செய்திகள் :

``முதல்வர் விஜய் எனக்கு ப்ராமிஸ் செய்திருக்கிறார்; அந்நாளுக்காக காத்திருக்கிறோம்!" - நடிகர் பிரபு

post image

'நடிகர் திலகம்' பத்ம பூஷன் சிவாஜி கணேசன் நினைவு நாள் ஆண்டுதோறும் ஜூலை 21 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2001-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி காலமான நடிகர் திலகத்தின் நினைவைப் போற்றும் வகையில் சென்னை அடையாறில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையுடன் தமிழக அரசால் கட்டப்பட்ட இந்த நினைவகத்தில அவரது அரிய புகைப்படங்கள் மற்றும் திரைப்படங்களின் தொகுப்புகளைக் கொண்டுள்ளது. அவரது நினைவு நாளன்று ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் இந்த மணிமண்டபத்திற்குச் சென்று மரியாதை செலுத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நினைவு தினம்
நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் நினைவு தினம்

அதன் அடிப்படையில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் பிரபு, தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் ராஜ் மோகன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டு நடிகர் சிவாஜி கணேசனின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதைத் தொடர்ந்து நடிகர் பிரபு செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, ``சிவாஜி கணேசன் அவர்களின் 25-ம் ஆண்டு நினைவு நாளில் வருகை தந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

குறிப்பாக, குடும்பத்தினரின் ஆசை வேண்டுகோளை ஏற்று இவ்விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் தம்பிக்கும் நன்றி. 2028-ம் ஆண்டு நடிகர் திலகம் அவர்களின் 100-வது பிறந்தநாள் (நூற்றாண்டு விழா) வரவிருக்கிறது. இவ்விழாவை முதலமைச்சர் தம்பி விஜய் அவரின் தலைமையில், தவெக அரசு மிகச் சிறப்பாக முன்னின்று நடத்தும் என்று பிராமிஸ் செய்திருக்கிறார். அந்நாளுக்காக நாங்கள் அனைவரும் காத்திருக்கிறோம்." என்றார்.

அமைச்சர் ராஜ்மோகன்
அமைச்சர் ராஜ்மோகன்

தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ் மோகன், ``காமராஜரின் பக்தனாகவும், கலைஞரின் வாழ்நாள் நண்பனாகவும் திகழ்ந்த கலைத்தாயின் செல்வத் திருமகன் சிவாஜி கணேசன் ஒரு மாமனிதர். பாரதியாரையோ அல்லது கப்பலோட்டிய தமிழனையோ நேரில் பார்க்காத தலைமுறைக்கு, அவர்களைத் தன் நடிப்பால் கண்ணெதிரே நிறுத்தியவர் அவர். திரையுலகமும் சரித்திரமும் வியக்கும் வண்ணம், தமிழ்நாட்டின் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாக இந்த நூற்றாண்டு விழா அமையும். இளைய திலகம் பிரபு அவர்களின் குடும்பத்தினருக்கும், ரசிகப் பெருமக்களுக்கும் இந்த செய்தி மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது." என்றார்.

"டாஸ்மாக்கில் பாட்டலுக்கு 10 ரூபாய் வாங்குவது குறைந்துள்ளது" - அமைச்சர் விக்னேஷ் தகவல்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்பது இன்... மேலும் பார்க்க

"16 வருச உழைப்புக்குக் கிடைச்ச அங்கீகாரம்" - வீட்டு வசதி வாரியத் தலைவர் சிவா நெகிழ்ச்சி

வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தவெக நிர்வாகியான சிவாவை நியமித்து நியமன ஆணையையும் வழங்கியிருக்கிறார் முதல்வர் விஜய்.Sivaசிவா, தவெகவின் பெரம்பூர் தொகுதி மாவட்டச் செயலாளர். சென்னையிலேயே அதிகமாக பெரம்பூர... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``தவெக மீது சேறு வாரி இறைப்பதை நிறுத்திக்கொள்ளுங்கள்" - தவெக

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தே... மேலும் பார்க்க

"முன்னாள் எம்எல்ஏ வீட்டில் ஒரு வாரமாக கரண்ட் கட்" - கலெக்டரிடம் புகார் அளித்ததும் பரபரத்த அதிகாரிகள்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் உறுப்பினராக 2006 முதல் 2011 வரை இருந்து வந்தவர் ஜான்ஜோசப். சி.பி.எம் கட்சி முன்னாள் எம்.எல்.ஏ-வான இவர் தற்போது சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். அவ... மேலும் பார்க்க

டெல்லி மாணவர்கள் போராட்டம்: ``ஒரு தலைமுறையின் ஒட்டுமொத்த கோபமாக மாறியிருக்கிறது" - பா.ரஞ்சித்

நீட் உள்ளிட்ட அரசுத் தேர்வுகளின் வினாத்தாள் கசிவு, தேர்வு குளறுபடி என மத்திய அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து விமர்சனத்துக்குள்ளாகின.இந்த நிலையில், காக்ரோச் ஜனதா பார்ட்டி எனும் இளைஞர் அமைப்பு, அரசுத் தேர... மேலும் பார்க்க