செய்திகள் :

'முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' - மாநகராட்சியில் வெடித்த 'டெண்டர்' விவகாரம்!

post image

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடந்திருந்தது. இந்த கூட்டத்தில் 'லிமிடெட் டெண்டர்' தொடர்பான வாதத்தின் போது துணை மகேஸ் குமார் 'முதல்வருக்கு ஒரு நியாயம்...கவுன்சிலருக்கு ஒரு நியாயமா?' என கொதித்து பேசியிருந்தார்.

மகேஸ் குமார்
மகேஸ் குமார்

சிறுசிறு பணிகளுக்கான லிமிடெட் டெண்டர் முறையை தவெக ஆட்சியமைந்தவுடன் நிறுத்தி வைத்திருந்தனர். இதனால் மாநகராட்சியில் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகளை கூட செய்ய முடியவில்லை என மாமன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறியிருந்தனர்.

10 - 20 லட்சம் மதிப்பிலான லிமிடெட் டெண்டர்களை லோக்கலில் யார் நன்றாக வேலை செய்வார்களோ அவர்களுக்கு கொடுத்து மக்களுக்கு தேவையான வேலைகளை செய்து வந்தோம். ஆனால், இப்போது அப்படி லிமிடெட் டெண்டர்களை விட முடியவில்லை. கவுன்சிலருக்கான வார்டு மேம்பாட்டு நிதியையும் விடுவிக்காமல் இருப்பதால் மக்களுக்கான அடிப்படை பணிகளை கூட எங்களால் செய்ய முடியவில்லை என திமுக, அதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர்கள் குறைகளை கூறியிருந்தனர்.

CM Vijay
CM Vijay

இதுசம்பந்தமாக துணை மேயர் மகேஸ் பேசுகையில், 'என்னுடைய வார்டிலேயே லிமிடெட் டெண்டர் இல்லாமல் பள்ளமான சாலைகளை சரி செய்ய முடியவில்லை. துணை மேயரின் வார்டிலேயே இப்படியா என மக்கள் கேட்கின்றனர். எனக்கு பதில் சொல்ல முடியவில்லை. முதல்வரின் பெரம்பூர் அலுவலகம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது. அதற்கு மட்டும் லிமிடெட் டெண்டர் விட்டீர்களே. அது மட்டும் எப்படி சாத்தியப்பட்டது? முதல்வருக்கு ஒரு நியாயம் கவுன்சிலர்களுக்கு ஒரு நியாயமா?' என்றார். முதல்வரின் பெரம்பூர் அலுவலகம் புனரமைக்கப்பட விடப்பட்ட டெண்டர் கோப்புகளையும் அவையில் எடுத்து காட்டினார்

மாமன்ற கூட்டம்
மாமன்ற கூட்டம்

இதுசம்பந்தமாக பதிலளித்த ஆணையர் சமீரன், 'லிமிடெட் டெண்டர்கள் எங்கேயும் நிறுத்தி வைக்கப்படவில்லை. 10.06.2026 அன்று லிமிடெட் டெண்டர்களுக்கான வரைமுறைகள் வெளியிடப்பட்டது. அதை பின்பற்றி லிமிடெட் டெண்டர்களை விட எந்தத் தடையும் இல்லை' என்றார்

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க