செய்திகள் :

ரிஷப ராசியா நீங்கள்? வாழ்வில் ஜெயிக்க... அதிர்ஷ்டம் தேடி வர 15 ஜோதிடக் குறிப்புகள்!

post image

ராசிக்கு அதிபதி சுக்கிரன். ஆகவே வசீகர தோற்றம் பெற்றிருப்பீர்கள். உங்களை எவரும் வெல்ல முடியாது. ஆனால், உங்களுக்கு நீங்கள் எதிரியாகலாம். இங்ஙனம் உங்கள் ராசி பற்றி விவரிக்கும் ஜோதிட நூல்கள், உங்கள் வெற்றிக்கான சூட்சுமத்தையும் சொல்கின்றன.

ரிஷபம் அதிர்ஷ்ட குறிப்புகள்

1. ரிஷபத்தை அறத்தின் உருவமாகச் சொல்வார்கள் ராசி மண்டலத்தை காலபுருஷன் வடிவில் எடுத்துக் கொண்டால், ரிஷப ராசி முகம் ஆகும். சகல கலைகளுக்கும் அழகியலுக்கும் அதிபதியான சுக்கிரன் இந்த ராசியின் அதிபதி. அவர் உங்களுக்கு வசீகர தோற்றத்தைத் தருவார்.

2. ராசியின் அதிபதி சுக்கிரன். ரிஷபம் சந்திரனுக்கு உச்ச வீடு. சுக்கிரன் உலகவியல் போகங்களை அளிப்பவர். அத்துடன், அவற்றுக்கு அடிப்படையான செல்வத்தையும் சேர்த்து அளிப்பவர். சந்திரனோ தண்ணீர் ராசிக்கு அதிபதி. மனோகாரகனான இவர், தளராத மனத்துடன் செயலில் நிலைக்கச் செய்து, வெற்றியைச் சந்திக்க உறுதுணையாக செயல்படுவார்.

3. ரிஷப ராசியில் பிறந்த உங்களை எதிர்த்துப் போரிடுவது கடினம். உங்களை எதிர்ப்பவர்கள்தான் தோற்றுப் போவார்கள். எதிரிக்கு எப்போதும் சவாலாகவே இருப்பீர்கள். ஆனாலும், நீங்கள் இயல்பிலேயே சாதுவாகத்தான் இருப்பீர்கள்.

4. மற்றவர்களுக்கு உதாரண புருஷராகத் திகழ்வீர்கள். உங்களின் செயல்பாடுகள் மற்றவர்களுக்கு சிறந்ததொரு வழிகாட்டுதலைத் தரும். பொதுக் காரியங்களிலும் உங்களுக்கு மிகுந்த ஈடுபாடு இருக்கும். அதேபோல், உடன் இருப்பவர்களுடன் சேர்ந்து முன்னேறுவதே முன்னேற்றம் என்பது தங்களின் சித்தாந்தமாக இருக்கும்.

5. ஆற அமர யோசனையில் ஆழ்ந்து, பதற்றம் இல்லாமல் செயல்படும் போக்கு இருக்கும். வேலைப்பளுவும் மனதைத் தளரவிடாது. பொறுப்பை தட்டிக்கழிக்கும் மனம் இருக்காது. சிலநேரம் காளையின் மெத்தனம் பளிச்சிடும்.

6. தோல்வியால் மனம் தளரமாட்டீர்கள். சிலநேரம் தோல்வியை ஒப்புக்கொண்டு மன சமாதானத்தை ஏற்பீர்கள். சில நேரங்களில், வெற்றி பெறவேண்டும் என்ற ஆர்வத்தில், ஏற்படப் போகும் தடைகளை எண்ணிப் பார்க்காமல் செயல்பட்டு, தோல்வியைத் தழுவுவதும் உண்டு. எனினும் அனுபவத்தைப் பாடமாக ஏற்பீர்கள்.

