செய்திகள் :

`மோர் வயிற்றை கெடுக்கும், அதனால் பீர் குடிங்க!' - வீடியோ வெளியிட்ட ரெஸ்டோ பார்; சீல் வைத்த ஆட்சியர்

post image

யூனியன் பிரதேசமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதன் காரணமாகவே மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநில சுற்றுலாப் பயணிகளைக் குறி வைக்கிறது. இந்த நிலையில் கடந்த 2021-ல் பா.ஜ.க கூட்டணியுடன் ஆட்சிக்கு வந்த முதல்வர் ரங்கசாமி, `பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப மதுக்கடைகளின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த வேண்டும்.

புதுச்சேரியை ஸ்பிரிச்சுவல் பூமி என்று சொல்கிறீர்கள். ஆனால் ஸ்பிரிட்டில்தான் நமக்கு வருவாய் கிடைக்கிறது' என்று சட்டப்பேரவையிலேயே வெளிப்படையாகத் தெரிவித்தார். அது உண்மையும் கூட என்பது வேறு விஷயம். அதையடுத்து குறுகிய காலத்திலேயே சுற்றுலாப் பிரிவின் கீழ் `ரெஸ்டோ பார்' என்ற பெயரில் லைசென்ஸ்களை வாரி இறைத்தது கலால்துறை.

சர்ச்சைக்குறிய அந்த விளம்பரம்

அதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள், கோயில்கள், குடியிருப்புப் பகுதிகள் என எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி, வீதிக்கு பத்து என்ற விகிதத்தில் ரெஸ்டோ பார்கள் திறக்கப்பட்டன. அதன் விளைவாக முன்பு வார இறுதியில் மட்டும் புதுச்சேரியை நோக்கிப் படையெடுத்த அண்டை மாநில மதுப் பிரியர்கள், வார நாட்களிலும் குவிந்து வருகின்றனர். இது ஒருபுறமிருக்க மதுப்பிரியர்களை ஈர்ப்பதற்காக, தங்கள் கடைகளுக்கு ஆண்களுடன் வரும் பெண்களுக்கு மது இலவசம் போன்ற சலுகைகளையும் அறிவிக்கின்றன சில ரெஸ்டோ பார்கள்.

புதுச்சேரி கலால் துறை விதிகளின்படி மதுபானக் கடைகள் மற்றும் விடுதிகள் தங்களது வளாகங்களில் வாடிக்கையாளர்களை மது அருந்தத் தூண்டும் வகையிலோ அல்லது மது விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலோ விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு தடை விதித்திருக்கிறது. மேலும், அவர்களைக் கவரும் விதமாக பரிசுப் பொருட்கள் மூலமாகவோ விளம்பரம் செய்யவும் கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

நீக்கப்பட்ட இன்ஸ்டா பக்கம்

ஆனால் அதையும் மீறி, மதுபான சலுகைகளைக் குறிப்பிட்டு கடைகளின் வாசல்களிலும், பொது இடங்களிலும் பேனர்கள் வைக்கப்படுகின்றன. பொதுமக்கள் புகார்களின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகமும், கலால்துறையும் அவற்றை அகற்றுவதால், சமூக வலைத்தளங்களில் விளம்பரம் செய்ய ஆரம்பித்திருக்கின்றன ரெஸ்டோ பார்கள். ரெஸ்டோ பார்களில் இசைக்கப்படும் இசைகளுக்கு பெண்கள் நடனமாடும் வீடியோக்கள் வெளிப்படையாக, இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. அப்படி புதுச்சேரி திருவள்ளுவர் சாலையில் செயல்படும் ஒரு ரெஸ்டோ பாரின் உரிமையாளர், மதுப்பிரியர்களை ஈர்க்க ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார்.

அந்த வீடியோவில், `எல் நினோ வெயிலுக்கு இளநீர் குடிக்கலாம். ஆனால் இரண்டுக்கு மேல் குடிக்க முடியாது. மோர் குடிக்கலாம். ஆனால் அதிகம் குடித்தால் வயிறு கெட்டுவிடும். அதனால் உங்களுக்கு அன்லிமிடெட் பீர் வேண்டுமா எங்களிடம் வாருங்கள்? ரூ.1,200... எத்தனை பீர் வேண்டுமானாலும் குடியுங்கள். ஆனால் இடையில் சிறுநீர் கழித்தால் அந்த சலுகை இல்லை' என்று பேசியிருந்தார். சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் சிறுநீர் கழிக்காமல் எவ்வளவு பீர் குடித்தாலும் இலவசம் என்று நடிகர் சத்யராஜிடம் சொல்வார் ஒய்.ஜி.மகேந்திரன்.

