செய்திகள் :

மஹாளய பட்சம் 2026 – முன்னோர்களின் ஆசியைப் பெற 15 நாட்களும் என்ன செய்ய வேண்டும்?

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்

மஹாளய பட்சம் என்பது புரட்டாசி மாதம் பௌர்ணமிக்கு அடுத்த நாள் முதல் மஹாளய அமாவாசை வரை உள்ள பதினைந்து நாட்கள். சிலர் பௌர்ணமியையும் சேர்த்து பதினாறு நாட்கள் என்பர். இந்த பதினைந்து நாட்கள் முன்னோர்களை நினைத்து, அவர்களை வழிபடுவதற்கான நாட்கள்.  இந்த வருடம் செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 10 வரை மஹாளய பட்சம்.

இறந்து போன முன்னோர்களில் கடைசி மூன்று தலைமுறையினர் பித்ருலோகம் என்றழைக்கப்படும் உலகத்தில் இருப்பதாக நம்பிக்கை. இவர்களை ‘தென்புலத்தார்’ என்கிறார் வள்ளுவர். இதற்கும் முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தேவலோகம், மற்றும் பிரம்மலோகம் சென்று விடுகின்றனர். இந்த பதினைந்து நாட்களில், பித்ருலோகத்தில் வசிக்கும் முன்னோர்கள், நம்மைத் தேடி வந்து இல்லங்களில் தங்குவதாக நம்பிக்கை. ஆகவே தான் இந்த பதினைந்து நாட்கள் முன்னோர் வழிபாட்டுக்கு உகந்த நாளாகக் கருதப்படுகிறது.

பொதுவாக முன்னோர்கள் எந்த மாதத்தில், எந்த திதியில் மறைந்தார்களோ, அந்த குறிப்பிட்ட மாதத்தில், அந்த திதியன்று திவசம் என்ற சடங்கு செய்வது வழக்கம். ஆனால், வருடாந்திர சிராத்தம் செய்ய முடியாதவர்கள், மஹாளய பட்சத்தில், அந்த திதியில் சிராத்தம் செய்வதால், அவர்கள் செய்ய வேண்டிய முன்னோர் வழிபாடு பூர்த்தி அடைகிறது. மஹாளய பட்சத்தின் பதினைந்து நாட்களும் நம்மை விட்டுச் சென்ற முன்னோர்களுக்காக தர்ப்பணம் செய்வது நல்லது.

தர்ப்பணத்தில் முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் அளிக்கிறோம். நம்முடைய மூதாதையர்கள் இந்த பூமியில் பிறந்து, செப்பனிட்டு, வளப்படுத்தி, வருங்கால சந்ததியினர்க்கு விட்டுச் சென்றுள்ளனர். அதனை உணர்ந்து, அவர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் தான் தர்ப்பணம் என்கிறது மனுஸ்மிருதி.

மஹாளய அமாவாசை

மாதந்தோறும் வருகின்ற  அமாவாசையில் மூன்று தலைமுறை முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மஹாளய அமாவாசையன்று, தாய் வழி, தந்தை வழி முன்னோர்களுடன், மறைந்த உறவினர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, நண்பர்களுக்கு, என்று அனைவர்களுக்கும் சேர்த்து தர்ப்பணம் கொடுக்கலாம். மஹாளய பட்சத்தில் செய்யும் சிராத்தத்திற்கு, கயாவில் செய்யும் சிராத்தத்திற்கு ஈடான பலன் உண்டு

இந்த நாளின் முக்கியத்துவம் பற்றி புராணக் கதை உண்டு. மகாபாரதப் போரில் உயிர்நீத்த கர்ணன், அவன் செய்த தான தர்மங்களினால் சொர்க்கம் அடைந்தான். ஆனால், அவன் சாப்பிட அமர்ந்த போது அவனுடைய தங்கத்தட்டில், உணவிற்குப் பதிலாக வெள்ளிக்காசுகள், தங்கக்காசுகள் இருந்தன. காரணம் கேட்ட போது, “நீ உன்னுடைய முன்னோர்களுக்கான வழிபாட்டைச் செய்யவில்லை” என்றான் சொர்க்க லோக அதிபதி இந்திரன். இந்திரன் அனுமதியுடன் கர்ணன் பூமிக்கு வந்து மாளையபட்சத்தில் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்து பித்ரு கடனை முடித்துக் கொண்டப் பின் சொர்க்கம் திரும்பிய அவனுக்கு ராஜவிருந்து அளிக்கப்பட்டது. 

இந்த நாட்களில், ஒவ்வொரு திதியிலும் செய்யும் தர்ப்பணம், பல்வேறு நலன்களைத் தருகின்றன.

