செய்திகள் :

'மாணவர் விடுதிகளில் மாட்டிறைச்சியா?'- வன்னியரசு பரிசீலினைக்கு கிருஷ்ணசாமி கண்டனம்!

post image

சமூகநீதி விடுதிகளில் மாணவர்களுக்கு சிக்கன், மட்டன் வழங்கப்பட்டு வருவதை போல் மாட்டிறைச்சி வழங்குவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பரிசீலனை செய்யப்படும் என அமைச்சர் வன்னியரசு சைதாப்பேட்டை எம்.சி.ராஜா சமூகநீதி மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டபோது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வன்னியரசுக்கு புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாட்டில் சமூகநீதித் துறையின்கீழ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தங்கிப் பயில்வதற்காக ஆயிரக்கணக்கான உண்டு உறைவிடப் பள்ளிகளும், விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.

வன்னியரசு
வன்னியரசு

பள்ளி மாணவர்களுடைய உடல்நலம் மற்றும் மனநலம் பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில், நாம் 1996 முதல் 2001 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்த நேரத்தில் தொடர்ந்து குரல்கொடுத்து, மாதாந்திரக் கட்டணம் வெறும் 150 ரூபாயாக இருந்ததை 450 ரூபாயாக மூன்று மடங்கு உயர்த்திக் கொடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.

அதன் காரணமாக மாணவர்களுக்குத் தரமான உணவு வழங்கப்பட்டது. இப்பொழுது அதற்குப் பிறகு ஏறக்குறைய 30 வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைய விலைவாசித் தேவைகளின் அடிப்படையில், மாணவர்களுடைய உணவுக் கட்டணம் கணிசமான அளவு உயர்த்தப்பட்டிருக்கிறது.

பொதுவாக உணவு வழங்குவதில் புரதச்சத்துக்கள் கணிசமான அளவுக்கு இடம்பெற வேண்டும். புரதச்சத்துக்கள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்புச்சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் இடம்பெற வேண்டும். அதைச் சரிசெய்வதற்காகவே தினமும் முட்டை வழங்குதல் மற்றும் வாரத்திற்கு இருமுறையாவது கோழி இறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.

உணவுப் பழக்கவழக்கங்கள் ஒவ்வொரு தனிநபருக்கும் குடும்பத்திற்கும், சமுதாயங்களுக்கும் மாறுபடுகிறது. அசைவப் பிரியர்களில் கோழி இறைச்சி, ஆட்டிறைச்சி ஆகியவற்றை பெரும்பாலானோர் விரும்பி ஏற்றுக்கொள்வர். மாட்டிறைச்சி என்பது நமது தமிழகத்தில் பொதுவான உணவு அல்ல; அது நமது கலாச்சாரத்திலும் இல்லை. அது சில தனிப்பட்ட நபர்கள், குடும்பங்கள், சமூகங்களுடைய பழக்கவழக்கங்கள் ஆகும். அது அவர்களுடைய சொந்த விருப்பம்.

கிருஷ்ணசாமி
கிருஷ்ணசாமி

ஆனால் பல்வேறு தரப்பட்ட மாணவர்கள் பயிலும் சமூகநீதி விடுதிகளில் மாட்டிறைச்சி வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும் என்ற வன்னியரசின் தனிப்பட்ட விருப்பத்தை சில மாணவர்களுடைய கோரிக்கை என்பதைப் போல ஒரு பொது விவாதத்திற்குக் கொண்டுவந்துள்ளார்.

அதுபோன்ற ஒரு தவறான, விபரீதமான முடிவை ஜெயராஜ் என்ற வன்னியரசு எடுத்துவிட மாட்டார் என்று கருதுகிறோம். அவர் ஓர் அமைப்பினுடைய பொறுப்பாளர் என்ற வகையிலே கடந்த காலங்களிலே பொதுவெளியில் பேசியது என்பது வேறு. மாட்டிறைச்சி மேளா நடத்தியது என்பதெல்லாம் வேறு; அப்போதே நாம் கண்டித்திருகிறோம். ஆனால், இப்பொழுது அமைச்சர் பொறுப்பிலே அமர்ந்துகொண்டு, தங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீது திணிக்க எத்தனிக்கக் கூடாது.

