செய்திகள் :

ரூ.3,383 கோடிக்கு சொத்து இருந்தும் மும்பை பா.ஜ.க எம்.எல்.ஏ. தெருக்களில் யாசகம் கேட்டு சென்றது ஏன்?

post image

மும்பை காட்கோபர் கிழக்கு பகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பராக் ஷா. மகாராஷ்டிராவில் உள்ள பணக்கார எம்.எல்.ஏ.க்களில் ஒருவராக கருதப்படும் பராக் ஷாவிற்கு ரூ.3,383 கோடி அளவுக்கு சொத்து இருக்கிறது. ஏராளமான கார்கள், ஆடம்பர பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சமீபத்தில் தனது பாதுகாப்பு, வாகனம் மற்றும் விலையுயர்ந்த உடைமைகளை விட்டுவிட்டு காட்கோபர் தெருக்களில் யாசகம் கேட்பவர் போல் பல மணி நேரத்தை கழித்தார்.

இந்த அசாதாரண அனுபவம் தனக்கு 'வாழ்க்கையின் யதார்த்தத்தை' புரிய வைத்ததாக தெரிவித்துள்ளார்.

காட்கோபர் கிழக்கு பா.ஜ.க எம்எல்ஏ யாசகர் வேடத்தில் இருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜைன மத குரு நம்முனியின் ஆலோசனையின் பேரில் ஷா இந்த விஷயத்தை மேற்கொண்டார்.

மக்கள் தன்னை அடையாளம் கண்டுகொள்ளாமல் இருக்க அவர் ஒப்பனை செய்து கொண்டார், பின்னர் யாசகம் கேட்டு காட்கோபர் தெருக்களை சுற்றி வந்தார்.

யாசகம் கேட்பராக தெருக்களில் சுற்றிய அனுபவம் குறித்து ஷா கூறுகையில், ''ஒரு நபரின் சமூக நிலை தெரியாதபோது மக்களின் நடத்தை எவ்வாறு மாறுகிறது என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. மரியாதையுடன் என்னை சந்திக்க வரிசையில் நிற்கும் அதே மக்களிடம் நான் செல்லும்போது, ​​​​என்னை விட உயரமாகிறார்கள். எனவே, அதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்," என்று அவர் கூறினார்.

அவர் தெருக்களில் இருந்தபோது, ​​​​சாதாரண மும்பை மக்களின் பெருந்தன்மையை கண்டதாக ஷா கூறினார். ஒரு நபர் அவரிடம் ரூ. 20 கொடுத்து உணவு உண்ணும்படி கேட்டுக்கொண்டார். அதேசமயம் ஷா தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறிய பிறகு சமோசா விற்பனையாளர் பணம் எதுவும் வாங்காமல் அவருக்கு உணவு கொடுத்தார் என்பதையும் தெரிவித்தார்.

யாசகம் கேட்பது மட்டுமின்றி, கிடைத்த உணவையும் சாப்பிட்டுவிட்டு, யாசகம் கேட்பவர் வேடத்தில் சாலையோரம் அமர்ந்திருந்தார் எம்எல்ஏ. பின்னர் அவர் தனது குரு மற்றும் பிறரிடம் அந்த அனுபவத்தைச் பகிர்ந்து கொண்டார். மேக்கப்பை அகற்றிய பிறகு, ஷா ஏற்கனவே யாசகம் கேட்டு சென்ற அதே இடங்களுக்கு மீண்டும் சென்றதாகவும், யாசகம் கேட்டு மாறுவேடமிட்டு அவர் சந்தித்த நபர்களை மீண்டும் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

ஷாவின் இந்த அசாதாரண சோதனையானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2024ம் ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கான அவரது பிரமாணப் பத்திரத்தில், அவர் தன்னிடம் மொத்த சொத்து ரூ. 3,383 கோடிக்கும் அதிகமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். அந்த நேரத்தில் அவர் மாநிலத்தின் பணக்கார வேட்பாளராக இருந்தார். பராக் ஷா ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.!

"அந்த இடத்திலேயே இறந்திருப்பேன்" - இடித்து விட்டு தப்பியதாக கார் டிரைவர் மீது டெல்லி பெண் புகார்

டெல்லி அருகில் உள்ள குர்கான் என்ற இடத்தில் நேற்று இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்ணை காரில் வந்த ஒருவர் விரட்டி சென்றார். ஒரு கட்டத்தில் அப்பெண்ணின் வாகனத்தை காரில் வந்தவர் குறுக்கிட்டார். இதனால் அப்பெ... மேலும் பார்க்க

'நண்பா என் நிலத்தை மீட்டுக்கொடு' - பிரதமர் மோடியை சந்தித்து முறையிட்ட 81 வயது பள்ளி தோழர்

மும்பை பயந்தர் கிழக்கு பகுதியில், வசிப்பவர் அஸ்கரலி வோரா(81). இவர் பயந்தர் கிழக்கு பகுதியில் 1989ம் ஆண்டு 2,810 சதுர மீட்டர் நிலத்தை விலைக்கு வாங்கினார். ஆனால் அந்த நிலத்தை இரண்டு பில்டர்கள் ஆக்கிரமித... மேலும் பார்க்க

அதிகரிக்கும் மக்கள் தொகை, விரிவடையும் நகரம்: கடல் நீரை குடிநீராக ஏற்க தயாராகும் மும்பை மக்கள்

மும்பையில் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதோடு மும்பை நகரமும் விரிவடைந்து வருகிறது. ஏற்கனவே மும்பைக்கு அடுத்து நவிமும்பை என்ற இரண்டாவது மும்பை உருவாக்கப்பட்டுள்ள நிலையில் மூன்றாவது மு... மேலும் பார்க்க

பிரிக்ஸ் மாநாட்டு வந்துள்ள ரஷ்ய அதிபர் புடின் - திருக்குறளை பரிசாக வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உறுப்பு நாடுகளின் தலைவர்கள் வந்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரையும் பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் சந்தித்து பேசி வ... மேலும் பார்க்க

`இந்தியாவிடம் 190 அணு ஆயுதங்கள் இருக்கலாம்' - அமெரிக்க ஆய்வு அறிக்கை சொல்வதென்ன?

இந்தியாவிடம் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்தியாவிடம் 190 அணுகுண்டுகள் இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தானை விட சுமார் 20 அதிகம் என்று அமெரிக்கா... மேலும் பார்க்க

"மும்பை முழுக்க குப்பைமயம்" - நாட்டின் பணக்கார மாநகராட்சியைச் சாடிய உயர்நீதிமன்றம்

மும்பை காஞ்சூர்மார்க் குப்பைக் கிடங்கில் இருந்து வரும் மாசு கலந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள கன்னம்வார் நகர் மக்கள் இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு நீதிமன்றத்தில்... மேலும் பார்க்க