செய்திகள் :

தஞ்சை: குட்கா கடத்தியவர்களை தப்பிக்க வைத்த போலீஸ் - இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்!

post image

தஞ்சாவூரில், கடந்த 10-ம் தேதி, மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம்(45) தலைமையிலான போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அம்மாபேட்டையைச் சேர்ந்த ஆறுமுகம்(45), முருகன்(48) ஆகிய இருவரும் தடைசெய்யப்பட்ட 83 கிலோ குட்காவை தஞ்சாவூருக்கு விற்பனைக்காக கடத்தி வந்த போது போலீஸில் பிடிப்பட்டனர்.

குட்கா

இந்நிலையில், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன்(35) மற்றும் போலீஸ் அழகர்கசாமி (37) ஆகிய மூவரும், குட்காவை பறிமுதல் செய்ததுடன் ஆறுமுகம் மற்றும் முருகனை போலீஸ் ஸ்டேஷனுக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சண்முகம், அவர்களிடம் விசாரணை செய்து வழக்கு பதிந்து கைது நடவடிக்கை எடுக்காமல், பறிமுதல் செய்த குட்கா பொருட்களை மீண்டும் அவர்களிடம் கொடுத்து அனுப்பி வைத்தார். இது குறித்து தகவலறிந்த நிலையில் எஸ்.பி சுந்தரவதனம் விசாரணை மேற்கொண்டார்.

இதில் குட்கா கடத்தியவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு இன்ஸ்பெக்டர் சண்முகம் அவர்களை விட்டு விட்டதும் இதற்கு ஆதரவாக ஏட்டு கவுதமன் மற்றும் போலீஸ் அழகர்சாமி செயல்பட்டது தெரியவந்தது என்கிறார்கள். லஞ்ச பணத்தை மூவரும் பிரித்து கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து, மேற்கு போலீஸார் கடந்த 11ம் தேதி வழக்கு பதிவுசெய்து, குட்கா கடத்திய ஆறுமுகம் மற்றும் முருகன் ஆகிய இருவரும் கைதுசெய்யப்பட்டனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர சண்முகம் கடந்த 13ம் தேதி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர்

இதையடுத்து, எஸ்.பி சுந்தரவதனம் பரிந்துரையின் பேரில், இன்ஸ்பெக்டர் சண்முகம், ஏட்டு கவுதமன் மற்றும் அழகர்சாமி ஆகிய மூவரையும் தஞ்சாவூர் சரக டி.ஐ.ஜி ஜியாவுல் ஹக் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். ஏற்கெனவே, போலீஸ் ஸ்டேஷன் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கை இன்ஸ்பெக்டர் சண்முகம் முறையாக கையாளவில்லை என்பது உட்பட அவர் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததும் குறிப்பிடத்தக்கது என போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

சென்னை: பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் தூய்மைப் பணியாளர் சடலம்; பரிசோதனையில் அம்பலமான கொலை!

சென்னை திருவேற்காடு அன்னலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஹோமாவதி (55). இவர், வளசரவாக்கம் மண்டலத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வந்தார். இவரின் கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் ஹோமாவத... மேலும் பார்க்க

சென்னை: வங்கியில் அடமானம் வைத்த தங்க நகைகளை நூதன முறையில் திருடிய உதவி மேலாளர் - சிக்கியது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அயனாவரம் கிளையில் மேலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர், 13.8.2026-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், அயனாவரம் கிளையின் உதவி மே... மேலும் பார்க்க

சட்டையைப் பிடித்து அறைந்த ஆசிரியை; சுருண்டு விழுந்து இறந்த சிறுவன் - ஆந்திரா பள்ளியில் அதிர்ச்சி!

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' என்ற தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியைத் தாக்கியதில் 6 வயதான பிரணாய் தேஜா என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உ... மேலும் பார்க்க

`ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட்டேன்' - சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்த வங்கி ஊழியர்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் மனஸ் பாஜ்பாய். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா. இவரும் தனியார் வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார். கணவ... மேலும் பார்க்க

நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!

நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். கிறிஸ்துவ மத போதகர். 47 வயதான இவர் தேவர்குளம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல இலந்தைக்குளம் பகுதியில் சபை நடத்தி மதபோதகம் செய்து வந்துள்ளார். இந்த ... மேலும் பார்க்க

`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' - திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த ... மேலும் பார்க்க