செய்திகள் :

ராகுல் காந்தியின் தர்ணா அவரது தேசவிரோத முகத்தை மறைக்கும் ‘நாடகம்’ - ஜே.பி.நட்டா கடும் தாக்கு!

post image

நீட் வினாத்தாள் கசிவிற்காக டெல்லியில் மாணவர்கள் நடத்திய பேரணியில் பெல்லட் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தை எஃப்.ஐ.ஆராக பதிவு செய்யுமாறு இன்று டெல்லியில் தர்ணாவில் ஈடுபட்டார் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா செய்தியாளர்களிடம், "இன்று ராகுல் காந்தி நடத்தும் தர்ணா போராட்டம் மாணவர்களுக்காகவோ அல்லது நீதிக்காகவோ நடத்தப்படுவது அல்ல.

அது காங்கிரஸ் கட்சியின் அரசியல் விரக்தியையும், ராகுல் காந்தியின் 'புகழ் வெளிச்சத்திற்காக ஏங்கும்' போக்கையும்தான் காட்டுகிறது.

காவல் நிலையத்தில் ராகுல் காந்தி
காவல் நிலையத்தில் ராகுல் காந்தி

இன்று 'வந்தே மாதரம்' பாடலுக்கு நேர்ந்த அவமதிப்பு விவகாரத்தில், காங்கிரஸ் கட்சி நாடு முழுவதும் அனைத்துத் தரப்பிலிருந்தும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. தேசியப் பாடலை அவமதித்தது குறித்து காங்கிரஸ் கட்சியிடம் மக்கள் பதில் கேட்டு வருகிறார்கள்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் தேசியக்கொடி பொறிக்கப்பட்ட கேக்கை வெட்டுவதைப் பார்க்க முடிகிறது. தங்களின் இந்தத் தேசவிரோத முகத்தை மறைக்கவும், இந்த மிகப்பெரிய அசிங்கத்திலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பவுமே ராகுல் காந்தி அவசர அவசரமாகக் காவல் நிலையத்தில் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

ராகுல் காந்தி 'இதை' உணர வேண்டும்!

நாடு என்பது ஒரு குடும்பத்தின் 'பிடிவாத குணத்திலோ' அல்லது கேமராக்கள் மீதான அவர்களின் ஆசையிலோ இயங்கவில்லை.

மாறாக அரசியலமைப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை நடைமுறைகளின்படியே இயங்குகிறது என்பதை பாரதிய ஜனதா கட்சி தெளிவுபடுத்த விரும்புகிறது. மக்கள் தனது ஹிட் அண்ட் ரன் அணுகுமுறையையும், அரசியல் போலித்தனத்தையும் நன்றாகப் புரிந்து கொண்டுவிட்டார்கள் என்பதை ராகுல் காந்தி உணர வேண்டும்."

"அம்பேத்கரின் சட்டத்திற்கு காக்கி ட்ரவுசர் போட்ட அமைச்சர்"- நிர்மல் குமாருக்கு அன்பில் மகேஸ் கண்டனம்

இன்று சட்டப்பேரவையில் தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசினார். அந்த உரையில், முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின் பெண்களை இழிவாகப் பேசியதால்தான் மிசாவில் கைதா... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: `கள்ளச்சாராய மரணங்களுக்கு அதிகாரிகளே காரணம்!’ - கோகுல்தாஸ் அறிக்கை சொல்வதென்ன ?

கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 19-ம் தேதி அதிகாலையில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஒன்று, இரண்டு என மெல்லத் தொடங்கிய உயிரிழப்புகள், அன்று நள்ளிரவைத் தாண்டுவதற்குள் கருணாபுரம... மேலும் பார்க்க

"எனது உடல்மொழி எதேச்சையாக வெளிப்பட்டதுதானே தவிர, அது எவ்வகையிலும்..!"- முதல்வர் விஜய் விளக்கம்

நேற்று (செப்.7) நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில் காவல்துறை, தீயணைப்புத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். சர்க்காரியா கமிஷன், ... மேலும் பார்க்க

மதுராந்தகம் இடைத்தேர்தல்: தவெக-வில் சீட் வார்... மரகதம் குமரவேலுக்கு எதிராக உருவாகும் ரேஸ்!

தமிழகத்தில் காலியாக இருக்கும் ஏழு தொகுதிகளில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். அந்த இரண்டு தொகுதிகளிலும் எம்.எல்.ஏ-க்களாக இருந்து, பத... மேலும் பார்க்க

`ஆளுங்கட்சியினர் அதிமுகவினரை தாஜா செய்கிறார்கள்; இடைத்தேர்தலில் நாங்கள்..!' - எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். "இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு தொகுதிகளும் (மதுராந்தகம், தாராபுரம்) ஏற்கெனவே அதிமுக வெற்றி பெற்ற இடங்கள்... மேலும் பார்க்க

`நீதி கேட்கும் அதிமுக; குறைகூறும் திமுக... நம்பிக்கையில் தவெக' - இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கும்?

தமிழகத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, இவ்விரு தொகுதிகளுக்க... மேலும் பார்க்க