மக்கள் தொகை கணக்கெடுப்பு: 'Live-in உறவிலிருப்பவர்கள் தம்பதியா?' - மத்திய அரசின் ...
MI vs KKR: "இந்த வெற்றி எங்களின் நீண்ட நாள் காத்திருப்பு"- கேப்டன் ஹர்திக் பாண்டியா நெகிழ்ச்சி
ஐபிஎல் தொடரின் நேற்றைய (மார்ச்.29) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள், வான்கடே மைதானத்தில் மோதின.
இதில் கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 13 வருடங்கள் கழித்து தனது முதல் போட்டியில் வெற்றி பெற்று அசத்தி இருக்கிறது மும்பை அணி.

இந்நிலையில் அணியின் வெற்றிக்கு பிறகு பேசிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, " இந்த வெற்றி என்பது எங்களின் நீண்ட நாள் காத்திருப்பு. 13 ஆண்டுகள் ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம்.
ஒவ்வொரு முறை நாங்கள் விளையாடும்போதும் சீசனை வெற்றியுடன் சிறப்பாகத் தொடங்க வேண்டும் என்றுதான் நினைப்போம்.
இறுதியாக எங்களால் அதைச் செய்ய முடிந்தது என்பதில் ஒட்டுமொத்த அணியும் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறது.
மைதானம் பேட்டிங்கில் சாதகமாக இருப்பதை, எதிரணி வீரர்கள் ஆடுவதை பார்த்தே தெரிந்து கொண்டோம்.
ஆனால் எங்கள் பந்துவீச்சாளர்களைப் பாராட்ட வேண்டும். அவர்கள் ஆட்டத்தை நன்றாகக் கட்டுப்படுத்தினார்கள்.
எங்கள் அணியின் முதல் இரண்டு பேட்டர்களான ரோஹித் மற்றும் ரிக்கெல்டன் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள்.
ரோஹித் ஆடிய விதம் மற்றும் அவர் அடித்த ஷாட்கள் அபாரமானவை. அதேபோல் ரிக்கெல்டனும் அருமையாக விளையாடினார்.

அதைப் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஷர்துல் தாக்கூரிடம் அடிக்கடி அணிகளை மாற்றியது போதும், உன்னுடைய கிரிக்கெட் பயணம் முடியும் வரை நீ இதே அணியில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று சொன்னேன்.
அவர் ஒரு சுவாரசியமான மனிதர், பெரிய மனது கொண்டவர். அவர் களத்திற்கு வந்து பேட்டர்களைத் தன் புத்திசாலித்தனத்தால் வீழ்த்த முயலும் விதம் அற்புதம்" என்று பேசியிருக்கிறார்.


















