செய்திகள் :

Sowcar Janaki: நடிகை செளகார் ஜானகி காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

post image

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

ஆனால், இன்று மதியம் 2 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இவருக்கு வயது 94. சங்கரமஞ்சி ஜானகி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சௌகார் ஜானகி என்றே திரையுலகிலும் ரசிகர்களாலும் அன்போடு அழைக்கப்பட்டு வந்தார்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு தென்னிந்திய மொழிகளிலும் கடந்த 70 ஆண்டுகளாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து, இந்தியத் திரையுலகின் மிக முக்கியமான மூத்த கலைஞராகத் திகழ்ந்தார்.

திரைத்துறை மற்றும் கலை உலகிற்கு இவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, ஒன்றிய அரசு 2022-ஆம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது. மறைந்த நடிகை சௌகார் ஜானகிக்கு யக்னா பிரபா கோட்டி, வெங்கடரமண சங்கரமஞ்சி, சசி ராவ் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

செளகார் ஜானகி
செளகார் ஜானகி

இந்தியத் திரையுலகில் தனக்கெனத் தனிமுத்திரை பதித்த மூத்த நடிகை சௌகார் ஜானகியின் மறைவு, ரசிகர்களையும் திரைத்துறையினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். தேனாம்பேட்டையிலுள்ள அவருடைய இல்லத்தில் இன்று மாலை 5 மணி முதல், அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

அஞ்சாதே : நல்லதும் கெட்டதும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 17

`சினி'ஸ்கோப் 17அஞ்சாதேமருத்துவமனையில் இருக்கும் கிருபாவின் அப்பாவுடைய சிகிச்சைக்காக சத்யா பணத்தைக் கட்டிவிட்டுப் போகிறான். பணத்துக்காக அலைந்து திரிந்துவிட்டு வரும் கிருபா, அதன் பொருட்டு தங்கை உத்ராவிட... மேலும் பார்க்க

AR Rahman: `சிறகு கொடுக்கும் மேடை' - ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விக்ரம் & பூஜா

புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் சோனி விழா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் 'தமிழ் ஐடல்' நிகழ்ச்சியின் முதல் சீசனை, 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். இசையமைப்பாளர் ... மேலும் பார்க்க

Deepa Venkat: "இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்க வரக் காரணம் இதான்" - தீபா வெங்கட் ஷேரிங்ஸ்

ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராம் & லீலா' நாளை திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில... மேலும் பார்க்க

Rio Raj: அப்போது 'ராம் இன் லீலா', இப்போது 'ராம் & லீலா'; சென்சாரினால் பட தலைப்பில் ஏற்பட்ட மாற்றம்!

'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ நடித்திருக்கும் 'ராம் & லீலா' படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிர... மேலும் பார்க்க

Kamal Haasan: "இந்தியாவின் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வலிமை கொண்டவை!" - கமல்ஹாசன்

Essel குழுமம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி, Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் மிகப் பிரமாண்டமான விழாவை நடத்தியது. தமிழ் திரையு... மேலும் பார்க்க

தியாகராஜன் குமாராஜாவின் 'பாக்கெட் நாவல்' 'லீலை' ரீரிலீஸ்: வதந்தி 2 இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் அப்டேட்

ஓடிடி-யில் வரவேற்பை அள்ளிக் கொண்டிருக்கும் 'வதந்தி சீசன் 2'வை இயக்கியவர் ஆண்ட்ரூ லூயிஸ். இதற்கு முன் 'கொலைகாரன்' படத்தை இயக்கியவர். த்ரில்லர் பட இயக்குநராக பெயரெடுத்துவிட்ட ஆண்ட்ரூவின் முதல் படமான 'லீ... மேலும் பார்க்க