செய்திகள் :

ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் ஏஐ தொழில்நுட்பம் – பின்பற்ற தயாரான பிற மாநிலங்கள்!

post image

கோவையில் இருந்து கேரளாவிற்கு போத்தனூர், வாளையார் பகுதிகள் வழியாக இயக்கப்படும் ரயில்கள், மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்கின்றன. ரயில்கள் வந்து செல்வதற்கு வசதியாக ஏ, பி என இரண்டு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 'ஏ' ரயில் பாதை 2.9 கி.மீ. தூரமும், 'பி' ரயில் பாதை 4.15 கி.மீ தூரமும் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளன. இதேபோல கேரள மாநிலத்திற்கு உட்பட்ட வாளையார் முதல் கஞ்சிக்கோடு வரையிலான ரயில் பாதைகள் வனப்பகுதி வழியாக செல்கின்றன.

இதனால் ரயில் தண்டவாளங்களுக்கு வரும் காட்டு யானைகள், ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வந்தன. இதனை தடுப்பதற்காக கோவை மாவட்டம் மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஏ.ஐ செயற்கை நுண்ணறிவு உதவியுடன் காட்டு யானைகள் நடமாட்டத்தை  24 மணி நேரமும் கண்டறிந்து எச்சரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் கடந்த 2023ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இதன்படி 12 டவர்கள் அமைக்கப்பட்டு, 24 ஏ.ஐ கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 7.05 கி.மீ. தூரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், ட்ரோன் கேமராக்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஏ.ஐ கண்காணிப்பு
ஏ.ஐ கண்காணிப்பு

யானைகள் ரயில் தண்டவாளங்களுக்கு அருகே வரும் போது, கட்டுப்பாட்டு அறை மூலம் அருகில் உள்ள ரயில் நிலையங்களுக்கும், வனத்துறையினருக்கும், லோகோ பைலேட்டிற்கும் தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் லோகோ பைலேட் ரயிலின் வேகத்தை குறைத்து விபத்து ஏற்படுவதை தவிர்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல ரயில் தண்டவாள பகுதியில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடும் வனப்பணியாளர்கள், காட்டு யானைகள் தென்பட்டால் விரட்டும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக மதுக்கரை ரயில் பாதையில் எந்த ஒரு காட்டு யானை உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதேபோல இதுவரை சுமார் 25 ஆயிரம் முறை வனவிலங்குகள் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளன. குறிப்பாக 7,592 முறை காட்டு யானைகளும், 214 முறை சிறுத்தைகளும், 669 முறை காட்டு மாடுகளும், 21,612 முறை மான்களும் பாதுகாப்பாக ரயில் பாதையை கடந்து சென்றுள்ளன. இந்த நிலையில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மத்திய பிரதேசம், மேகாலயா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் ரயில் விபத்தில் வன விலங்குகள் உயிரிழப்பதை தடுக்க திட்டமிட்டுள்ளன.

ஏ.ஐ கண்காணிப்பு
ஏ.ஐ கண்காணிப்பு

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, “ரயில் மோதி காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க இந்த ஏ.ஐ. தொழில்நுட்ப திட்டம் நாட்டின் முன்னோடியாக விளங்கி வருகிறது. இதனை செயல்படுத்த மத்திய பிரதேசம், மேகாலயா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள் கோவை வனத்துறையை அணுகியுள்ளன. அவர்களுக்கு தொழில்நுட்ப ரீதியான உதவிகளை செய்ய தயாராக இருக்கிறோம்” என்றனர்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க