7. ராசிக்கு இரண்டாம் இடமான வாக்கு ஸ்தானத்துக்கு உரியவர் புதன். ஆகவே, எதையும் சூட்சுமமாகப் புரியவைப்பதில் சமர்த்தர் நீங்கள். உங்களின் எண்ணத்தை முகக் குறிப்பாலேயே எதிரில் உள்ளவர்களுக்கு உணர்த்திவிடுவீர்கள். மற்றவர்களைக் கணிப்பதிலும் நீங்கள் கில்லாடி.

8. உங்கள் ராசிக்கு 3-வது ஸ்தானமான முயற்சி ஸ்தானத்துக்கு அதிபதி சந்திரன் என்பதால், ‘முயற்சி திருவினையாக்கும்’ என்றபடி எதையும் முயற்சி செய்து முடித்துக் காட்டுவீர்கள். சகோதரர்களிடம் அதிகம் அக்கறை காட்டுவீர்கள்.

ரிஷப ராசியும் ஆயுள் பலன்களும்

9. பெற்ற அன்னையிடம் பெரும் பக்தி கொண்டிருப்பீர்கள். தாயார் ஸ்தானத்தைக் குறிக்கும் சிம்ம ராசிக்கு சூரியன் அதிபதியாக இருப்பதால், உலகத்துக்கே ஒளி தரும் சூரியனைப் போல், உற்றார், உறவினர் எல்லோரையும் நேசிப்பீர்கள். அவர்களை அனுசரித்துச் செல்வீர்கள்.

10. உங்களுக்குப் பகைவர்கள் இருக்க மாட்டார்கள். அதற்காக, `நமக்கு எதிரிகளே இல்லை’ என்றும் நீங்கள் புளகாங்கிதம் அடையமுடியாது. காரணம், உங்களைப் பொறுத்தவரை உங்களுக்கு நீங்கள்தான் எதிரி. உங்கள் பேச்சு, செயல் அனைத்துக்கும் நீங்களே எதிர்பாராத படி ஒரு பக்க விளைவு ஏற்படும். ஆகவே, பேசும்போதும் செயல்படும்போதும் அதீத கவனம் தேவை.

11. உங்கள் ராசிக்கு 3-ம் இடமான கடகத்தில் குரு உச்சம் பெற்றிருக்கும்போது நீங்கள் பிறந்திருந்தால், திரைத் துறையில் சாதனை படைப்பீர்கள். இயற்கையான சூழலில் நன்றாக உறங்குவீர்கள்.

12. உங்களின் வாழ்க்கைத் துணை உங்களை விட வேகமாக இருப்பார். நிர்வாகத் திறமையில் அதீத திறமையுடன் திகழ்வார். அதேநேரம், சில விஷயங்களில் உங்களைப் புரிந்து கொள்ளாமல் வாக்குவாதம் செய்வார். பொறுத்துக் கொள்ளுங்கள். அவர் எதைச் செய்தாலும் உங்கள் நன்மைக்காகவே இருக்கும்.

13. சிலர், சிறு வயதில் அனுபவம் இல்லாமல் சில தொழில்களில் ஈடுபட்டு, நஷ்டத்தை அடைந் திருப்பீர்கள். எனினும், அதன் மூலம் கிடைத்த அனுபவம் இனி உங்களுக்கு உதவியாக இருக்கும். நாற்பது வயதுக்கு மேல் வாழ்வில் எதிர்பாராத திருப்பங்கள் நிகழும்.

14. ரிஷபம் என்பது நந்திகேஸ்வரரைக் குறிப்பதால், பிரதோஷ காலத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் ஈசனை தரிசித்து வழிபடுவது விசேஷம். இதனால், உங்கள் வாழ்க்கை வளம் பெறும். நந்தியெம்பெருமானுக்கு திருமணம் செய்து வைத்த திருவையாறு திருத்தலத்துக்கு ஒருமுறை சென்று அருள்மிகு ஐயாறப்பரையும் அறம்வளர்த்த நாயகியையும் தரிசனம் செய்து, வழிபட்டு வாருங்கள். உங்கள் வாழ்க்கையில் சகல இன்னல்களும் நீங்கும்; இனியவை யாவும் நடந்தேறும்.

