செய்திகள் :

”ரத்து செய்யப்பட்ட பவரில் நிலம் ரிஜிஸ்ட்ரேஷன்”- பத்திரப்பதிவு அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்!

post image

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் நித்யா(42). இவருடைய தந்தை பன்னீர்செல்வத்திற்குச் சொந்தமாக 65 குழி நிலம் இருந்தது. இந்த நிலத்தைப் பராமரிப்பதற்காக, பட்டுக்கோட்டை பாக்கியம் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்குக் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பன்னீர்செல்வம் 'பவர்' (அதிகாரப் பத்திரம்) அளித்திருந்தார். பின்னர், மூன்று மாதங்கள் கழித்து அந்தப் பவரை அவர் ரத்து செய்துவிட்டார்.

நிலத்தை மீட்க தீகுளிக்க முயன்ற நித்யா

இந்நிலையில், ரத்து செய்யப்பட்ட பவர் பத்திரத்தைப் பயன்படுத்தி ராஜேந்திரன் அந்த நிலத்தைத் தனது மனைவி ஆனந்தஜோதி பெயரில் பத்திரப்பதிவு செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த சார்பதிவாளர் விதியை மீறி முறைகேடாக பத்திரம் செய்து கொடுத்து ராஜேந்திரனுக்கு ஆதரவாக செயல்பட்டு ஆதாயம் அடைந்துள்ளார் என்கிறார்கள்.

இதையறிந்த நித்யா, பட்டுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் முறைகேடாக செய்யப்பட்ட பத்திரப்பதிவை ரத்து செய்யக் கோரி பலமுறை மனு அளித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். இருப்பினும், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது சார்பதிவாளராக இருக்கும் நடேஷ் பாரதி, நித்யாவுக்கு முறையாக பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக சொல்கிறார்கள்.

நித்யாவை மீட்ட போலீஸ்

அலைக்கழிக்கப்படுவதால் ஆத்திரமடைந்த நித்யா, பத்திரப்பதிவு அலுவலக வளாகத்தில் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள், உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த போலீஸார் நித்யாவை பாதுகாப்பாக மீட்டதுன் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து சார்பதிவாளர் நடேஷ் பாரதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, "பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு வெளியே நடந்தது பற்றி எனக்கு தெரியாது. உள்ளே யாரும் தற்கொலை முயற்சி பண்ண வில்லை, நித்யா விவகாரம் குறித்து உங்களுக்கு விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை" என்றார்.

கோவை: இந்து கடவுள் முருகனை இழிவுபடுத்தியதாக தவெக நிர்வாகி கைது – நடந்தது என்ன?

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த ராக்கிபாளையம் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் மைக்கேல் ராஜ் (31). இவர் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சிஎன்சி ஆப்ரேட்டராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் ... மேலும் பார்க்க

கர்நாடகா: மான் வேட்டையில் ஈடுபட்டதாக மூவரைச் சுட்டுக்கொன்ற வனத்துறை; காவிரி சரணாலயத்தில் பயங்கரம்

கர்நாடக மாநிலம் காவிரி வனவிலங்கு சரணாலயத்தைச் சேர்ந்த வனத்துறையினர் இன்று அதிகாலை வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். ஹனூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஷாக்யா வனப்பகுக்குள் வேட்டை கும்பலைச் சேர்ந்த... மேலும் பார்க்க

அரிய வகை குரங்குடன் வீடியோ வெளியிட்ட விவகாரம்: விசாரணை வளையத்தில் விக்ரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்!

'லார் கிப்பன்' (Lar Gibbon) எனப்படும் அரியவகை மனித குரங்குடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை நடிகர் விக்ரம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சையானதைத் தொடர்ந்து அந்த... மேலும் பார்க்க

பாலியல் கொடுமை செய்யப்பட்ட 4 வயது சிறுமி; இளைஞரை ஓட ஓட அரிவாளால் வெட்டிய பாட்டி - கரூர் அதிர்ச்சி!

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் 4 வயது மகளை, 3 நாள்களுக்கு முன்பு குண்டாங்கல்பாறை, புத்தர் நகர்ப் பகுதியில் வசித்து வரும் தங்கராசு மகன் விஜய் (எ) மாண... மேலும் பார்க்க

புதுச்சேரி: `போலீஸே எனக்கு பயப்படுவாங்க!’- மாமூல் தர மறுத்த கடையில் பெட்ரோல் குண்டு வீசிய ரௌடி

புதுச்சேரி, வில்லியனூர் மார்க்கெட் வீதியில் பாபு மற்றும் அவரது சகோதரர் ராஜேந்திரன் இருவரும் இணைந்து பாபு டிரேடர்ஸ் என்ற பெயரில் அரிசிக்கடை நடத்தி வருகின்றனர். நேற்று மாலை சுமார் 6.30 மணியளவில் அங்கு ச... மேலும் பார்க்க

ஆட்டோ வாங்கி கொடுத்தும் `திருந்தாத’ குடிகாரக் கணவன் - சேர்ந்து வாழ மறுத்ததால் பெண் போலீஸ் கொலையா?

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எர்த்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராம். இவரது மகள் தாமரைச்செல்வி (40). இவர், குடியாத்தம் நகரக் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்தார். இவரு... மேலும் பார்க்க