ஆட்சியர் குலோத்துங்கன்
ஆட்சியர் குலோத்துங்கன்

அந்தப் பாணியில் இருந்த இந்த விளம்பரத்தைப் பார்த்து அதிர்ந்து போன பொதுமக்கள், மதுப்பிரியர்களின் உயிருக்கு உலை வைக்கும் இந்த விளம்பரம் குறித்து கலால்துறைக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் புகாரளித்தனர். அதையடுத்து அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்குமாறு கலால்துறைக்கு உத்தரவிட்டார் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன். அதனடிப்படையில் அந்தக் கடைக்கு சீல் வைத்த கலால்துறை, அவர்களின் இன்ஸ்டா பக்கத்தையும் அதிரடியாக நீக்கியிருக்கிறது.

சொந்த நகைகளை ஆண் நண்பரிடம் கொடுத்துவிட்டு திருட்டு நாடகமாடிய பெண்! - போலீஸாரிடம் சிக்கியது எப்படி?

நெல்லை டவுண், வ.உ.சிதம்பரனார் தெருவைச் சேர்ந்த பாத்திர வியாபாரி பாலகுருசாமி. இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. பாலகுருசாமி, கோயில் திருவிழாவில் பாத்திர வியாபாரம் செய்வதற்காக தென்காசி ... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு சிகரெட்டால் சூடு வைத்த தாய் திருமணம் மீறிய உறவால் கொடூரம்!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த பறக்கை புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் அழகுவேல். கூலித் தொழிலாளியான இவருக்கு சுகன்யா என்ற மனைவியும், 7 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் உள்ளனர். சுகன்யாவ... மேலும் பார்க்க

திருமணம் நிச்சயம்; காதலை தொடர மறுத்த காதலி - மலைக்கு அழைத்து சென்று பள்ளத்தில் தள்ளிகொன்ற காதலன்

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகில் உள்ள கர்கோடி என்ற இடத்தை சேர்ந்தவர் ஸ்ரீபத் தின்கர்(25). இவர் தான் வசித்து வந்த தெருவில் வசித்த பொறியியல் கல்லூரி மாணவி தரன்னம் என்பவரை கடந்த 5 ஆண்டுகளுக்கும் மே... மேலும் பார்க்க

தருமபுரி: 'கருவில் உள்ளது ஆணா? பெண்ணா?' - வீட்டிலேயே சட்டவிரோத ஸ்கேன் செண்டர்; இருவர் கைது

வீட்டிலேயே சட்டவிரோத ஸ்கேன் செண்டர் நடத்தி கருவின் பாலினம் கண்டறிந்து சொன்ன இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தருமபுரி மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கைதுதருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மே... மேலும் பார்க்க

தொடர் குற்றங்களால் `ஜாமீன்’ ரத்து; பிரபல ரௌடி ஜானி வேலூர் சிறையிலடைப்பு

வேலூர் மாவட்டத்தைக் கடந்த 15 ஆண்டுகளாக அலறவிடும் `ஏ பிளஸ்’ ரௌடிகளில் ஒருவர் ஜானி என்கிற ஜான் பால்ராஜ். காட்பாடி அருகேயுள்ள வண்டறந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ஜானி மீது கொலை, ஆள் கடத்தல், மிரட்டி பணம் பற... மேலும் பார்க்க

ரூ.5 கோடி லஞ்சம் வாங்கினாரா இன்ஸ்பெக்டர்?”-தனியார் மருத்துவமனை விவகாரம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை!

தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுகுமாறன். இவர் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை விக்டோரியா நகரில் வசித்து வருகிறார். தனியார் மருத்துவமனை விவகாரத்தில் அதன் நிர்வாக இயக்குநரிடம் ரூ.5 கோடி லஞ்ச... மேலும் பார்க்க