மாணவர் விடுதிகளில் ’மாட்டிறைச்சி’ பரிசீலிக்கப்படும் என்ற கருத்தை அவர் கூறியதே தவறானது; குற்றமானது; கண்டிக்கத்தக்கது; தண்டிக்கத்தக்கது. அது எந்தவிதமான பரிசீலனைக்கும் எடுத்துக்கொள்வதற்குத் தகுதியற்றது. உடனடியாக அந்த மாட்டிறைச்சி குறித்த கருத்தை அவர் திரும்பப் பெற வேண்டும்.

வன்னியரசு
வன்னியரசு

ஒருவேளை அதை அமல்படுத்துவதற்கு உண்டான ஏதாவது செயலில் ஈடுபடும் பட்சத்தில், அவர் எதிர்பாராத கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதையும், அமைச்சரவை இருக்கையிலேயே அமர முடியாத சூழ்நிலைகூட ஏற்படும் என்பதையும் எச்சரிக்கை செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம். எனவே, வன்னியரசின் மாட்டுக்கறி மாமிசக் கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்" என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

"கம்யூனிஸ்ட்களின் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" - வீரபாண்டியன் பதிலடி

"கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்" என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்டுகளுக்கும், தவெகவினருக்கு... மேலும் பார்க்க

'நெடுஞ்சாலைகளில் 70 கி.மீக்கு மேல் சென்றால் அபராதம்!' - அமைச்சர் ஆதவ்வின் புது திட்டம்!

பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரான ஆதவ் அர்ஜூனா, அத்துறையின் பொறியாளர்களுடன் துறை சம்பந்தமான பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தியிருக்கிறார். அதில், அடுத்த சில ஆண்டுகளில் மேற்கொள்ள... மேலும் பார்க்க

வேலூர்: உயிரோடு இருக்கும்போதே இறப்புச் சான்றிதழ் கேட்ட விவசாயி - என்னக் காரணம் தெரியுமா?

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகேயுள்ள கே.ஜி.ஏரியூரைச் சேர்ந்தவர் காந்தி (வயது 47). இவர் தனது மனைவி மேரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு ஒன்றை அளித்தார். மனுவில் அவர் கூறியிருப்பதாவது, `... மேலும் பார்க்க

'எதிர்பார்க்கப்பட்டதுதான்' ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற புதின் கட்சி - காரணம்?

நேற்று (செப்டம்பர் 21) ரஷ்ய நாடாளுமன்றத்தின் கீழ்சபையான ஸ்டேட் டூமாவின் தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்தத் தேர்தலில் கிடைத்திருக்கும் ரிசல்ட் என்னவோ அனைவரும் எதிர்பார்த்ததுதான்.ரஷ்ய அதிபர் புதினின் ‘ஐ... மேலும் பார்க்க

”நம்ம கட்சி திமுக கூடாரமா மாறிட்டு வருது தலைவரே...” - விஷமருந்தி தற்கொலைக்கு முயன்ற தவெக நிர்வாகி

தூத்துக்குடி மாவட்ட த.வெ.கவில், புறநகர் மாவட்ட செயலாளராக அமைச்சர் மதன் ராஜாவும், மத்திய மாவட்டச் செயலாளராக அமைச்சர் ஸ்ரீநாத்தும், தெற்கு மாவட்டச் செயலாளராக பிரைட்டரும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நில... மேலும் பார்க்க

"இதற்கு அந்த ஜோசியரையே முதலமைச்சராக்கி இருக்கலாம்" - விஜய்யைச் சாடிய சீமான்

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறுகிறது.நாம் தமிழர்க கட்சி வேட்பாளர்களாக மதுராந்தகம் தொகுதியில் கோ. ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கா... மேலும் பார்க்க