செய்திகள் :

ரூ.9 கோடி மதிப்புள்ள மருந்து ரூ.2.5 லட்சம்; 7 குழந்தைகளுக்கும் இலவச சிகிச்சைக்கு உதவிய மருத்துவர்!

post image

ஹைதராபாத் மருத்துவரின் முயற்சியால் அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு குழந்தைகளுக்கு ஓராண்டுக்கான மருந்து இலவசமாகக் கிடைக்க உள்ளது.

மருத்துவர் சிவரஞ்சனி

Allan-Herndon-Dudley Syndrome (AHDS) எனப்படும் அரிய மரபணு நோயால் பாதிக்கப்பட்ட ஏழு குழந்தைகளுக்கு, 'Tiratricol' என்ற மருந்து இலவசமாக வழங்கப்பட உள்ளது. இந்த நோயால் மூளைக்குத் தைராய்டு ஹார்மோன் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டு, குழந்தைகளின் மூளை வளர்ச்சி மற்றும் நரம்பு மண்டலச் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.

இந்நிலையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சிவரஞ்சனி சந்தோஷ், Access to Medicines India அமைப்புடன் இணைந்து மாற்று வழியைத் தேடினார். நெதர்லாந்தின் Pharmaceutical Accountability Foundation மற்றும் Transvaal Pharmacy உதவியுடன் மருந்தின் சிறப்பு தயாரிப்பு முறை உருவாக்கப்பட்டது.

இந்த முயற்சி இறுதித் தீர்வல்ல. மருந்தை இந்தியாவிலேயே தயாரித்து, இதே நோயால் பாதிக்கப்படும் மற்ற குழந்தைகளுக்கும் எளிதாகக் கிடைக்கச் செய்ய மத்திய அரசை அணுக டாக்டர் சிவரஞ்சனி திட்டமிட்டுள்ளார்.

தருமபுரி : வீடுகளுக்குள் படையெடுத்து வரும் எறும்புகள்! - நிம்மதி இழந்து தவிக்கும் மக்கள்

படையெடுத்து வரும் எறும்புகளால் வீட்டில் இருக்க முடியாமல், சாப்பிட முடியாமல், நிம்மதியாக உறங்க முடியாமல் ஒவ்வொரு நிமிடத்தையும் வேதனையுடன் கழித்து வருகிறார்கள் முள்ளிக்காடு கிராம மக்கள். எங்கெங்கும் எறு... மேலும் பார்க்க

Doctor Vikatan: லோ BP பிரச்னை... உணவுகளின் மூலம் ரத்த அழுத்த அளவை அதிகரிக்கலாமா?

Doctor Vikatan: எனக்கு வயது 42. பல வருடங்களாகலோ BP பிரச்னை இருக்கிறது. இதற்கு சிகிச்சை எடுக்கவில்லை. உப்பை அதிகரிப்பது போல உணவின் மூலம் இந்தப் பிரச்னையைச் சரியாக்க முடியுமா?பதில் சொல்கிறார், சென்னையைச... மேலும் பார்க்க

Doctor Vikatan: டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு அடிக்கடி நோய்த் தொற்று ஏற்படும் என்பது உண்மையா?

Doctor Vikatan: என் மனைவிக்கு நீரிழிவு உள்ளது. அவருக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமல் போகிறது. டயாபட்டீஸ் இருந்தால் இப்படித்தான் அடிக்கடி தொற்றுநோய்கள் பாதிக்கும் என்கிறார்களே, அப்படியா? அதைத் தவிர்க... மேலும் பார்க்க

Doctor Vikatan: வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளும் ஆபத்தானவையா... தொற்றைப் பரப்புமா?

Doctor Vikatan: எங்கள் வீட்டில் இரண்டு நாய்களும், மூன்று பூனைகளும் வளர்க்கிறோம். வீட்டில் வளர்த்தாலும், செல்லப்பிராணிகளால் தொற்றுநோய்கள் பரவும் என்கிறார்கள் சிலர். இது எந்த அளவுக்கு உண்மை... செல்லப் ப... மேலும் பார்க்க

Doctor Vikatan: 50 வயதில் மலச்சிக்கல்... மருந்து எடுத்தால் மட்டுமே தீர்வு; நிரந்தரமாகிவிடுமோ?

Doctor Vikatan: என் வயது 50. எனக்கு மலச்சிக்கல் பிரச்னை உள்ளது. அது ரொம்பவும் தீவிரமாகும்போது மட்டும் மருந்து எடுத்துக்கொள்வேன். மலச்சிக்கல் பிரச்னை இருந்தால் எடை அதிகரிப்பும் இருக்குமா.... மருந்து எட... மேலும் பார்க்க

கருவிலேயே சிசுவுக்கு அறுவை சிகிச்சை: எய்ம்ஸ் மருத்துவர்களின் வரலாற்றுச் சாதனை!

இந்திய மருத்துவ வரலாற்றில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. தாயின் கருப்பைக்குள் 25 வாரக் கருவாக இருந்த சிசுவுக்கு, கடுமையான முதுகுத் தண்டுவடக் குறைபாட்டைச் சரிசெய்யும் ஆறு மணி... மேலும் பார்க்க