செய்திகள் :

ராணிப்பேட்டை: விசிக நிர்வாகி கொடூரக் கொலை; விசாரணை வளையத்துக்குள் 4 பேர்; பழிக்குப் பழியாக நடந்ததா?

post image

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகேயுள்ள நாகலேரி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (52).

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த சிவா நேற்று இரவு பைக்கில் சென்று கொண்டிருந்தபோது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கொடூரமாக வெட்டி சாய்த்தது. இதில், சம்பவ இடத்திலேயே சிவா துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவலறிந்ததும், சிவாவின் உறவினர்களும், வி.சி.க நிர்வாகிகளும் அங்கு திரண்டு கொலையாளிகளை விரைவாகக் கைது செய்யக்கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் உறுதியளித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

இதையடுத்து, சிவாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீஸார் கொலைக்கான காரணத்தைக் கண்டறிய தீவிர விசாரணையில் இறங்கினர். அப்போது, முன்விரோத தகராறில் சிவா கொல்லப்பட்டிருப்பதாகத் தெரியவந்தது.

வி.சி.க நிர்வாகி சிவா
வி.சி.க நிர்வாகி சிவா

அதாவது, கடந்த ஏப்ரல் மாதம் 13-ம் தேதி, கலவை அருகேயுள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்த அருண்ராஜ் என்ற 19 வயது இளைஞன் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், வி.சி.க நிர்வாகி சிவாவின் மகன் குகன் (26) உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் நேற்று முன்தினம்தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். அருண்ராஜின் கொலைக்குப் பழிதீர்க்க அவரின் தரப்பு தயாராக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில், மகனைக் காப்பாற்றுவதற்காக சிவா எதிர்தரப்புடன் விரோதத்தை மேலும் வளர்த்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சிவா கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஆனாலும், வேறு ஏதேனும் காரணத்துக்காக சிவா கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் வேளையில், சந்தேகத்திற்கிடமான 4 பேரைப் பிடித்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கின்றனர். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் ஒருவித பதற்றமான சூழல் நிலவிக் கொண்டிருக்கிறது.

ஸ்மித் மிச்சாருக்குக் கத்திக்குத்து, விபரீதத்திற்குக் காரணமான விமானி யார்? - இதுவரை கிடைத்த தகவல்கள்

‘ஃபிளைதுபாய்’ FZ 1073 விமானம் நேற்று முன்தினம் (செப்டம்பர் 30) துபாய் நேரப்படி, காலையில் துபாயிலிருந்து கிளம்பியுள்ளது.இந்த விமானம் இஸ்ரேலின் டெல் அவிவ்வை நோக்கிப் பறந்திருக்கிறது. இந்த விமானத்தில் 17... மேலும் பார்க்க

பெரம்பலூர்: கல்குவாரியில் வாலிபர் கல்லால் அடித்துக் கொலை; குற்றவாளிகளைத் தேடும் போலீஸ்!

பெரம்பலூர் மாவட்டம், நெடுவாசல் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் மகன், வெற்றிவேல் (வயது: 27). துபாயில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். நண்பர்களுடன் சேர... மேலும் பார்க்க

புதுச்சேரி: `குற்றத்துக்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்'... தலைவிரித்தாடும் `கொலை' கலாசாரம்!

குற்றவாளிகளுக்குத் துணை நிற்கும் சட்டப் பிரிவுகள்புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் பரப்பளவு தலா சுமார் 3,700 சதுர கிலோமீட்டர்கள். அதேசமயம் காரைக்கால், மாஹே, ஏனாம் ... மேலும் பார்க்க

கவின்: `ஒரு பெண்ணை விரும்பினாங்கிறதுக்காக எங்க பிள்ளைய இப்படிக் கொல்லணுமா?' - பெற்றோர் போராட்டம்!

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர், நெல்லையைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததால் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் அம்மா போல இருக்கீங்க!’ -`லிஃப்ட்’ தந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கீரை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கீரைகளை மொத்தமாக வாங்கி கூடையில் சுமந்து, தினமும் நடந்து சென்று கீரைகளை விற்று பிழைப்பு நடத்துபவர் அவர். அதன்படி நே... மேலும் பார்க்க

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க