செய்திகள் :

ரூ.10,000 சம்பள பாக்கி; ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கி, ரூ.24 கோடி மதிப்பிலான பொருள்களை எரித்த தொழிலாளி

post image

குஜராத்தில் உள்ள சூரத்தில் ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை என்கிற சந்தை இருக்கிறது.

அங்கே உள்ள 639-ம் எண் கடையில், கடந்த ஏப்ரல் மாதம் வினோத் பண்டிட் சாவ்லே கணக்காளராகச் சேர்ந்துள்ளார். ஆனால், அந்த வேலை அவருக்குச் செட் ஆகாததால் ஜூன் மாதமே வேலையை விட்டு நின்றுவிட்டார்.

ஆனால், அவருக்கு அந்தக் கடையில் உரிமையாளர் ரூ.10,000 சம்பளப் பாக்கி தர வேண்டியிருந்திருக்கிறது. இது வினோத்திற்குக் கிடைக்கவில்லை.

இதனால், அந்த உரிமையாளருக்குப் பாடம் புகட்டத் திட்டமிட்டிருக்கிறார் வினோத்.

ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை
ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தை

இதையடுத்து, அருகிலுள்ள கிராமம் ஒன்றின் பெட்ரோல் பங்கில் ரூ.150-க்கு பெட்ரோல் வாங்கிவிட்டு, செப்டம்பர் 8-ம் தேதி இரவு 8-9 மணிக்கு ஷ்யாம் சங்கினி ஜவுளி சந்தைக்கு வந்திருக்கிறார்.

ஆள் நடமாட்டம் குறைந்ததும் நள்ளிரவு 12 மணிக்கு முகத்தை வெள்ளைத் துணியால் மறைத்துக்கொண்டு, தான் வேலை பார்த்த கடைக்குச் சென்றிருக்கிறார்.

அங்கே வெளியே வைக்கப்பட்டிருந்த துணிப்பைகள், துணிமூட்டைகள் மீது பெட்ரோல் ஊற்றிப் பற்றவைத்துள்ளார்.

அது சந்தை என்பதால் அருகருகே கடை அமைந்திருக்கிறது. தீப் பற்றிய உடனே, பக்கத்துக் கடைகளுக்கும் அது பரவியுள்ளது. இதில் 14 கடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் இது விபத்து என்றுதான் நினைக்கப்பட்டது. ஆனால், சிசிடிவியை ஆராய்ந்தபோது, வினோத்தின் செயல் தெரியவந்திருக்கிறது.

இந்தத் தீ விபத்தினால் ரூ.24 கோடி மதிப்பிலான துணிகள் எரிந்து சாம்பலாகியுள்ளன.வினோத் தேடப்படுகிறார் என்று தெரிந்ததும் அவர் அவரது குடும்பத்துடன் ராஜஸ்தான், அயோத்தி எனத் தலைமறைவாகியிருக்கிறார்.

பின்னர், அவர் மீண்டும் சூரத் திரும்பியபோது வினோத்தைக் கைது செய்திருக்கின்றனர் சூரத் போலீசார்.

மேலும், வினோத்திற்குப் பெட்ரோல் பங்க் விதிமுறைகளின்படி தான் பெட்ரோல் வழங்கியதா என்பதையும், இந்தச் சம்பவத்தில் வேறு யாராவது சம்பந்தம் உள்ளதா என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சாதி பாகுபாட்டால் IIT Bombay மாணவர் தற்கொலை; "அவனிடம் நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது" - தந்தை

ஐ.ஐ.டி பாம்பேயில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார் மாணவர் சாஹில் வாகோடே.இரண்டாம் ஆண்டு மிட் செமஸ்டர் தேர்வின்போது, ChatGPT பயன்படுத்தி தேர்வறையில் பேராசிரியரிடம் இவர் மாட்டியதாகக் கூறப்படுகிறது.... மேலும் பார்க்க

தீய சக்தியை விரட்ட சடங்கு; பூசாரிகளைச் சுட்டுக்கொன்ற கணவன்; மனைவி, மகனுக்கு நேர்ந்த கொடூரம்

உத்தரப் பிரதேச மாநிலம் ஆசம்கர் நகரைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியபோது, ​​அவரது மனைவி பபிதா சிங் (32), பூசாரிகள் மகேந்திர பதக் (60) மற்றும் அகிலேஷ் மிஸ்ரா (50) ஆகிய இர... மேலும் பார்க்க

சேகர் ரெட்டி வீட்டில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் திருட்டு; பணிப்பெண்கள் கைது; நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம், காட்பாடி உட்கோட்டத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு காவல் நிலையத்தில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில் பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது. இந்த வீட்டில் நம்பத் தகுந்த பணியாட்... மேலும் பார்க்க

TVK: வார்டு செயலாளர் பதவி பறிப்பு; தற்கொலை செய்த தவெக நிர்வாகி; மாவட்ட செயலாளர் மீது மனைவி புகார்

ராமேஸ்வரம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன். முன்னாள் ராணுவ வீரரான இவர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின் வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தார். இவருக்கு தேவகி என்ற மனைவியும், இரு குழந்தை... மேலும் பார்க்க

திடீர் என்ட்ரி கொடுத்த விஜிலென்ஸ்; ரூ.1,45,000 பணத்துடன் ஓட்டம் பிடித்த ஜீப் டிரைவர்; என்ன நடந்தது?

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அலுவலத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி தலைமையில்‌ ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீஸார் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். நகராட்சியின் அனைத்துக் கதவுகளையும் ... மேலும் பார்க்க

போலி நகை விற்றதாக ஜூவல்லரியிடம் பணம் கேட்டு மிரட்டிய புகார் - பசும்பொன் மக்கள் கட்சி தலைவர் கைது!

தூத்துக்குடி, மூன்றாவது மைல் பசும்பொன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவர், பசும்பொன் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர். இவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகி இசக்கிராஜ் என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகள... மேலும் பார்க்க