செய்திகள் :

சட்டையைப் பிடித்து அறைந்த ஆசிரியை; சுருண்டு விழுந்து இறந்த சிறுவன் - ஆந்திரா பள்ளியில் அதிர்ச்சி!

post image

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள 'லிட்டில் கார்டன்' என்ற தனியார் பள்ளியில், வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியைத் தாக்கியதில் 6 வயதான பிரணாய் தேஜா என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காலையில் ஆரோக்கியமாகப் பள்ளிக்குச் சென்ற தன் மகனை, ஆசிரியை பிரம்பால் தாக்கிய அதிர்ச்சியிலும் பயத்திலுமே சுருண்டு விழுந்து இறந்ததாகப் பெற்றோர் குற்றம்சாட்டியிருக்கின்றனர்.

ஆசிரியர் தாக்கியதில் இறந்த மாணவன்
ஆசிரியர் தாக்கியதில் இறந்த மாணவன்

பள்ளி சிசிடிவி காட்சிகளிலும் ஆசிரியை சிறுவனை அடிப்பதும், அடுத்த சில வினாடிகளில் அவன் சுருண்டு விழுவதும் பதிவாகியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த துயரச் சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த கல்வித்துறை மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருக்கிறது.

சென்னை: வங்கியில் அடமானம் வைத்த தங்க நகைகளை நூதன முறையில் திருடிய உதவி மேலாளர் - சிக்கியது எப்படி?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் அயனாவரம் கிளையில் மேலாளராக இருப்பவர் தினேஷ்குமார். இவர், 13.8.2026-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், அயனாவரம் கிளையின் உதவி மே... மேலும் பார்க்க

`ஏமாற்றிய மனைவியை கொன்றுவிட்டேன்' - சகோதரியை கொலைசெய்து விட்டு தானும் தற்கொலை செய்த வங்கி ஊழியர்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கிளார்க்காக பணியாற்றி வருபவர் மனஸ் பாஜ்பாய். இவரது மனைவி திவ்யா மிஸ்ரா. இவரும் தனியார் வங்கி ஒன்றில் மக்கள் தொடர்பு மேலாளராக இருக்கிறார். கணவ... மேலும் பார்க்க

நெல்லை: 4 சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகருக்கு மரண தண்டனை!

நெல்லை மாவட்டம் மேலஇலந்தக்குளத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம். கிறிஸ்துவ மத போதகர். 47 வயதான இவர் தேவர்குளம் காவல் எல்லைக்கு உள்பட்ட மேல இலந்தைக்குளம் பகுதியில் சபை நடத்தி மதபோதகம் செய்து வந்துள்ளார். இந்த ... மேலும் பார்க்க

`கணவரை குணப்படுத்துவார் என நினைத்தேன்' - திருநங்கை வேடத்தில் வந்து விமான பணிப்பெண் பாலியல் வன்கொடுமை

மும்பை பவாய் பகுதியில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் விமான பணிப்பெண் ஒருவர் வசித்து வந்தார். அந்த கட்டடத்திற்கு திருநங்கை வேடத்தில் ஒருவர் வந்தார். அந்த நபர் விடுதியின் வெளியில் நின்று கொண்டிருந்த ... மேலும் பார்க்க

கொடநாடு வழக்கு: 8-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்த சந்தோஷ் சாமி உயிரிழப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரின் தோழி சசிகலா ஆகியோருக்குச் சொந்தமான டீ எஸ்டேட் மற்றும் பங்களா நீலகிரி மாவட்டம் கோத்தகிரி வட்டத்திற்கு உட்பட்ட கொடநாடு பகுதியில் அமைந்துள்ளது. கடந்த 2017... மேலும் பார்க்க

சென்னை: மாடியிலிருந்து தவறி விழுந்த பள்ளி மாணவிக்கு நேர்ந்த சோகம்; போலீஸ் தீவிர விசாரணை

சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நவீன் (41). இவரின் மகள் க்ஷிபிஜா (13). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வக... மேலும் பார்க்க