1ஆம் நாள் – பிரதமை – செல்வம் சேரும்

2ஆம் நாள் – துவிதியை – குழந்தைச் செல்வம்

3ஆம் நாள் – திரிதியை – நினைத்தவை நிறைவேறும்

4ஆம் நாள் – சதுர்த்தி – பகைமை விலகும்

5ஆம் நாள் – பஞ்சமி – அசையா சொத்துக்கள் அடையலாம்

6ஆம் நாள் – சஷ்டி – புகழ் தேடி வரும்

7ஆம் நாள் – சப்தமி – பெரும் பதவிகள் அடையலாம்

8ஆம் நாள் – அஷ்டமி – அறிவின் முதிர்ச்சி

9ஆம் நாள் – நவமி – நல்ல வாழ்க்கைத் துணை

10ஆம் நாள் – தசமி – நிறைவேறாமலிருந்த ஆசை நிறைவேறும்

11ஆம் நாள் – ஏகாதசி – கல்வி, விளையாட்டு, கலைகளில் முன்னேற்றம்

12ஆம் நாள் – துவாதசி – நகைகள் சேரும்

13ஆம் நாள் – திரயோதசி – தொழில் முன்னேற்றம், நீண்ட ஆயுள்

14ஆம் நாள் – சதுர்தசி – பாவத்திற்கு பிராயச்சித்தார்த்தம்

15ஆம் நாள் – மஹாளய அமாவாசை – பித்ருக்களின் ஆசீர்வாதத்துடன் அனைத்து நன்மைகளும் அடையலாம். பித்ரு தோஷம் நீங்கும்.

மஹாளய அமாவாசை ஏன் இவ்வளவு முக்கியம்?!

மகாளாய பட்ச காலத்தில் தானம் செய்வது நம்முடைய முன்னோர்களை திருப்தி செய்யும்.

எள் இந்துக்களின் வாழ்வில் முக்கிய பங்கு வகிக்கிறது. கருப்பு எள்ளைத் தானம் செய்வது, நமக்கு இருக்கின்ற தடைகளை விளக்கும்.

உப்பைத் தானம் செய்தால், நமக்கெதிரான சக்திகளிடமிருந்து நம்மைக் காப்பாற்றுவதுடன், முன்னோர்களின் ஆசியும் கிடைக்கும்.

வேட்டி, துண்டு போன்ற ஆடைகள் தானம், ஜாதகத்தில் இருக்கின்ற தோஷங்களுக்குப் பரிகாரமாவதுடன், ஆயுள் ஆரோக்கியத்திற்கு வழி செய்யும்.

பசு நெய் தானம், குடும்பத்தில் நிலவி இருந்த குழப்பங்களைப் போக்கும்.

தானத்தில் சிறந்தது “கோ தானம்” என்பார்கள். பசுவைத் தானமாகக் கொடுப்பது இப்பிறவிக்கு மட்டுமல்லாது பல பிறவிகளுக்கும் பலன் தரும்.

குரு பகவான் தோஷம் நீங்க, தங்கம் தானம் செய்யலாம்.

அனைத்து நோய்களிலிருந்து விடுபட்டு நோயற்ற வாழ்வடைய வெள்ளிப் பொருட்கள் தானம் வகை செய்யும்.

அன்ன தானம் பாவத்தைத் தீர்ப்பதுடன், கடவுளின் ஆசீர்வாதத்திற்கு வழி செய்யும்.

முன்னோர்கள் வருடத்திற்கு ஒரு முறை நம்மைப் பார்க்க வருகிறார்கள் என்ற நம்பிக்கை இந்து சமயத்தின் நம்பிக்கை மட்டுமல்ல. உலகில் பல நாடுகளிலும், பல சமயங்களிலும், கலாசாரங்களிலும் நம்மைப் பிரிந்து சென்ற முன்னோர்கள் வருடத்திற்கு ஒருமுறை நம்மைப் பார்க்க வருகிறார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

-கே.என்.சுவாமிநாதன், சென்னை

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..!

இந்த வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப்பில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ரூ.1.27 லட்சம் கோடியில் செமிகான் 2.0! – சிப் தயாரிப்பில் உலகை ஆளப் போகும் இந்தியா

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பாராட்ட தேடிய மனம்!

உலகின் முதல் பெண் மயக்க மருந்து நிபுணர்! – வரலாறு மீட்டெடுத்த இந்திய மருத்துவர் ரூபா பாய் ஃபர்தூஞ்சி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

யார் எதிரி? - சிறுகதை

என் மதிப்பெண் குறைந்த கதை!

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

புன்னகைக்குப் பின்னே - குறுங்கதை