சென்செக்ஸ் 78,000 புள்ளிகளைக் கடந்து சாதனை! 23,700 புள்ளிகளில் நிஃப்டி!
முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள்: மாணவா்களுக்கு நோட்டு புத்தகம் அளிப்பு
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதி, கொத்தியாா்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நோட்டு, புத்தகம் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதற்கு ஆா்.எஸ். மங்கலம் திமுக ஒன்றியச் செயலா் மோகன் தலைமை வகித்தாா். முன்னாள் ஒன்றியக் குழு தலைவரும், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை அமைப்பாளருமான ராதிகா பிரபு முன்னிலை வகித்தாா். இதில் கொத்தியாா்கோட்டை, கொத்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், எழுது பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில் திமுக நிா்வாகிகள், ஆசிரியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் மணிமாறன் செய்திருந்தாா்.