செய்திகள் :

"மேடையில் அமர வேண்டாம்" - தொண்டாமுத்தூரில் கண் சிவந்த செந்தில் பாலாஜி; கலக்கத்தில் உடன்பிறப்புகள்

post image

திமுக கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடித்தாலும் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை அங்கு வெற்றிபெற தீவிரம் காட்டி வருகிறது. திமுக மேற்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

கோவை மாவட்டத்தில் திமுக தொகுதிவாரியாக தேர்தல் அலுவலகங்களைத் திறந்து வருகிறது. இந்நிலையில் தொண்டாமுத்தூர் தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகம் குனியமுத்தூர் பகுதியில் நேற்று திறக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய செந்தில் பாலாஜி, “2026 சட்டமன்றத் தேர்தலுக்காக நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி அவர்களை நம் வாக்காளர்களாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் வெல்லும்.

தொண்டாமுத்தூர் தொகுதி
தொண்டாமுத்தூர் தொகுதி

2021 சட்டமன்றத் தேர்தலில் கோவையில் ஒரு தொகுதியில் கூட நாம் வெல்லவில்லை. ஆனாலும் முதலமைச்சர் அதிகமாக வந்ததும், அதிக திட்டங்களைக் கொடுத்ததும் கோவை மாவட்டத்துக்குத்தான். 

கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளையும் வென்று கொடுப்பதுதான் முதலமைச்சருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். முக்கியமாக தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றோம் என்ற சரித்திர சாதனையை உருவாக்க வேண்டும்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி

மேடையில் உள்ள நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்றால் கீழே அமர வேண்டும். அதேபோல கீழே இருப்பவர்கள் நன்கு பணியாற்றினால் அவர்கள் மேடைக்கு வரலாம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் கட்சிக்காக ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று எச்சரிக்கிறேன்” என்றார்.

Budget 2026: ``இந்தியாவின் சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் குறிப்பிடும்படி எதுவும் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.இந்த நிலையில் பட்ஜெட்டை வரவ... மேலும் பார்க்க

புதுச்சேரி போலி மருந்து முறைகேடு வழக்கு: "சிபிஐயின் மௌனத்திற்குக் காரணம் இதுதான்" - நாராயணசாமி பகீர்

புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரியில் தற்போது நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி முழுமையாக ஊழலில் சிக்கித் தவிக்கிறது.முதலமைச்சர் முதல் அனைத்து அம... மேலும் பார்க்க

Budget 2026: இனி 'இதற்கு' வரி இல்லை, குறையும் TCS, புதிய சட்டம் அமல்; வரி அறிவிப்புகள் என்னென்ன?

2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் வருமான வரி குறித்து வெளியாகி உள்ள முக்கிய அறிவிப்புகள்...> வருகிற ஏப்ரல் 1-ம் தேதி முதல், புதிய வருமான வரிச் சட்டம் அமலுக்கு வர உள்ளது.> எளிய வருமான வர... மேலும் பார்க்க

Budget 2026: தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம் - தேர்தல் மாநிலங்களுக்கு அறிவிப்புகள் என்னென்ன?

இந்த ஆண்டு பட்ஜெட்டில் பெரிய அறிவிப்புகள் எதுவும் இல்லை. 2026-ம் ஆண்டு தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களுக்கு என்ன... மேலும் பார்க்க

Union Budget: 2019 டு 2026... நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்த கால நேரம்! ஒரு டைம்லைன்

தொடர்ந்து ஒன்பதாவது முறையாக மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இன்று அவர் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை கிட்டத்தட்ட 1 மணிநேரம் 30 நிமிடங்கள... மேலும் பார்க்க

"விஜய் வாங்கும் சம்பளம் ஒயிட்டில் எவ்வளவு? கருப்பில் எவ்வளவு?" - திண்டுக்கல் சீனிவாசன் கேள்வி

திண்டுக்கல்லில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், “விஜய் அரசியலுக்கு வருவதில் எங்களுக்கு எந்தப் பொறாமையும் கிடையாது. அவர் கொடுக்கும்... மேலும் பார்க்க