செய்திகள் :

`மேகேதாட்டுவில் அணை கட்டக் கூடாது!’ - புதுச்சேரி சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறிய தீர்மானம்

post image

மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், தி.மு.க எம்.எல்.ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், த.வெ.க ஆதரவு எம்.எல்.ஏ நேரு, ல.ஜ.க எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.

அதை அரசுத் தீர்மானமாக ஏற்றுக்கொண்டு முன்மொழிந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ``புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாற்றாகவும் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும், அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சட்டப்பேரவை தனது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்கிறது.

புதுச்சேரி சட்டப்பேரவை | முதல்வர் ரங்கசாமி

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை, புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் மேகேதாட்டுவில் அணை கட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

அதனால் இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மேலும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க, மத்திய அரசு உடனடி தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காரைக்கால் பகுதி விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதென்று இந்த சட்டப்பேரவை ஒரு மனதாக தெரிவித்துக் கொள்கிறது" என்றார்.

மணல் கடத்தலில் ரூ.1000 கோடி ஊழல்? - மராத்தா இட ஒதுக்கீடு போராட்டக்காரர் மனோஜ் ஜராங்கே மீது புகார்

மகாராஷ்டிராவில் மராத்தா இட ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தி வருபவர் மனோஜ் ஜராங்கே பாட்டீல். ஏற்கனவே பல முறை இதற்காக உண்ணாவிரதம் இருந்துள்ளார். தற்போது மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது மனோ... மேலும் பார்க்க

"தியாகி இமானுவேல் சேகரன், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காக தன் உயிரைத் தந்தவர்" - குடியரசு துணைத்தலைவர்

"தியாகி இமானுவேல் சேகரனைப் போன்ற தேசிய உள்ளம் கொண்ட மகத்தான மனிதர்களைப் போற்றுவது இந்தத் தேசத்திற்கே பெருமை" என்று குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.இமானுவேல் சேகரன் நினைவிடம்வி... மேலும் பார்க்க

“சுயநலத்தை மறுத்து நாட்டின் நலனைப் பார்த்தால் தடை?” - BRICS-ல் ட்ரம்ப் மீது புதின் மறைமுகத் தாக்கு!

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின். இந்தியப் பிரதமர் மோடி உடனான தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பிரிக்ஸ் வணிக மன்றத்தின் தலைவர்கள் அமர்வில் ப... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் அசைவ உணவு சர்ச்சை: கோயிலில் மீன் வறுவல் சாப்பிட்ட முதல்வர்; என்ன சொல்கிறது பாஜக?

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் ... மேலும் பார்க்க

BRICS: "ஒரு நாட்டின் பொருளாதாரப் பாதுகாப்பும், பிராந்தியப் பாதுகாப்பும் தனித்தனியல்ல" - ஈரான் அதிபர்

டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்துகொள்ளப் பல்வேறு உலகத் தலைவர்கள் இந்தியாவிற்கு வந்திருக்கிறார்கள். அதில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானும் ஒருவர். இன்று மாநாட்... மேலும் பார்க்க

"பிரிக்ஸ் தொழில்முறைக் கவுன்சிலிடம் எனக்கு 'மூன்று' வேண்டுகோள்கள்!" - BRICS மாநாட்டில் மோடி பேச்சு

தற்போது டெல்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு உலகத் தலைவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டு பிரிக்ஸ் தலைமை சுழற்சி முறையில் இந்தியாவிற்கு வந்துள்ளதால், இந... மேலும் பார்க்க