செய்திகள் :

மீண்டும் பாகிஸ்தானில் பேச்சுவார்த்தை? ட்ரம்ப் மற்றும் ஈரானை இறங்கி வரச் செய்தது என்ன?

post image

கடந்த 11-ம் தேதி, பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் நடந்த அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவும் முற்றுகையிட்டது.

ஆனால், தற்போது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு பாசிட்டிவான விஷயத்தைப் பகிர்ந்துள்ளார்.

ட்ரம்ப் பேச்சு

'தி நியூயார்க் போஸ்ட்' பத்திரிகை நேர்காணலில், "அமெரிக்க பத்திரிகையாளர்கள் மீண்டும் நாடு திரும்பவேண்டாம். இஸ்லாமாபாத்திலேயே இருங்கள். அடுத்த இரண்டு நாள்களில் மிகப்பெரிய விஷயம் நடக்கலாம். அதற்காக, நாம் மீண்டும் அங்கே போவதற்கான வாய்ப்புகள் அதிகம்" என்று கூறியுள்ளார்.

அதாவது, அமெரிக்கா மற்றும் ஈரான் பேச்சுவார்த்தை மீண்டும் இஸ்லாமாபாத்தில் நடக்கலாம் என்பதற்கான குறிப்பு தான் ட்ரம்பின் இந்தப் பேச்சு.

மார்கோ ரூபியோ
மார்கோ ரூபியோ

இஸ்ரேல் - லெபனான்

அடுத்த செவ்வாய்க்கிழமையோடு (ஏப்ரல் 21), அமெரிக்கா, ஈரான் தற்காலிக போர் நிறுத்தம் முடிகிறது. அதற்குள் இரு நாடுகளும் சுமுகமான முடிவை எட்ட நினைக்கிறது.

போர் நிறுத்தம் அறிவித்த பின்னும், லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தான் ஈரான் தரப்பை மீண்டும் கோபமடையச் செய்தது. இதனால், மீண்டும் ஈரானின் தாக்குதல் தொடரலாம் என்கிற நிலை ஏற்பட்டது.

இந்தச் சூழலைச் சமாளிக்க, அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ தலைமையில் நேற்று அமெரிக்காவில் இஸ்ரேல் - லெபனான் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

இந்தப் போர் தொடரக் கூடாது என்பதில் உலக அளவில் பெரும் அழுத்தம் ஈரான் மீதும், அமெரிக்கா மீதும் உள்ளது.

காரணம்...

இந்தப் போரினால் உலக அளவில் மந்த நிலை ஏற்படலாம் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கெனவே, ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியிருப்பதால், பல உலக நாடுகளுக்கு இறக்குமதிகள் சென்று சேரவில்லை. இதனால், உலக நாடுகள் பெருமளவில் தத்தளித்து வருகின்றன.

ஹார்முஸ் ஜலசந்தி
ஹார்முஸ் ஜலசந்தி

இந்த நிலையில், அமெரிக்காவும் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளது.

இது உலக நாடுகளுக்கு இன்னும் தலைவலியைக் கிளப்பியுள்ளது.

இது தொடர்ந்தால், உலக நாடுகள் அமெரிக்கா, ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கினாலும் இறங்கும். உதாரணத்திற்கு, ஐக்கிய ராஜ்ஜியத்தின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் அதிபர் மக்ரோன் 40 நாடுகளை இணைத்து ஹார்முஸ் ஜலசந்தி திறப்பது குறித்து கூட்டம் நடத்த உள்ளார்.

இப்படி பல நாடுகள் கிளம்பி விடக்கூடாது என்றால் அமெரிக்கா மற்றும் ஈரான் உஷாராக வேண்டிய நேரம் இது.

"சினிமாவில் இருக்கக்கூடிய அதே சத்யராஜ், பிரகாஷ் ராஜ் போன்ற கூத்தாடிகள் தானே.!"- குஷ்பு ஆவேசம்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அந்த பரப்புரையில் "வேட்பாளராக ஆக்கப்படுவதற்கு மூன்று நாட்... மேலும் பார்க்க

தமிழகம் சந்தித்த தொங்கு சட்டசபைகள், விஜயகாந்த் வழியில் 'மைனாரிட்டி' ஆட்சிக்கு பாதை போடுகிறாரா விஜய்?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கே நாட்கள்தான் இருப்பதால் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன அரசியல் கட்சிகள்.தமிழகத்தை அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளப் போவது எந்தக் கட்சி? யார் முதல்... மேலும் பார்க்க

”ராகுல்காந்தி சொன்ன அந்த ஒற்றை வார்த்தை”- நெகிழ்ந்த பட்டுக்கோட்டை காங்கிரஸ் நிர்வாகி

காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக துறையூர் உள்ளிட்ட தொகுதிகளில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு ராகுல்காந்தி பிரசாரம் செய்தார். இதற்காக பல மாவட்டங்களைச் சேர்ந்த ... மேலும் பார்க்க

'10 வருஷமா உங்க மனைவிக்கு கிடைக்காத சீட், உங்களுக்கு எப்படி.?'- சுந்தர் சியை சாடிய பிரகாஷ் ராஜ்

மதுரை மத்திய தொகுதி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை ஆதரித்து நடிகர் பிரகாஷ்ராஜ் பரப்புரை மேற்கொண்டிருக்கிறார். அந்தப் பரப்புரையில் சுந்தர் சி குறித்து பேசிய பிரகாஷ் ர... மேலும் பார்க்க

வேஷ்டி - சட்டையில் பிரதமர் கோவையில் பிரசாரம் | Photo Album

தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசாரம் பொதுக்கூட்டம் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல்... மேலும் பார்க்க

"மற்ற நாடுகளை அச்சுறுத்த அவருக்கு எந்த உரிமையும் இல்லை" - ட்ரம்பை சாடிய பிரேசில் அதிபர் லூலா

மற்ற நாடுகளை அச்சுறுத்த அமெரிக்க அதிபருக்கு எந்த உரிமையும் இல்லை என பிரேசில் அதிபர் லூலா ட்ரம்பை சாடியிருக்கிறார். வர்த்தகம் மற்றும் பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய விவகாரங்களில் பிரேசில் அதிபர் லூலாவ... மேலும் பார்க்க