செய்திகள் :

முதல் இரண்டு முயற்சிகளிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - கல்வியாளர் விளக்கம்!

post image

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது.

'நீங்களும் ஆகலாம் IAS' என்ற தலைப்பிலான இந்த இலவசப் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி தூத்துக்குடியில் உள்ள V.O சிதம்பரம் கல்லூரியில் நடக்க இருக்கிறது.

UPSC/TNPSC
UPSC/TNPSC

அதனுடன் ஒரு வருட இலவசப் பயிற்சிக்கான ஸ்காலர்ஷிப் தேர்வும் நடக்கிறது. இந்த நிகழ்வில் Dr.M. ரவி IPS, (DGP முன்னாள் காவல் ஆணையர் தாம்பரம் காவல் ஆணையரகம்) சிறப்புரை ஆற்ற இருக்கிறார். அதே சமயம் திரு. ஆதில் பெய்க் (சிவில் சர்வீஸஸ் தேர்வு பயிற்சியாளர் - King Makers IAS அகாடமி), King Makers IAS அகாடமியின் இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்க உரையை ஆற்ற இருக்கிறார்கள்.

இந்நிலையில் முதல் இரண்டு முயற்சிகளிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? என்பது குறித்து நம்மிடம் பேசிய ஆதில் பெய்க், "7 முதல் 8 சதவிகித மாணவர்கள்தான் முதல் முயற்சிலேயே தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள்.

அதேபோல 10 லிருந்து 15 மாணவர்கள்தான் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெறுகிறார்கள். மூன்றாவது மற்றும் நான்காவது முயற்சியில் கிட்டத்தட்ட 25 சதவிகித மாணவர்கள் தேர்ச்சி பெறுகிறார்கள்.

பொதுவாக மாணவர்கள் 1 வருடம் UPSC தேர்வுக்கு நன்றாக தயாராகி தேர்வு எழுதுவார்கள். ஆனால் சில நேரங்களில் தேர்ச்சி பெறாமல் போய்விடுவார்கள். எவ்வளவு நன்றாக படித்திருந்தாலும் நிறைய போட்டியாளர்கள் இருப்பதால் முதல் முயற்சியில் தேர்ச்சி பெறுவது கொஞ்சம் கஷ்டம்தான்.

 திரு. ஆதில் பெய்க்
திரு. ஆதில் பெய்க்

ஆனால் நிச்சயமாக நல்ல வழிகாட்டுதல், கடின உழைப்பு மற்றும் உத்தியோடு செயல்பட்டால் இரண்டாவது முயற்சியில் தேர்ச்சி பெற்றுவிடலாம். முதல் மூன்று முயற்சிகளில் தேர்ச்சி பெறுவது எப்படி என்று நினைக்காமல், முதல் இரண்டு முயற்சிகளில் எப்படி தேர்ச்சி பெறுவது என்று மாணவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒரு மாணவர் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைத்தார் என்றால், கல்லூரி படிக்கும்போதிருந்தே தயாராக வேண்டும். கல்லூரி முடித்த பிறகு ஒரு வருட பயிற்சி எடுத்துக்கொண்டு தேர்வு எழுதுகிறார்கள்.

அப்படி எழுதினால் தேர்ச்சி பெறுவது கடினம். கல்லூரி படிக்கும்போதே தயாராக வேண்டும் என்று நினைக்கும் மாணவர்கள் முதலில் பள்ளிக்கூடப் புத்தகங்களைப் படிக்க வேண்டும். இந்தத் தேர்வுகளில் வெல்வதற்கு அரசியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல் என 4 சப்ஜட்டுகள் தான் மிக முக்கியமானது.

கல்லூரி படிக்கும் முதல் வருடத்தில் 6 ஆம் வகுப்பில் இருந்து 12 வகுப்பு வரை உள்ள புத்தகங்களை படிக்க வேண்டும். அதன் பிறகு இரண்டாம் வருடத்தில் பயிற்சி மையங்களில் சேர்ந்து படிக்க ஆரம்பிக்கலாம். மூன்றாவது வருடத்தில் தேர்வு எழுத முயற்சிக்கலாம். சரியான வழிகாட்டுதலும், கடின உழைப்பும் இருந்தால் நிச்சயம் தேர்ச்சி பெறலாம்" என்றார்.

ஆனந்த விகடன், King Makers IAS அகடாமி நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இது போன்ற இலவசப் பயிற்சி முகாமினைப் பல ஆண்டுகளாக நடத்தி வருவதன் மூலம், எண்ணற்ற போட்டித் தேர்வாளர்கள் பயனடைந்து வருகிறார்கள்.

இந்தப் பயிற்சி முகாமிற்கு முன்பதிவு செய்ய 044- 66802997 என்ற எண்ணிற்கு மிஸ்ட்கால் கொடுக்கவும். அப்படி இல்லையென்றால் இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புகின்றவர்கள் மேற்கண்ட விண்ணப்பத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம்.

போட்டி தேர்வுகளுக்கு முழு போர்ஷனையும் படிக்க வேண்டுமா?- விளக்கும் King Makers IAS சத்யஶ்ரீ பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

+2 முடித்தவங்களுக்கு Golden Chance; உயர்கல்வித் தேர்வுக்கு முழுமையான வழிகாட்டல்

இந்த,நிகழ்ச்சியில் பங்கேற்க இங்கே கிளிக் செய்யவும்https://forms.gle/mkX53JaTLuszofAt8கல்வி விகடனும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையமும் இணைந்து வரும் 25.04.2026 சனிக்கிழமை, '+2-வுக... மேலும் பார்க்க

UPSC / TNPSC: தூத்துக்குடியில் இலவசப் பயிற்சி முகாம் - அனுமதி இலவசம்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து தூத்துக்குடியில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறத... மேலும் பார்க்க

'இனி மூன்று இல்லை; இரண்டு தான்' - CA தேர்வில் புதிய மாற்றங்கள் என்னென்ன?

இந்தியாவிலேயே மிகவும் கடினமான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் 'பட்டயக் கணக்காளர்' (CA) தேர்வு. இதில் ஒரு மிகப்பெரிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) கல்வியின் ... மேலும் பார்க்க

UPSC/ TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; ஆலோசனைகள் வழங்கும் கல்வியாளர் ஆதில் பெய்க்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது... மேலும் பார்க்க

UPSC / TNPSC: கோயம்புத்தூரில் இலவசப் பயிற்சி முகாம்; ஆலோசனைகள் வழங்கும் King Makers பூமிநாதன்

'UPSC/TNPSC குரூப் -1, 2 தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆனந்த விகடனும் King Makers IAS அகாடமியும் இணைந்து கோயம்புத்தூரில் ஓர் இலவசப் பயிற்சி முகாமை நடத்தத் திட்டமிட்டிருக்கிறது... மேலும் பார்க்க