ரேஷன் அரிசி கடத்தல்; தட்டிக் கேட்ட மாற்றுத்திறனாளி சர்வதேச வீராங்கனைமீது தாக்குத...
"மூக்குத்தி அம்மன் 2 பார்த்து சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது" - நடிகை குஷ்பு பகிர்வு
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, நயன்தாரா, ரெஜினா கான்ஸ்ரா, குஷ்பு, சினேகா நடிகர்கள் யோகிபாபு, கே.ஜி.எப்.கருடா ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது மூக்குத்தி அம்மன் - 2.
இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு இயக்குநர் சுந்தர்.சி நடிகை குஷ்பு சத்யம் திரையரங்குக்கு வருகை தந்திருந்தனர். திரைப்படம் பார்த்துவிட்டு வெளியே வந்த நடிகை குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ``மூக்குத்தி அம்மன் 2 படத்தை பெண்களும், குழந்தைகளும் விரும்பிப் பார்க்கிறார்கள். சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது. அதுவே எங்களுக்கு பாசிட்டிவ் வைப்-ஆக தெரிகிறது.

சுந்தர் சி படத்துக்கு குடும்பம் குடும்பமாக வருவார்கள் என்பார்கள். அது இப்போதும் நடந்திருப்பதில் மகிழ்ச்சி. அதிகாலை 6 மணி ஷோவுக்கு முதல்வர் அனுமதி கொடுத்திருக்கிறார். அவருக்கும், அமைச்சர் ராஜ் மோகனுக்கும் மிக்க நன்றி. திரைத்துறையினர் நன்றாக இருக்க வேண்டும் என முதல்வர் விரும்புகிறார்.
இந்த அறிவிப்பு திரைத்துறையினர் அனைவருக்கும் பெரிய பிளஸ்ஸாக இருக்கிறது. மூக்குத்தி அம்மன் முதல் பாகத்துக்கும் இரண்டாம் பாகத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதில் அந்தப் படத்தில் இருந்த ஊர்வசி, நயன்தாரா இருவர் மட்டும்தான் இருக்கிறார். இதைத்தாண்டி முதல் படம் வேறு கதை, இரண்டாம் பாகம் வேறு கதை" என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...


















