியாக 13 நாள்கள், அமெரிக்கா, ஈரான் இடையே மோதல... மேலும் பார்க்க

பொறுப்பும் கொடுக்கவில்லை… மரியாதையும் அளிக்கவில்லை! - தவெகவில் இணைந்த அதிமுக மாஜிக்கள் புலம்பல்

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து பல முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தற்போதைய சில சட்டமன்ற உறுப்பினர்கள் அடுத்தடுத்து தவெகவில் இணை... மேலும் பார்க்க