செய்திகள் :

"மோடியின் வாயைப் பூட்டி, சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது" - பிருந்தா காரத் காட்டம்

post image

கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் தீவிரம் அடைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் கேரளாவில் முதல் ரவுண்ட் பிரசாரம் மேற்கொண்டனர்.

இரண்டாம் கட்டமாக அடுத்தும் பிரசாரத்துக்கு வர உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தின்போது பா.ஜ.க 'ஏ' டீம் எனக்கூறி சி.பி.எம், காங்கிரஸ் கட்சிகளை அட்டாக் செய்தார்.

ராகுல் காந்தி பிரசாரத்தின்போது சபரிமலை தங்கம் கொள்ளை பற்றி பிரதமர் மோடி மறந்துவிட்டார் எனவும், கம்யூனிஸ்ட் ஆட்சி தொடர வேண்டும் என மோடி விரும்புவதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ரப்பருக்கு அடிப்படை ஆதாரவிலையை 250 ரூபாயாக நிர்ணயிப்பதாக 2016-ல் வாக்குறுதி அளித்த சி.பி.எம் அதை நிறைவேற்றவில்லை எனவும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் சி.பி.எம் பொலிட்பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கேரளாவில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது எர்ணாகுளம் பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "அதானி, அம்பானி மற்றும் அமெரிக்காவும்தான் பிரதமர் நரேந்திர மோடியின் 'ஏ' டீம். டொனால்ட் டிரம்ப் ஈரானை முதலில் தாக்கியபோதும், இஸ்ரேல் பாலஸ்தீனத்தைத் தாக்கியபோதும் மௌனம் காத்தவர் மோடி.

மோடியின் வாயைப் பூட்டி அதன் சாவியை அமெரிக்க அதிபரிடம் கொடுத்தது போல் உள்ளது.

பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்
பிருந்தா காரத் கேரளத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

பா.ஜ.க மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராக சமரசமற்ற நிலைப்பாட்டை எடுப்பவர்கள் சி.பி.எம் கட்சியினர். இதனை மறைத்து 'டீல்' என்று கூறி பா.ஜ.க-வும் காங்கிரஸும் பொய்ப் பிரசாரம் செய்கின்றன.

பல விஷயங்களில் பா.ஜ.க-வும் காங்கிரஸும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் போன்று செயல்படுகின்றனர். கேரள மக்களுக்குச் சேர வேண்டிய நிதியை ஏன் மறுக்கிறீர்கள் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும். ​

தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பங்களிப்பு ஒழுங்குமுறை திருத்த சட்டம் சில மதப் பிரிவினரை இலக்கு வைத்து கொண்டு வரப்பட்டது.

பிருந்தா காரத்
பிருந்தா காரத்

கர்நாடகாவும் தெலங்கானாவும் காங்கிரஸின் ஏ.டி.எம்-களாக மாறிவிட்டன. அங்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை காங்கிரஸால் நிறைவேற்ற முடியவில்லை. கொடுத்த வாக்கை நிறைவேற்றிய பிறகுதான் ராகுல் காந்தி கேரளாவில் வந்து வாக்குறுதிகளை அளிக்க வேண்டும்.

கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும் வயநாடு துயரச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வீடு அமைத்து கொடுக்க எல்.டி.எஃப் அரசு டவுன்ஷிப் அமைத்து வருகிறது. இந்த நேரத்தில் வீடு கட்டித் தருவதாகச் சொல்லி வருபவர்கள் (காங்கிரஸ் கட்சியினர்) மக்களிடம் இருந்து எவ்வளவு பணம் வசூலித்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும்" என்றார்.

தமிழகத்தில் பறக்கும் படை வேட்டையில் சிக்கியது இத்தனை கோடிகளா? - அர்ச்சனா பட்நாயக் வெளியிட்ட தகவல்

தமிழ்நாட்டில் இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட பரிசுப்பொருட்கள் மற்றும் பணம் குறித்த விவரங்களை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார். தமிழக சட்டமன்... மேலும் பார்க்க

மணிப்பூர்: தீப்பந்தத்துடன் வீதிக்கு வந்த பெண்கள்; உடைந்த நம்பிக்கையும் ஓயாத கலவரமும்;என்ன நடக்கிறது?

மணிப்பூர் மாநிலத்தில் 2023 மே மாதம் மெய்தி - குக்கி என இரு சமூகத்தினரிடையே தொடங்கிய கலவரம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர... மேலும் பார்க்க

"எங்களது ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளேன்" - ட்ரம்ப் பதிவு; நம்பிக்கையில் பாகிஸ்தான்; மௌனத்தில் ஈரான்

நேற்று பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடக்கவிருந்த அமெரிக்கா – ஈரான் பேச்சுவார்த்தை திட்டமிட்டது போல நடக்கவில்லை. அமெரிக்கா தரப்பில் இருந்து அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், சிறப்பு தூதர் ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம் : பிரசார களத்துக்கு வந்த 'மீன்கள்' ; மேற்கு வங்கத்தை அசைக்கும் உணவு யுத்தம்!

கொல்கத்தாவின் பாரக்பூர் தொகுதியின் பா.ஜ.க வேட்பாளரான கௌஸ்தவ் பக்சி, பாரம்பரிய உடை அணிந்து கையில் ஒரு மீனுடன் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அவருக்குப் பின்னால் மேளதாளங்கள் முழங்க ஆதரவ... மேலும் பார்க்க

`எங்களுக்குத் தேவை நீதியே தவிர வெறுப்பு அல்ல' - பஹல்காம் தாக்குதல் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரானில், சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட கோரமான பயங்கரவாதத் தாக்குதல் நடந்து இன்றுடன் (ஏப்ரல் 22) ஓராண்டு நிறைவடைகிறது. 26 ஆண்களின் உயிரைப் பறித்த இந்... மேலும் பார்க்க