`அப்பாவை அரசியலுக்கு வராதனு சொன்னார் எம்.ஜி.ஆர்; விஜய் சார் என்னை அரசியலுக்கு வர...
'மேலும் மேலும் நல்லது செய்யணும்' - விஜய் பதவியேற்பு விழாவில் கலைஞரின் பேத்தி கயல்விழி
இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் மு.க.அழகிரியின் மகள்... கலைஞரின் பேத்தி கயல்விழி கலந்துகொண்டார். அங்கு தொலைகாட்சி சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில்...
"புதிய வரலாறு படைத்திருக்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு. மேலும் மேலும் நல்லது செய்யணும். ரொம்ப ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இளைஞர் வந்திருக்கிறார். நிச்சயமா நல்லது செய்வார் என்று 100 சதவிகிதம் நம்புறேன்.
நிஜமாகவே ரொம்ப கஷ்டப்பட்டு போராடி வெற்றி பெற்றிருக்காரு. அவருடைய போராட்டத்திற்கு நல்லது நடக்கும். இதற்காக தமிழக மக்களுக்கும், அவருடைய தோழமை கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.














