செய்திகள் :

''முன்வரிசையில் நடிகை... வெட்கமே இல்லையா முதல்வரே?'' - முரசொலி நாளிதழ் கடும் தாக்கு

post image

கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஜார்ஜ் கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் விஜய் தேசியக் கொடியை ஏற்றியிருந்தார்.

இதை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் இன்று விமர்சித்து தலையங்கம் எழுதியிருக்கின்றனர்.

முரசொலி
முரசொலி

முரசொலியின் அந்தத் தலையங்கத்தில் கூறப்பட்டிருப்பதாவது, ''சுதந்திர தினத்தன்று கொடி ஏற்றிய முதலமைச்சர் விஜய்யின் மானம் காற்றில் பறந்தது. வெட்கமோ, கூச்சமோ இல்லாமல் ஒரு நடிகையை முன்வரிசையில் உட்கார வைத்து, இருவரும் மாறி மாறி சல்யூட் வைத்துள்ள காட்சியை அவருக்கு வாக்களித்தவர்களாலேயே சகிக்க முடியவில்லை.

அசிங்கத்தையும் அருவருப்பையும் பட்டவர்த்தனமாகச் செய்வதன்மூலமாக அதனை நியாயப்படுத்த நினைக்கிறவர்தான் இன்று தமிழ்நாட்டுக்கு முதலமைச்சராக வந்துள்ளார்.

மூன்றே மாதங்களில் அவருக்கு தனது செல்வாக்கு நிலைக்குமா, பதவி நிலைக்குமா என்ற பயம் வந்துவிட்டது. அதையும் அவர் உரையே காட்டிக் கொடுத்துவிட்டது.

விஜய்
விஜய்

சுதந்திர தின விழாவுக்கு ஒரு நடிகையை அழைத்துவந்து, அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதை விஜய் ரசிகர்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லையே... மக்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

சுதந்திர தினத்தன்று விடுதலைப் போராட்ட வரலாறுகளை ஊடகங்கள் வெளியிடும். ஆனால் இம்முறை நடிகை ஒருவருடன் முதலமைச்சர் இதுவரை ஐந்து முறை ஒன்றாக வெளியில் வந்துள்ளார் என்று வரலாறு போடும் வேலையைப் பார்க்கிறோம்'' எனக் கூறப்பட்டிருக்கிறது.

``5 வருடங்களில் வர வேண்டிய ஆட்சி மீதான வெறுப்பு 100 நாட்களிலே..." - மா.சுப்ரமணியன் காட்டம்

முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவுநாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் பல்வேறு புகழஞ்சலி மற்றும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. இதன் இறுதி நிகழ்வாக சோழிங்கநல... மேலும் பார்க்க

பாஜக-வுடன் உறவைப் புதுப்பித்த ஆர்எஸ்எஸ்; 6 ஆண்டுகளுக்குப் பிறகு ராம் மாதவிற்கு பாஜகவில் முக்கிய பதவி

பா.ஜ.கவின் புதிய தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்று 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் கட்சியின் புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவிக்கப்படாமல் இருந்தது. நீண்ட இழுபறிக்குப் பிறகு புதிய நிர்வாகிகள் பட்டியல் அறிவ... மேலும் பார்க்க

VCK: கட்டுக்கடங்காத கூட்டம், தவெக கூட்டணி உறுதி, திருமா பேச்சு - தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு Bytes

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்காக காலையில் இருந்தே தொண்டர்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். இன... மேலும் பார்க்க

'கேரளா அல்லா... இனி 'கேரளம்' ஆனு' - கேரளம் - பெயர் மாற்றத்திற்குக் காரணம் என்ன?

2024-ம் ஆண்டு ஜூன் மாதம், கேரள சட்டமன்றத்தில், அந்த மாநிலத்தின் பெயர் 'கேரளம்' என்று மாற்றப்பட வேண்டும் என்கிற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், மத்திய அமைச்சரவை இதற்கு ... மேலும் பார்க்க

"டிரக்கிற்குள் ஒளியும் நிலைமை வராதபடி மொத உங்க பாதுகாப்பை உறுதியாக்குங்க" - ட்ரம்பைச் சீண்டும் ஈரான்

'ஹார்முஸ் நீர்ச்சந்தியை அமெரிக்காவின் பிராந்தியமாக மாற்றப் போகிறோம்' என்கிற பேச்சை முன்னெடுத்திருக்கிறது அமெரிக்கா. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்பும் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிற... மேலும் பார்க்க

CJP பாணியில் ‘Dimagi Naxal Party’ - ஒரே நாளில் 1.6 லட்சம் பேர் ஃபாலோ; ஆனால் இப்போது? என்ன ஆனது DNP?

சமூக வலைதளங்களில் புதிதாக உருவான ஒரு Instagram பக்கம், தொடங்கிய ஒரே நாளில் 1.6 லட்சத்துக்கும் அதிகமான ஃபாலோயர்களை பெற்றது. அதைவிட ஆச்சரியம்... வேகமாக வைரலான அந்தப் பக்கம், அதே வேகத்தில் தற்போது காணாமல... மேலும் பார்க்க