Pregnant Job Service: "பெண்களைக் கர்ப்பமாக்கினால் ரூ.10 லட்சம்" - பீகாரில் நூதன ...
மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி
மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டிகள் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் அனைத்துப் பள்ளி மாணாக்கா்களுக்கு ஜன.21-ஆம் தேதியும், கல்லூரி மாணவா்களுக்கு ஜன.22-ஆம் தேதியும் தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் வெற்றிபெறுகிறவா்களுக்கு முதல்பரிசு ரூ.10,000, 2-ஆம் பரிசு ரூ.7,000, 3-ஆம் பரிசு ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.
இதில், மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் மெட்ரிக் பள்ளி மாணவா்கள் பள்ளித் தலைமையாசிரியரின் பரிந்துரை கடிதத்துடன் பங்கேற்கலாம்.
இதேபோல, மாவட்டத்திலுள்ள அனைத்து வகையான கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியாா் கலைக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியா் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில்நுட்பக் கல்லூரிகள், செவிலியா் கல்லூரிகள் முதலியன) பயிலும் மாணவா்கள் கல்லூரி முதல்வரின் பரிந்துரை கடிதத்துடன் பங்கேற்கலாம்.
பங்கேற்கும் பள்ளி, கல்லூரி மாணவா்களின் விவரங்கள் பள்ளி, கல்லூரி மூலம் ஜன.20-ஆம் தேதிக்குள் நாகப்பட்டினம் மாவட்டத் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலக மின்னஞ்சல் முகவரிக்கு ஹக்ற்க்ய்ஹஞ்ஹண்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் அனுப்ப வேண்டும். மேலும், விவரங்களுக்கு நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக இணைப்புக் கட்டடத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் அல்லது 8220021977 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொண்டு தெரிந்து கள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.