செய்திகள் :

மானாமதுரை: முன்னாள் அமைச்சர் தமிழரசியை வீழ்த்தி மகுடம் சூடிய ‘போட்டோகிராபர்’ - யார் இந்த இளங்கோவன்?

post image

காங்கிரஸின் பாரம்பரியம், திமுக - அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக 'ஆப்பு' வைத்திருக்கிறது தவெக.

ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

திராவிட, தேசிய கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது 'வெற்றிக் கோட்டையாக' மாற்றியிருக்கிறார் தளபதி விஜய்.

தி.மு.க. மற்றும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட மானாமதுரை (தனி) மண்ணில், முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான தமிழரசியை வீழ்த்தி ‘ஜாக்பாட்’ அடித்திருக்கிறார் த.வெ.க-வின் இளங்கோவன்.

44 வயதான இளங்கோவன், தொழில் ரீதியாக ஒரு புகைப்படக் கலைஞர்.

திருப்புவனம் மேற்கு ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, ஆளுங்கட்சியின் அதிகார பலத்தை அசால்ட்டாக ஓரம் கட்டியிருக்கிறார்.

இவருக்குப் பின்னால் உறுதுணையாக நின்றது இவரது குடும்பம் தான். மளிகைக்கடை நடத்தி வரும் மனைவி ஜெயலெட்சுமி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என சிறிய குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவன், ஒரு சராசரி மனிதனாலும் அரசியலில் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.

இங்கே பா.ஜ.க. சார்பில் களம் கண்ட பொன். பாலகணபதி கடும் போட்டி கொடுத்தபோதிலும் இளங்கோவனின் பிரச்சாரத்திற்கு முன்னால் ‘சிட்டிங்’ எம்.எல்.ஏ-வின் செல்வாக்கு எடுபடவில்லை.

வாக்கு எண்ணிக்கையின் இறுதியில் 1,208 வாக்குகள் திமுகவின் தமிழரசியைவிட கூடுதலாகப் பெற்று வாகை சூடினார்.

"பழைய முகங்கள் வேண்டாம், புதிய ரத்தம் பாயட்டும்" என்ற வாக்காளர்களின் மனவோட்டத்தை இளங்கோவன் சரியாகப் பிடித்துக்கொண்டார்.

விஜய்யின் ‘தளபதி’யாக மானாமதுரை மண்ணில் இளங்கோவன் நிகழ்த்தியிருக்கும் இந்த வெற்றி, தமிழக அரசியலின் ‘டாப் ஆங்கிள்’ ஷாட்!

"அந்த கட்டட தொழிலதிபராலத்தான் இத்தனை குழப்பம்.!" - பொங்கும் அ.தி.மு.க கிளர்ச்சியாளர்கள்

அ.தி.மு.க-வுக்குள் உச்சக்கட்ட குழப்பம் வெடித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி பழனிசாமியின் பிறந்தநாளான இன்று, தொண்டர்கள் குழுமி அவருக்கு வாழ்த்து தெரிவித்தாலும், அவரது வலது இடது கரங... மேலும் பார்க்க

`குதிரை பேர அரசியல்: 'மாற்றமல்ல துர்நாற்றம்' - தவெக-வை கடுமையாகச் சாடும் டிடிவி தினகரன்!

அ.ம.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்ட எஸ்.காமராஜ், தி.மு.க-வின் டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்து எம்.எல்.ஏ ஆனார். த.வெ.க-வுக்கு ஆதரவு கடிதம் கொடுத்ததாக தகவல் பரவிய நிலையில், "தன் கட்சி எம்.எல்.ஏ-வ... மேலும் பார்க்க

”ஆளுங்கட்சியில் இருப்பதுதான் சேஃப்”- அமமுக-வில் இருந்து நீக்கம்; பொங்கிய எஸ்.காமராஜ்!

அதிமுக கூட்டணியில் அமமுக சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் எஸ்.காமராஜ். டி.ஆர்.பி.ராஜாவை தோற்கடித்ததால் அரசியல் வட்டத்தில் இவர் மீது தனி கவனம் விழுந்தது. இந்நிலையில் எஸ்.காமராஜ் தவ... மேலும் பார்க்க

'மோடியின் பேச்சில் மர்மம் ஒளிந்திருக்கிறது; இந்திய பொருளாதாரம் மோசமான.!'- கெஜ்ரிவால் காட்டம்

மத்தியக் கிழக்கு போர் பதற்றத்தால் உலகளாவிய எரிசக்தி நெருக்கடி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்க, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு நாட்ட... மேலும் பார்க்க

சி.வி சண்முகம் தரப்புக்கு முக்கியத்துவம் கொடுத்த `முதல்வர்' விஜய் - எடப்பாடி பழனிசாமியை சந்திப்பாரா?

தமிழ்நாடு அரசியலில் தேர்தல் முடிவு வெளியான மே-4 க்குப் பிறகு பிரேக்கிங் நியூஸுக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பாரா என்பதில் தொடங்கி தற்போது அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் மாளி... மேலும் பார்க்க

தேனி: துடைத்தெறியபட்ட அதிமுக… கட்சிக்கு கஷ்ட காலத்தில் கைகொடுத்த மாவட்டத்தில் வீழ்ச்சி! என்ன காரணம்?

அ.தி.மு.க -வின் முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம் ஆகிய மூவரும் களம் கண்டு வெற்றி பெற்ற மாவட்டம் தேனி. இங்கு உள்ள நான்கு தொகுதிகளிலும் கோலோச்சி வந்த அ.தி.மு.க, தற்போது நடந்... மேலும் பார்க்க