செய்திகள் :

"ரஷ்யாவில் சீன அதிபருக்குத்தான்... ரஷ்யப் போரில் இந்திய மக்களும்..!"- ஐ.நாவில் ஜெலன்ஸ்கி பேச்சு

post image

தற்போது அமெரிக்காவின் நியூயார்க்கில் ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டம் நடந்து வருகிறது.

அந்தக் கூட்டத்தில் நேற்று ஜெலன்ஸ்கி பேசினார்.

தற்போது உலகத்தில் நடந்துவரும் போர்களில் ரஷ்ய-உக்ரைன் போரும் மிக முக்கியமான ஒன்று. இந்தப் போரை எப்படியாவது நிறுத்தத்திற்குக் கொண்டுவர வேண்டும் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நினைக்கிறார். ஆனால், அதற்கு ரஷ்ய அதிபர் புதின் ஒத்துவரவில்லை.

நேற்று ஐ.நாவிலும் உக்ரைன் போர் நிறுத்தத்தை நோக்கியே ஜெலன்ஸ்கியின் பேச்சு இருந்தது.

புதின்
புதின்

ஜெலன்ஸ்கி நேற்று பேசியதாவது...

“புதினுக்குச் செயல்பட எவ்வளவு சுதந்திரம் கிடைக்கிறதோ, அந்தளவுக்கு மற்றவர்களுக்கு உலகம் ஆபத்தானதாக மாறுகிறது.

அதனால்தான் நோயின் முதல் புள்ளியான அந்த மனிதரை உடனடியாகத் தடுக்க வேண்டும்.

நாங்கள் ஆயுதங்கள் மற்றும் தற்காப்பைப் பற்றி மட்டுமே தொடர்ந்து பேசுவதால், உக்ரைன் போரில் மட்டுமே கவனமாக இருப்பதாகச் சில நேரங்களில் தோன்றலாம். ஆனால், உக்ரேனியர்களாகிய நாங்கள் இந்தப் போரை விரும்பியதில்லை.

நாங்கள் மடிந்துபோகக் கூடாது என்பதற்காகவும்... எங்களது நாட்டை, குடும்பங்களை, சுதந்திரத்தை மற்றும் இறையாண்மையை இழந்துவிடக் கூடாது என்பதற்காகவுமே இந்த வழியைத் தேர்ந்தெடுத்தோம்.

சீன அதிபருக்குத்தான்!

துரதிர்ஷ்டவசமாக, இன்று அமெரிக்காவில் இருந்தும் சீனா அதிபருடன் நேரடியாகப் பேசும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைக்கவில்லை.

மற்றவர்களைக் காட்டிலும் ரஷ்யாவிடம் அதிக செல்வாக்கு அவருக்குத்தான் உள்ளது.

உக்ரைனுக்கு எதிரான போரில் கானா, நேபாளம், தஜிகிஸ்தான், இந்தியா, ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், சூடான், தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த 47 நாடுகளின் குடிமக்களை ரஷ்யா பயன்படுத்துகிறது என்பது எங்களுக்குத் தெரியும்.

சீன அதிபர் ஜி ஜின்பிங்
சீன அதிபர் ஜி ஜின்பிங்

ரஷ்யாவிற்கு இடம் தராதீர்கள்

இந்த 47 நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் நேரடியாக ஒன்று கூற விரும்புகிறேன். ரஷ்யா உங்கள் மக்களுக்கு என்ன செய்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும்.

அவர்கள் உங்கள் நாட்டின் குடிமக்கள். அவர்களைப் பாதுகாக்கப் பாருங்கள். போர்க்களத்தில் அவர்கள் பலியாவதை அனுமதிக்காதீர்கள்.இந்தப் போருக்குள் உங்களையும் இழுக்க புதினுக்கு அனுமதி கொடுக்காதீர்கள்.

ரஷ்யா போர் செய்யவும், தங்களது முட்டாள்தனத்திற்காக உங்களின் மக்கள் உயிர்களைப் பலிகொடுக்கவும் ஒருபோதும் இடம் தராதீர்கள்.”

"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் பு... மேலும் பார்க்க

"நாங்கள் ஒத்துக்கொள்ளவில்லை; அதனால் வேளாண் அமைச்சர் ஆக்குகிறோம் என்றார்" - யாரைச் சொல்கிறார் சீமான்?

தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவை ஆதரித்து நேற்று (செப்.23) தேர்தல் பிரசாரம் செய்திருந்தார் சீமான்.அப்போது பேசிய அவர், "என்ன நடக்குது இப்போ?... மேலும் பார்க்க

அமெரிக்காவில் ஈரான் குழு: அமெரிக்காவிடம் என்னென்ன நிபந்தனைகள் வைத்தோம்? - ஈரான் சொல்லும் பட்டியல்!

ஐக்கிய நாடுகளின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள ஈரான் அமெரிக்காவின் நியூயார்க்கிற்கு சென்றிருக்கிறது. அங்கே அமெரிக்க அதிகாரிகளுக்கும், ஈரான் அதிகாரிகளுக்கு தீவிரமாக ஈரான் போர் நிறுத்தம் குறித்து பேச்சு... மேலும் பார்க்க

``ஐ.நா சபை பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது" - அர்ஜெண்டினா அதிபர் கடும் விமர்சனம்!

ஐக்கிய நாடுகள் சபை தனது அடிப்படை கொள்கைகளில் இருந்து விலகி, பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது என அர்ஜெண்டினா அதிபர் ஜேவியர் மிலே (Javier Milei)கடுமையாக விமர்சித்துள்ளார். நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச... மேலும் பார்க்க

`குடியுரிமைச் சட்டத்தின் பின்வாசல் வழி... தேர்தல் ஆணையத்தின் சரிவு.!' | எம்.ஜி.தேவசகாயம் EXCLUSIVE

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)(ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி)கட்டுரையாளர் : எம... மேலும் பார்க்க

`செல்வப்பெருந்தகை' வைத்த விமர்சனம் - பிரவீன் சக்கரவர்த்தி சொன்ன பதில்!

திருச்சி விமான நிலையத்தில் காங்கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் பிரவீன் சக்கரவர்த்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரால் இந்தியாவின் ஜனநாயகமே பாதிக்கப்பட்டு... மேலும் பார்க்க