அதேபோன்று தொழிலில் பின்னடைவு, குடும்பத்தில் பிரச்னை, வேலையில் சச்சரவுகள் என்று மனதுக்கு வருத்தம் ஏற்படும் சூழலில், பசுவுக்கு அகத்திக் கீரை, வாழைப்பழம் கொடுங்கள். பிரச்னைகள் மெள்ள மெள்ள விலகும்.

15. இவர்கள் சுக்கிரனை வழிபட வேண்டும். ‘சும் சுக்ராய நம:’ என்று சொல்லி வழிபடலாம். அதேபோல், ‘விரும் விருஷபாய நம:’ என்று சொல்லி ராசியை வழிபட வேண்டும். மாறுபட்ட தகுதியில் அத்தனை கிரகங்களும் ராசியில் அடங்குவதால், த்ரிகோணாதி பதிகளான சுக்கிரன், புதன், சனி ஆகியோரை வணங்குவது சிறப்பு.

நல்ல வேலைவாய்ப்பு சீக்கிரம் அமைய 11 எளிய பரிகாரங்கள் - விளக்குகிறார் ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்!

படிப்புக்கேற்ற - திருப்தியான சம்பளத்துடன் நல்ல வேலை அமைவது அபூர்வம். சிலருக்கு எளிதில் நல்ல வேலை அமைந்துவிடும்; சிலருக்கு வேலையே அமையாது. இதுபற்றி ஜோதிடம் சொல்வது என்ன, எந்த ராசிக்கு வேலை யோகம் உண்டு,... மேலும் பார்க்க

நட்சத்திரப் பலன்கள் அக்டோபர் 2 முதல் 8 வரை #VikatanPhotoCards

நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் நட்சத்திரப் பலன்கள் மேலும் பார்க்க

உங்கள் ஜாதகத்தில் சனியுடன் வேறு கிரகம் சேர்ந்திருக்கிறதா? பரிகாரம் அவசியமா? - தெரிந்துகொள்ளுங்கள்!

ஜோதிடத்தில் அதிகம் கவனம் பெறும் கிரகம் சனி. ஜாதகப்படியும் கோசாரப்படியும் அவருடைய நிலைகளை உன்னிப்பாக கவனிப்போம். ஆனால், அவர் பயத்தைத் தருபவர் அல்ல; வினைகளைத் தீர்க்க உதவும் நீதிமான். அதேநேரம், ஜாதகத்தி... மேலும் பார்க்க

உங்கள் குழந்தைக்கு எந்த நாளில் பெயர் சூட்டுவது நல்லது? - முக்கிய தினங்களுக்கான ஜோதிட வழிகாட்டல்!

நம் வாழ்வும் கனவும் நம் பிள்ளைகள்தானே. அவர்களுக்கான முக்கிய தினங்கள் விசேஷமாக அமைவது சிறப்பல்லவா? அவ்வகையில் உங்கள் பிள்ளைகள் அல்லது பேரக் குழந்தைகளுக்கான... பெயர் சூட்டுவது, முடிக்காணிக்கை, காது குத்... மேலும் பார்க்க

கடகத்தில் குரு - செவ்வாய் சேர்க்கை: இந்த கிரகச் சேர்க்கையால் எந்தெந்த ராசிகளுக்கு ராஜ யோகம்?

மேஷம்: உங்கள் ராசிக்கு 4-ம் இடத்துக்குச் செவ்வாய் வந்திருப்பது, ஓரளவு நன்மையான பலன்களையே தரும். நான்கில் இருக்கும் குருவுடன் சேர்ந்து அமர்ந்துள்ளதால், எதிர்பாராத சில ஆதாயங்கள் உண்டாகும். எனினும் இந்தக... மேலும் பார்க்க

வார ராசிபலன் | 28.9.26 முதல் 4.10.26 வரை | இந்த வாரம் யாருக்கு யோகம்? | ஜோதிடர் பாரதி ஸ்ரீதர்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களை கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் பாரதி ஶ்ரீதர் September 28 th to October 4th 2026, vaara rasipalan. this video offers guidance on love, career... மேலும் பார்க்க