மேகதாது: `2027-ல் அடிக்கல் நாட்ட திட்டம்; இனியும் அலட்சியம் காட்டக் கூடாது!'- எ...
'நான் உங்களின் ரசிகன்; உங்களைப் பார்க்கும்போது தனுஷ் சார்தான்..!'- பிரதீப் குறித்து சிவராஜ்குமார்
தமிழ் சினிமா கலைஞர்களைக் கொண்டாடும் 'ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2025' விழா கடந்த மாதம் (ஜூலை.3) நடைபெற்றது.
இதில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை 'டூரிஸ்ட் ஃபேமிலி', படத்துக்காக அபிஷன் ஜீவிந்த் வென்றார்.
இந்த விருதை, கன்னட நடிகர் சிவராஜ்குமார் அபிஷன் ஜீவிந்திற்கு வழங்கினார்.

விருது வழங்கிய பிறகு மேடையில் பேசிய அவர், " 'டூரிஸ்ட் ஃபேமிலி' படம் பார்த்தப்போது மகிழ்ச்சியாக இருந்தது.
அந்தப் படத்தில் அவர் அருமையானக் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அது நன்றாக இருந்தது.
முழுப்படத்தையும் அபிஷன் கொண்டு சென்ற விதம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அவரிடம் அபாரமான திறமை இருக்கிறது" என்று பாராட்டி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "பிரதீப் இங்கு இருக்கிறார். அவருடைய எல்லாப் படங்களையும் நான் பார்த்திருக்கிறேன். நான் உங்களின் ரசிகன். எனக்கு தனுஷ் சார் ரொம்ப பிடிக்கும். நான் உங்களை பார்க்கும்போதெல்லாம் தனுஷ் சார் தான் ஞாபகத்துக்கு வருவார்.

நீங்கள் மிகச்சிறந்த நடிகர் மற்றும் நல்ல இயக்குநரும் கூட... இங்கு வந்தது மகிழ்ச்சி. ஆனந்த விகடன் ரொம்ப வருடங்களாகப் படித்துக்கொண்டிருக்கிறேன். நான் சென்னையில் தான் பிறந்தேன். அதனால் ஆனந்த விகடன் பற்றி எனக்கு தெரியும்" என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.















