செய்திகள் :

'முதல்வர் தலைமையில் அமைச்சருக்கு டும் டும் டும்; டென்ஷன் மோடில் பொதுச் செயலாளர்!' - தவெக அப்டேட்ஸ்!

post image

துணை சபாநாயகர், கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் என சர்ச்சைகளில் சிக்கி சுழன்று கொண்டிருக்கிறது தவெக அரசு. இந்நிலையில், தவெக கட்சிக்குள் என்ன நடக்கிறதென பனையூர் வட்டாரத்தில் பேச்சுக் கொடுத்தோம்.

பர்வேஸ்
பர்வேஸ்

அமைச்சருக்கு டும்..டும்

தவெக முகாமில் ஒரு திருமணத்துக்கான வேலைகள் ஜரூராக நடந்துகொண்டிருக்கிறது. புதுக்கோட்டையை சேர்ந்த அமைச்சர் பர்வேஸ்தான் புது மாப்பிள்ளை. சிறு வயதிலிருந்தே மக்கள் இயக்கம் மூலம் வளர்ந்து வந்தவர் என்பதாலும் பொதுச்செயலாளர் ஆனந்துக்கு நெருக்கமானவர் என்பதாலும் முதல்வரின் தலைமையில்தான் திருமணம் செய்ய வேண்டுமென முடிவெடுத்திருக்கிறார் பர்வேஸ்.

நவம்பர் கடைசி வாரத்தில் சென்னையில் பிரமாண்டமாக இந்த திருமணம் நடைபெறவிருப்பதாக பனையூர் வட்டாரத்தினர் கிசுகிசுக்கின்றனர். 'மாப்பிள்ளை' பர்வேஸ்!

கடந்த வாரம் தி.நகரில் உள்ள வாய்ஸ் ஆப் காமன் அலுவலகத்தில் தவெக செய்தித் தொடர்பாளர்கள் கூட்டத்தை அமைச்சர் ராஜ்மோகன் நடத்தியிருந்தார். இந்தக் கூட்டத்தில் அரசை நோக்கி வரும் சர்ச்சைகளுக்கு எப்படி பதில் கொடுக்க வேண்டுமென பேசப்பட்டிருக்கிறது.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

கூட்டம் என்னவோ சுமூகமாகத்தான் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டம் குறித்து பொதுச்செயலாளர் ஆனந்துக்கு தகவலே சொல்லப்படவில்லை எனக் கட்சி வட்டாரத்தினர் கூறுகின்றனர். 'கட்சி சம்பந்தமான கூட்டம்னா...கட்சி ஆபிஸ்ல நடத்த வேண்டிதான, ஏன் வாய்ஸ் ஆப் காமன் ஆபிஸ்ல நடத்துறாங்க' என தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆனந்த் பொரிந்து தள்ளியிருப்பதாக உள்விவகாரங்களை அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஆனந்த் ஆதரவு செய்தித் தொடர்பாளர்களை அழைத்து, 'ஏன் இப்படியொரு கூட்டம் நடந்தது என்பதை தெரிவிக்கவில்லை?' என கண்டிக்கவும் செய்திருக்கின்றனர் என்கின்றனர் பனையூர் வட்டாரத்தினர்.

பனிப்போர் ஸ்டார்ட்ஸ்!

செய்தித் தொடர்பாளர்களுக்கு கட்டுப்பாடு!

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம் பூதாகரமாகியிருக்கும் சூழலில் செய்தித் தொடர்பாளர்கள் யாரையும் எந்தச் சேனலின் விவாதத்துக்கு அடுத்த ஒரு வாரத்துக்கு செல்ல வேண்டாமென தலைமை உத்தரவிட்டிருக்கிறதாம். கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரத்துக்காகத்தான் இந்தக் கட்டுப்பாடா அல்லது வேறெதுவும் விவகாரமா? என செய்தித் தொடர்பாளர்கள் குழம்பிப் போயிருக்கின்றனர்.

புஸ்ஸி ஆனந்த்
புஸ்ஸி ஆனந்த்

அதிருப்தியில் தவெக இஸ்லாமியர்?

