செய்திகள் :

"மாயாஜாலக் கணக்குகளை மக்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்"- வாக்குப்பதிவு குறித்து தவெக விஜய்

post image

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வாக்கு சதவிகிதம் பதிவாகியிருக்கும் நிலையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "குறிப்பிட்ட எல்லைக்குள் அரசியலை அடைத்து வைத்திருந்தவர்களின் மாயாஜாலக் கணக்குகளை வெகுஜன மக்கள் உடைத்து நொறுக்கியிருக்கிறார்கள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

இதுவரை அரசியலில் ஆர்வமே காட்டமாட்டார்கள் என்று கருதப்பட்ட இளைஞர்களும், பெண்களும் அரசியலைப் பேசத் தொடங்கியிருக்கும் அந்த அதிசயமும், அவசியமும் நிகழத் தொடங்கிவிட்டது.

இது எப்போது தொடங்கியது என்பதை நடுநிலையான மனம் கொண்ட ஒவ்வொருவரும் உணர்வார்கள். 85% வாக்குப்பதிவு என்பது இதுவரை தமிழகம் கண்டிராத ஒன்று.

வாக்குச்சாவடிகளில் கோவில் திருவிழாக்கூட்டத்தைப்போல, கைக்குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து வாக்களித்ததைக் கண்டு வியக்காதவர் எவரும் இருக்க முடியாது.

அதுமட்டுமா? பெரும் பொருட்செலவில் வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஜனநாயகக் கடமையாற்ற வந்த அந்த வாக்காளர்களை நாம் கைகூப்பி வணங்க வேண்டாமா?.

தேர்தல் அரசியலை அர்த்தப்படுத்திய தமிழக மக்களுக்கு நன்றி. தேர்தல் திருவிழா, ஜனநாயகத் திருவிழா என்பதன் உண்மையான அர்த்தம் நேற்றுதான் (ஏப்ரல் 23, 2026) உணரப்பட்டது.

ஆயினும், இது ஒரு தொடக்கம் மட்டுமே. தமிழக தேர்தல் அரசியலுக்குப் புதிய இலக்கணம் எழுதிய தமிழக மக்களாகிய என் பாட்டி, என் தாய், என் சகோதரிகள், என் தாத்தா, என் தந்தை, என் சகோதரர்கள் என எனது ஒட்டுமொத்தக் குடும்ப உறவுகளுக்கும் எனது நன்றிகள்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

குறிப்பாக, நான் நன்றி சொல்ல வேண்டியவர்கள் நமது வாக்குச்சாவடி முகவர்கள், நமது கட்சித் தோழர்கள் மற்றும் அனைத்து நிலை நிர்வாகிகள். "உங்களுக்கு என்ன அரசியல் தெரியும்? உங்களால் எப்படித் தாக்குப் பிடிக்க முடியும்?" என்று கேலி செய்தவர்களுக்கு, உங்கள் செயல்கள் மூலம் நீங்கள் பதிலடி கொடுத்திருக்கிறீர்கள்.

உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகளும் நன்றிகளும். நமது கட்சித் தோழர்களுக்குத் துணையாக நின்ற குடும்ப உறுப்பினர்களுக்கும் எனது நன்றிகள்" என்று விஜய் பதிவிட்டிருக்கிறார்.

`ஹர்பஜன் சிங், சுவாதி மாலிவால் உள்ளிட்டோரும்...' - பாஜகவில் இணைந்த ராகவ் சதா தகவல்!

ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா மற்றும் ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி இருக்கின்றனர். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற... மேலும் பார்க்க

"சோதனை நடத்துவது தப்பு கிடையாது; உண்மையை மறைப்பது ஏன்?"- ஆதாரத்தை காட்டிய செல்வப்பெருந்தகை

ராகுல் காந்தி பிரசாரத்திற்காக தமிழகம் வந்திருக்கும் வேளையில் தன்னை 'சோதனை' என்ற பெயரில் முடக்கி வைத்திருப்பதாகத் செல்வப்பெருந்தகை கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் வருமான வரித்து... மேலும் பார்க்க

நேபாள அரசியல் மாற்றம்: `அமைச்சர்களின் வெளியேற்றமும் மக்களின் கொந்தளிப்பும்!' - Gen Z அரசியல்| அலசல்

Gen Z அரசியல்நேபாளத்தில் கடந்த மார்ச் 5-ம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில், காத்மாண்டு முன்னாள் மேயரும் ராப் பாடகருமான பாலன் ஷா (பாலேந்திர ஷா) வெற்றிபெற்று மார்ச் 27 அன்று பிரதமராகப் பதவியேற்றார். இந்த... மேலும் பார்க்க

"ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி" - பாஜக தலைவர் நிதின் நபின் விமர்சனம்

ராகுல் காந்தி ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதி என்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின் விமர்சித்திருக்கிறார்.சத்தீஸ்கர் மாநிலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நிதின் நபினிடம் எதிர்க்கட்சித் தலைவர் ... மேலும் பார்க்க

இந்தியா குறித்து ட்ரம்பின் சர்ச்சைக்குரிய பதிவு: "அறியாமை, பொருத்தமற்றது'' - இந்தியா கடும் கண்டனம்

இந்தியா மற்றும் சீனாவை "நரகக் குழி" (Hellholes) என்று அமெரிக்க வானொலி தொகுப்பாளர் மைக்கேல் சாவேஜ் வர்ணித்து, நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு நீண்ட கட்டுரையைத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார். இது இந்... மேலும் பார்க்க