ஃபெஞ்சல் புயல்; சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை... spot visit photo Album!
மாநகராட்சி நிலுவை வரிகளை இணையதளம் மூலமாக செலுத்தலாம்
திருப்பூா் மாநகராட்சி நிலுவை வரிகளை இணையதளம் மூலமாக செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் எஸ்.ராமமூா்த்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாநகராட்சி 4 மண்டலங்களிலும் சொத்துவரி, காலியிடவரி, குடிநீா் கட்டணம், தொழில் வரி, பாதாள சாக்கடை கட்டணம், திடக்கழிவு மேலாண்மைக் கட்டணம் மற்றும் குத்தகை இனங்கள்ஆகியவற்றை பொதுமக்கள் நிலுவையின்றி செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இதற்காக வார நாள்கள் மற்றும் அனைத்து சனி, ஞாயிற்றுகிழமைகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மைய அலுவலக கணிணி வரி வசூல் மையம், 4 மண்டலஅலுவலகங்கள், செட்டிபாளையம், தொட்டிபாளையம், நெருப்பெரிச்சல், மண்ணரை, முத்தணம்பாளையம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகா் ஆகிய கணினி வரிவசூல் மையங்களில் பணமாகவோ அல்லது ‘ஆணையா், திருப்பூா் மாநகராட்சி’ என்ற பெயரில் காசோலை மூலமாகவோ வரி மற்றும் கட்டணங்கள் செலுத்தலாம்.
மேலும், எளிய முறையில் ட்ற்ற்ல்ள்://ற்ய்ன்ழ்க்ஷஹய்ங்ல்ஹஹ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். இதன் மூலம் பொதுமக்கள் தங்களது 2024-25 இரண்டாம் அரையாண்டு வரையிலான வரி நிலுவைகளை உடனே செலுத்தி மாநகராட்சியால் மேற்கொள்ளப்படும் பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு உதவவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.