செய்திகள் :

மீசைய முறுக்கு 2: இசையமைப்பாளர் தேவா வாழ்த்து; ``இது போதும் எனக்கு இது போதுமே!” - ஹிப்ஹாப் ஆதி

post image

ராப் பாடகராக அறிமுகமாகி பல திரைப்படங்களுக்கு இசையமைத்து வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வந்தவர் ஹிப்ஹாப் ஆதி.

பின்னர் நடிகர், இயக்குநர் எனத் தனக்கென திரைத்துறையில் ஒரு இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார். இந்த நிலையில், ஹிப் ஹாப் ஆதி இசையமைத்து, இயக்கி, நடித்துள்ள படம் ‘மீசைய முறுக்கு 2’. 2017-ம் ஆண்டு வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவாகியதே ‘மீசைய முறுக்கு 2’.

இந்தப் படத்தில் கெட்டிகா ஷர்மா, ரம்யா ரங்கநாதன், சைத்ரா ஜே. ஆச்சார், நாசர், ஹர்ஷத் கான், பாபா பாஸ்கர், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் தேவா - ஹிப்ஹாப் ஆதி
இசையமைப்பாளர் தேவா - ஹிப்ஹாப் ஆதி

கானா பாடல்களையும், கானா கலைஞர்களின் வாழ்க்கையையும் மையமாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படத்துக்கு, வெளியான முதல் நாளிலிருந்தே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் தேவா ஹிப்ஹாப் ஆதியை அழைத்து, பாராட்டி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஹிப்ஹாப் ஆதி தன் எக்ஸ் பக்கத்தில், ``“இது போதும் எனக்கு - இது போதுமே!” - தேவா ஐயாவிற்கு நன்றி கரையிலிருந்து கானாவை திரைக்கு எடுத்து சென்ற ஹீரோ - மீசையை முறுக்கு 2 படத்தைப் பார்த்து பாராட்டியதுதான் இந்தப் படத்திற்குக் கிடைக்ககூடிய மிகப்பெரும் அங்கீகாரம்!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

டோரதி: "ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய் நிற்கிறாள்" - படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜ... மேலும் பார்க்க

பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய ரசிகர் மன்றம்; வாழ்த்திய விஜய் சேதுபதி

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தவெக ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் விஜய் சேத... மேலும் பார்க்க

சிவாஜியின் 99வது பிறந்தநாளில் 'திருவிளையாடல்' டிரெய்லர்! பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பக்தி காவியங்களில் பெரும் வரவேற்பை அள்ளிய படம 'திருவிளையாடல்'. ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், டி.எஸ்.பாலையா என நடிப்பில் முத்திரை பதித்த கலைஞர்கள் நட... மேலும் பார்க்க

சூது கவ்வும் : சரவெடிக் குதூகலம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 28

`சினி'ஸ்கோப் 28சூது கவ்வும் : சரவெடிக் குதூகலம்!’எங்க பரம்பரையில எவனும் ஜாகுவார் காரைக் கழுவுனது கூட கிடையாது. அப்படிப்பட்ட பரம்பரையில வந்துட்டு அப்படி ஒரு காரை ஓட்டியிருக்கேன்னா, அதுக்காக ஒரு வேலை இல... மேலும் பார்க்க

நட்சத்திர ஹோட்டலாக மாறும் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம்! - விவரம் என்ன?

சென்னை கோடம்பாக்கத்தின் அடையாளங்களில் ஒன்று நடிகர் ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபம். அவ்வப்போது தன் ரசிகர் சந்திப்பை நிகழ்த்த, ஓய்வு நேரத்தைக் கழிக்க, ரசிகர் மன்ற செயல்பாடுகளை ஒருங்கிணைக்க என ... மேலும் பார்க்க

Sivakarthikeyan: "இதுக்கு போய் சீரியஸாக ரிப்ளை பண்றீங்க.!" - வெங்கட் பிரபு பதிவும், SK பதிலும்!

சமீபத்திய பேட்டி ஒன்றில் கங்கை அமரன், வெங்கட் பிரபுவின் அடுத்த படம் தொடர்பாகப் பேசிய விஷயம் இணையத்தில் வைரலானது. கங்கை அமரன், அந்த பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனைத்தான் குறிப்பிட்டுப் பேசுகிறார் என... மேலும் பார்க்க