செய்திகள் :

ரூ.97 வரை சரிந்த இந்திய ரூபாய்; இப்போது ரூ.95-96-ல் நிலைப்பது ஏன்? 4 காரணங்கள் என்னென்ன?

post image

ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, இந்திய ரூபாய் மதிப்பு ஒரு டாலருக்கு ரூ.97 வரை எல்லாம் சரிந்தது. ஆனால், இப்போது ரூ.95-96-க்குள் வர்த்தகமாகி வருகிறது.

இதை இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாகிவிட்டது என்று கூறுவதை விட, நிலையாகிவிட்டது என்று கூறலாம்.

இந்திய ரூபாய் நிலையாக வர்த்தகமாகி வருவதற்குக் காரணம் என்ன என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

1. இந்திய ரூபாய் மதிப்பு சரிந்தபோதெல்லாம், அதை ஓரளவு சரிப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி கடுமையாக நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்திய ரூபாய்
இந்திய ரூபாய்

அமெரிக்க டாலர்களைச் சந்தையில் விற்று, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பைச் சரிசெய்தது.

2. ஈரான் போர் தொடர்ந்தாலும் முன்பு போல கச்சா எண்ணெயின் விலை 115 டாலர்களை எல்லாம் தாண்டவில்லை.

3. இன்னொரு பக்கம், தங்கம் இறக்குமதியையும் வரி மூலம் ஓரளவு குறைத்துவிட்டது மத்திய அரசு. கச்சா எண்ணெய் மற்றும் தங்கத்தினால் இந்திய ரூபாயின் மதிப்பு ஓரளவு நிலையாக இருக்கிறது.

4. மிக முக்கியமாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குச்சந்தையில் தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரி மாதத்தைத் தவிர, மீத வாரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவிலிருந்து முதலீடுகளை அதிகம் வெளியேற்றத்தான் செய்திருந்தனர்.

ஆனால், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஓரளவு நன்றாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் பங்குகளை வாங்கியிருக்கின்றனர்.

இனி அடுத்துப் பணவீக்கம் போன்ற அச்சங்கள் இருப்பதால், இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் சரியலாம் என்றும் பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Volkswagen: `1 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டம்' - வோக்ஸ்வேகன் முடிவின் பின்னணி?

ஜெர்மனியைச் சேர்ந்த சர்வதேச முன்னணி கார் உற்பத்தி நிறுவனமான வோக்ஸ்வேகன் (Volkswagen), சுமார் 1 லட்சம் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெர்மனி மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள், மி... மேலும் பார்க்க

``எனக்கு ரூ.10,000 கோடி கடன் இருக்கிறது" - `Rich Dad Poor Dad' ஆசிரியர் ராபர்ட் கியோசாகி தகவல்

உலகளவில் பொருளாதார அறிஞர்கள் பலரும் நிதி நிர்வாகம் தொடர்பாக தொடக்க நிலையில் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்குப் பரிந்துரைக்கப்படும் புத்தகங்களில் ஒன்று 'ரிச் டேட் புவர் டேட்' (Rich Dad Poor Dad). 1997-ஆம... மேலும் பார்க்க

``4 முறைக்கு மேல் ATMஇல் பணம் எடுத்தால் GST வசூலிக்கப்படும்" - SBI வங்கி அறிவிப்பு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கி கிளைகள் மூலம் தொடங்கப்பட்ட அடிப்படை சேமிப்பு வங்கி வைப்பு (BSBD) கணக்குகளுக்கான பணம் எடுத்தல் (Cash Withdrawal) கட்டணங்களை மாற்றியமைத்துள்ளது. இந்தப் புதிய கட்டண... மேலும் பார்க்க