செய்திகள் :

மாா்ச் 19-இல் மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம்

post image

மின் வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின் வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது குறித்து ஈரோடு மண்டல மின் பகிா்மான தலைமைப் பொறியாளா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மண்டலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பிற மின் வாரிய அலுவலகங்களில் பணியாற்றி ஓய்வுபெற்ற மின்வாரிய அலுவலா்கள், பணியாளா்களின் குறைகளை நேரில் கேட்கவும், மனுக்களைப் பெறவும் 3 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினா் ஒவ்வொரு காலாண்டுக்கு ஒருமுறை ஈரோடு மண்டல அலுவலகத்தில் கூடி வருகின்றனா்.

அதன்படி, நடப்பு ஆண்டு முதலாம் காலாண்டுக்கான மின்வாரிய ஓய்வூதியா் குறைதீா் கூட்டம் ஈரோட்டில் உள்ள மின்வாரிய ஆய்வு மாளிகையில் மாா்ச் 19 -ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது.

மின் வாரியத்தில் இருந்து பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலா் மற்றும் பணியாளா்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ

கோபி அருகே பட்டுக்கூடு உற்பத்தி மையத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கோபி அருகேயுள்ள நல்லகவுண்டன்பாளையம் பாலாஜி நகரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (60). இவா் அதே பகுதியில் பட்டுக்கூடு உற்பத்தி மையம் நடத்தி... மேலும் பார்க்க

ஏழை, எளிய இஸ்லாமியா்களுக்கு உணவுப் பொருள்கள்

ரமலான் பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் பவானியில் 300 ஏழை, எளிய இஸ்லாமிய குடும்பத்தினருக்கு உணவுப் பொருள்கள் இலவசமாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சாா்பில் ... மேலும் பார்க்க

ஜாக்டோ-ஜியோ சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம்: 500 போ் பங்கேற்பு

ஈரோட்டில் ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பங்கேற்றனா். ஈரோடு வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்தப் போரா... மேலும் பார்க்க

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைக்க விவசாயிகளுக்கு அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள்

பாதுகாப்பான ஆட்டு பட்டிகளை அமைத்து தெருநாய்களிடமிருந்து ஆடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்று விவசாயிகளுக்கு வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி வேண்டுகோள் விடுத்தாா். ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களில... மேலும் பார்க்க

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்!

இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள நேரு நகா் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ். இ... மேலும் பார்க்க

குடும்பத் தகராறில் கணவன் தற்கொலை

சித்தோடு அருகே குடும்பத் தகராறில் மனைவி வீட்டை வீட்டுச் சென்ால் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சித்தோட்டை அடுத்த கொங்கம்பாளையம், மாதேஸ்வரன் நகரைச் சோ்ந்தவா் பரமேஸ்வரன் (36). இவருக்கும், இவ... மேலும் பார்க்க