"அதிமுக-வுக்கு திமுக வாக்கு கேட்கிறது; திமுக-வுக்கு அதிமுக வாக்கு கேட்கிறது" - ஆ...
"ரூ.4000 வந்ததா?; வேலையில்லா பட்டதாரி படத்துல நடிச்ச தனுஷே அரசியலுக்கு வந்திட்டாரு.!” - கனிமொழி
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது.
அந்தவகையில் நேற்றைய தினம் திமுக தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து எம்.பி கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், " 'தூய சக்தி, தீய சக்தி.. அன்பு தம்பி விஜய் இதையே 6 மாசமா பேசுறியே தம்பி.. டயலாக் எழுதுறவர மாற்றுங்க'.

மக்களை ஏமாற்றி விடலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார். தம்பி விஜய் அவர்களே இந்த நாடகம், இந்த ரீல்ஸ், சினிமா சூட்டிங் எல்லாம் தமிழ்நாட்டில் ரொம்ப நாட்களுக்கு ஓடாது தம்பி.
உண்மையான தீய சக்தி, தூரமான சக்தி, தூர்ந்துபோன சக்தி யார் என்று மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களின் தீர்ப்பை மதிக்காமல் அரசியல் பேரம் பேசும் தவெவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
ஆட்சி பொறுப்புக்கு வந்த பிறகு எத்தனை வாக்குறுதிகள் அறிவித்தார்கள். ரூ.2500 வந்ததா? மாதத்திற்கு 6 சிலிண்டர் வந்ததா? வேலையில்லா பட்டதாரிகளுக்கு ரூ. 4000 வந்ததா? வரவில்லை.
ஆனால் வேலையில்லா பட்டதாரியில் நடித்த தனுஷே அரசியலுக்கு வந்துவிட்டார். முழு விவசாயக்கடன் ரத்து என்று கூறினார்.
தேர்தல் முடிந்த பிறகு விவசாயிகளை ரத்து செய்தார். ஆனால் கடனை ரத்து செய்யவில்லை. எதற்கெடுத்தாலும் கஜானா காலி, கஜானா காலி என்று சொல்லிக்கொடுக்கிறார்.
கடற்கரையை பார்த்த மாதிரி தலைமை செயலகம் கட்ட மட்டும் பணம் இருக்கிறதா?" என்று முதல்வர் விஜய்யை விமர்சித்து பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb















