செய்திகள் :

RR vs CSK: "சிவம் துபே அப்படி முயற்சிப்பார் எனத் தெரியும்" - சிஎஸ்கே எதிரான போட்டி குறித்து ஜடேஜா

post image

நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.

இதில் ராஜஸ்தான் அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கேவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இதில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ராஜஸ்தான் அணிக்காகக் களமிறங்கிய ஜடேஜா தனது முந்தைய அணியான சென்னை அணிக்கு எதிராக இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

ஜடேஜா
ஜடேஜா

சர்பராஸ் கான் மற்றும் சிபம் துபேவின் விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். துபே அவுட்டான பிறகு ஜடேஜா கொடுத்த ரியாக்சன் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அணியின் வெற்றிக்குப் பிறகு பேசிய ஜடேஜா, "பிங்க் நிற ஜெர்ஸி எனக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது.

சிவம் துபேவை எனக்கு நீண்ட நாள்களாகத் தெரியும். நெட்ஸில் அவருக்கு பந்து வீசியிருக்கிறேன். அவர் ஸ்பின்னர்களை எப்படி அணுகுவார் என்பது எனக்கு தெரியும்.

அதனால், பெரிய ஷாட் அடிக்க அவர் முயற்சிப்பார் என்று தெரியும்" என்று பேசியிருக்கிறார்.

ஜடேஜா
ஜடேஜா

தொடர்ந்து சிஎஸ்கே குறித்து பேசிய அவர், "சிஎஸ்கே அணியுடனான பிரிவு முதலில் சற்று கடினமாக இருந்தது.

ஏனெனில் அந்த அணியுடன் 12-13 வருடங்களாகப் பயணித்திருக்கிறேன். அதனால் கொஞ்சம் எமோஷனல் ஆகிவிட்டேன்.

ஆனால் வாழ்கையில் இதுவும் ஒரு பகுதி எனத் தேற்றிக்கொண்டேன். இதில் நல்ல விஷயம் என்னவென்றால் நான் முதலில் கோப்பை வென்ற அணிக்கே மீண்டும் திரும்பியதுதான்" என ஜடேஜா எமோஷனலாகப் பேசியிருக்கிறார்.

RR vs CSK: "இனிவரும் போட்டிகளில் எங்க ஆட்டம் சிறப்பாக இருக்கும்!" - ருதுராஜ் கெய்க்வாட் நம்பிக்கை

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச் 30) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த சென்னை... மேலும் பார்க்க

RR vs CSK: "இந்த வருடம் கோப்பையை வெல்வதுதான் எங்களுடைய ஒரே இலக்கு" - கேப்டன் ரியான் பராக்

நேற்று (மார்ச்.31) நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கேவும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 128 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த ஸ்கோரை 12.1 ஓவர்களில் எட்டி ப... மேலும் பார்க்க

MI vs KKR: "எனக்கு சவால்கள் என்றால் பிடிக்கும்; அவைதாம் என்னை உருவாக்கின" - ஷர்துல் தாகூர்

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச்.29) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின. இதில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி ... மேலும் பார்க்க

MI vs KKR: "இந்த வெற்றி எங்களின் நீண்ட நாள் காத்திருப்பு"- கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி

ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச்.29) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் மோதின. இதில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி... மேலும் பார்க்க

MI vs KKR: 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வென்று அசத்திய மும்பை அணி!

13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார். MI vs KKRமும்பை அணியில் ரோஹித... மேலும் பார்க்க

IPL: முதல்முறையாக சாம்பியனாக களம் காணும் RCB; பேட்டிங் ஓகே, பந்துவீச்சு? - அதிர்ச்சி கொடுக்குமா SRH?

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், 19-வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா இன்று (மார்ச் 28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில், ... மேலும் பார்க்க