செய்திகள் :

"ரூ.1 லட்சம் முதலீட்டிக்கு ரூ.8000 மாத வட்டி"- ரூ.300 கோடியைச் சுருட்டிய மதுரை செண்பக பாண்டியன் கைது

post image

சேலம் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர்கள் விஜயராகவன்- ராகினி தம்பதி மற்றும் மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் ஆகிய மூவரும் சேர்ந்து பிராஃபிட் எவர் டிரேடர்ஸ் என்கிற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 2024-ம் ஆண்டு தொடங்கியிருக்கிறார்கள்.

தங்களின் நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் பங்குதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் தவறாமல் 8 ஆயிரம் ரூபாய் வட்டி தொகை வழங்கப்படும். மேலும் அதிக முதலீட்டிற்கு ஏற்ப பல்வேறு சலுகைகள் வழங்கப்படும் எனக் கவர்ச்சிகர திட்டங்களை மக்களிடம் தெரிவித்திருக்கிறார்கள்.

இதனை உண்மையென நம்பிய நடுத்தர மக்கள் பலரும் தங்களின் சேமிப்பு தொகையை இந்த நிறுவனத்தில் முதலீடு செய்திருக்கிறார்கள். ஆரம்பத்தில் சிலருக்கு வட்டித் தொகையை நிறுவனம் மூலம் வழங்கியிருக்கிறார்கள்.

இதனால் கவரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள். பல மாதங்கள் ஆகியும் யாருக்கும் வட்டி தொகை வழங்கப்படாத காரணத்தால் சந்தேகமடைந்த மக்கள், பொருளாதார குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருக்கிறார்கள்.

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்து ஆயிரக்கணக்கானவர்களிடம் 300 கோடி ரூபாய்க்கும் மேல் பெற்று மோசடியில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

தலைமறைவாக இருந்த மூன்று பேரையும் தேடி வந்த நிலையில், நிதி நிறுவன இயக்குநரான மதுரையைச் சேர்ந்த செண்பக பாண்டியன் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சேலம் தம்பியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

கைதான செண்பக பாண்டியன்
கைதான செண்பக பாண்டியன்

இது குறித்து தெரிவித்த சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், "மக்களின் பேராசையை மட்டுமே முதலீடாகக் கொண்டு இந்த மெகா மோசடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். சேலம் மட்டுமின்றி தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் ஏமாந்திருக்கிறார்கள்.

இதில் கொடுமை என்னவென்றால் பலரும் தங்களின் வீடுகளை அடமானம் வைத்து முதலீடு செய்திருக்கிறார்கள். இரண்டு மாதம் மட்டுமே வட்டி கொடுத்திருக்கிறார்கள். மூன்றாயிரம் கோடி ரூபாயைத் தாண்டும்" என்றனர்.

இரவு பார்ட்டிக்கு எதிர்ப்பு, கேமரா மூலம் கண்காணிப்பு: ஆத்திரத்தில் மாமனாரை ஆள்வைத்து கொன்ற மருமகள்!

உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரைச் சேர்ந்தவர் வினீத் மினோச்சா (63). தொழிலதிபரான இவரின் மருமகள் பெயர், ஷாலு. சம்பவத்தன்று வினீத் அவரது வீட்டில் 26 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பா... மேலும் பார்க்க

நெல்லை: மது பாட்டிலுக்கு ஆசைப்பட்டு கார் கடத்திய இளைஞர்கள் - போதை தெளிந்ததும் சிறை சென்ற சோகம்!

நெல்லை டவுன், கல்லத்தி முடுக்கு தெருவைச் சேர்ந்தவர், சூர்ய சரவணன். பட்டப் படிப்பை முடித்த இவர், வேலை தேடிவருகிறார். தன் தந்தை குமரகுரு ராமலிங்கத்தின் காரை, சூர்ய சரவணன் பயன்படுத்தி வந்தார்.வீட்டுக்குள... மேலும் பார்க்க

`Will Kill Sugar Daddy Soon' - மனைவியைக் கொன்று தலையை ஃபிரிட்ஜில் வைத்த இளைஞர் `பகீர்' தகவல்!

அஸ்ஸாம் மாநிலம், கவுகாத்தியில் உள்ள அடுக்கு மாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் வி... மேலும் பார்க்க

குழந்தை திருமணங்களால் மூன்று சிறுமிகள் கர்ப்பம்! – போக்சோ வழக்கில் இளைஞர்களை தேடும் கடலூர் போலீஸ்

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே இருக்கும் ஒரு கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, செவிலியர் கல்லூரியில் படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்குச் சென்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது.... மேலும் பார்க்க

வீட்டிக்கு வெளியில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட மணிப்பூர் பாடகர் - அடித்து கொன்ற ஹோட்டல் ஊழியர்கள்

மணிப்பூரை சேர்ந்த பாடகர் விக்ரம் சிங் என்பவர் டெல்லி அருகில் உள்ள கிலோகரி என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக வசித்து வந்தார். அவரது வீட்டிற்கு அருகில் ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்குள்ள விக்ரம் சிங் வீட்டிற்... மேலும் பார்க்க