பாலியல் வழக்கில் கைதான விவகாரம்: யூடியூபர்கள் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு!
முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலைய பகுதிகளில் நாளை மின் தடை
முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் புதன்கிழமை மின்சாரம் இருக்காது னெ அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கும்பகோணம் வடக்கு உதவி செயற்பொறியாளா் சி. இளஞ்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முள்ளுக்குடி குறிச்சி துணை மின் நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், குறிச்சி, கீழக்காட்டூா், காகிதபட்டறை, பந்தநல்லூா், கோணுலாம்பள்ளம், முள்ளங்குடி, செருகுடி, புழுதிகுடி, நெய்வாசல், ஆரலூா், பட்டவெளி, கீழமனகுடி, கயலூா், திருக்கோடிகாவல், குனதலபாடி, துகிலி, பாஸ்கரராஜபுரம், கதிராமங்கலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்சாரம் இருக்காது என்று கூறியுள்ளாா்.