தவெகவின் அமைச்சரவையில் இஸ்லாமியர்கள் இருந்தாலும், கட்சியிலும் ஆட்சி நிர்வாகத்திலும் இஸ்லாமியர்களுக்கு உரிய முக்கியத்துவம் கிடைப்பதில்லை என கட்சிக்குள் இருக்கும் இஸ்லாமிய புள்ளிகள் வருந்துகின்றனராம். குறிப்பாக எம்.எல்.ஏ ஒருவரே தனிக்கட்சியை விட்டுவிட்டெல்லாம் இங்கே வந்தேன். ஆனால், முஸ்லிம் லீகுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை நமக்கு கொடுப்பதில்லை. வாரியத் தலைவர் பதவிகளையும் நம்முடைய சமூகத்துக்கு எதிர்பார்த்தோம். ஆனால், திமுக ஆட்சியில் நமது சமூகத்துக்கு கிடைத்த பிரதிநிதித்துவம் கூட இப்போது கிடைக்கவில்லை' என போனை போட்டு புலம்புகிறாராம். அந்த எம்.எல்.ஏ கொஞ்சம் முன்னுக்கு பின்னாக பேசக் கூடியவர் என்றாலும் அவர் சொல்லும் காரணங்களில் நியாயமிருக்கிறது என்கின்றனர் கட்சியின் இஸ்லாமிய புள்ளிகள் சிலர்.

உஷாரான மதுரை தவெக!

மதுரை நகைக்கடை கொள்ளை வழக்கில் இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி என்பவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இவர் தவெகவை சேர்ந்தவர் என ஒரு தகவல் சமூகவலைதளங்களில் பரவ மதுரை தவெகவினர் அலறிவிட்டனர். 'இல்லாத கேஸையெல்லாம் நம் மீது எழுத பார்க்கிறார்கள்' என உஷாரானவர்கள் தவெக எம்.எல்.ஏ எஸ்.ஆர்.தங்கபாண்டியோடு சென்று அவதூறு பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

``காவல் நிலையத்தில் ரீல்ஸ் எடுக்க எந்த சட்டம் அனுமதி அளிக்கிறது?" - அதிமுக எம்பி இன்பதுரை கேள்வி

கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில், நள்ளிரவில் ஆய்வுக்கு சென்று பெண் காவலரிடம் மிரட்டும் தொனியில் பேசும் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத... மேலும் பார்க்க

'ஒரு கம்யூனிஸ்ட்காரர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறார்.!'- சு.வெங்கடேசனை விமர்சித்த நீதிபதி சுவாமிநாதன்

சென்னை பாரதிய வித்யா பவனில் நடைபெற்ற நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன், " 'பெரியார் அறிவுலகம்' என்று சொல்லப்படுகிற அந்த நூலகங்களின் அடுக்குகளில் எல்லாம், இதுபோன்ற 'அகல... மேலும் பார்க்க

விளையாடும்போது மாயமான மூன்று சிறுவர்கள்; ஏரியில் சடலங்களாக மீட்பு - கள்ளக்குறிச்சி அதிர்ச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் வசித்து வரும் தங்கமணி என்பவரின் மகன்களான 11 வயது இமானுவேல் மற்றும் ஒன்பது வயது ஷாம் ஆபிரகாம் இருவரும், தோட்டப்பாடி பகுதியிலுள்ள விளையாட்டு மைதானத்திற்கு நே... மேலும் பார்க்க

முதுமலையில் புலியை விரட்டிச் சென்ற சர்ச்சையும், அமைச்சர் வன்னிஅரசின் விளக்கமும்! என்ன நடந்தது?

சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு அண்மையில் நீலகிரி மாவட்டத்திற்கு சென்றிருக்கிறார். மசினகுடி, பொக்காபுரம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்... மேலும் பார்க்க

`அமைச்சர் நிழ்ச்சியில் மின்தடை; அதற்கு திமுக தொழிற்சங்க அதிகாரிமீது நடவடிக்கையா?' - தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் ஜெகதீஷ்வரி பங்கேற்ற நிழ்ச்சியின் போது மின்தடை ஏற்பட்டதால், அதை காரணம் காட்டி இளமின் பொறியாளர் அண்ணாதுரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருப்பது கண்டனத்திற்... மேலும் பார்க்க

காவல் நிலையத்தில் `மிரட்டல்' தொனியில் ரீல்ஸ்; கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் வீடியோ சர்ச்சை!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சரும் த.வெ.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளருமான வ.காந்திராஜ் தனது அரக்கோணம் தொகுதிக்கு உட்பட்ட தக்கோலம் காவல் நிலையத்தில் ஆய்வு என்ற பெயரில் நள்ளிரவில் உள்ளே சென... மேலும் பார்க்க