செய்திகள் :

"அவர் அம்மா, நான் பிள்ளை; கண்ணீரோடு வழியனுப்புகிறேன்"- சௌகார் ஜானகிக்கு கமல்ஹாசன் இரங்கல்

post image

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மதியம் 2 மணியளவில் காலமானார்.

இவருக்கு வயது 94. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி

திரைத்துறை மற்றும் கலை உலகிற்கு இவர் ஆற்றிய வாழ்நாள் சேவையைப் பாராட்டி, மத்திய அரசு 2022-ம் ஆண்டு இவருக்கு நாட்டின் உயரிய விருதான 'பத்மஸ்ரீ' விருதை வழங்கி கௌரவித்தது.

தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு முத்திரையைப் பதித்த சௌகார் ஜானகிக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கலைத் தெரிவித்திருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " ‘பார்த்தால் பசி தீரும்’ படம் தொடங்கி நாற்பதாண்டுக் காலப்பரப்பில் பல படங்கள் இணைந்து பணியாற்றியுள்ளோம். அவர் அம்மா, நான் பிள்ளை. தென்னிந்தியத் திரையின் தவிர்க்கவியலாத நடிப்புக் கலைஞர் சௌகார் ஜானகி.

சௌகார் ஜானகி
சௌகார் ஜானகி

அன்றைய கதாநாயகர்கள் அத்தனை பேரோடும் நடித்தவர். என் ஆசிரியர் கே.பாலசந்தரின் விருப்பத் தேர்வாக இருந்தவர். மறைந்துவிட்டார். அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது. கண்ணீரோடு வழியனுப்புகிறேன்" என்று பதிவிட்டிருக்கிறார்.

Sowcar Janaki: நடிகை செளகார் ஜானகி காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள காவேரி மருத்துவமனையில் உடல்நலக் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், இன்று மதியம் 2 மணியளவில் அவர் இயற்கை எய்தினார். இவருக்கு வயது ... மேலும் பார்க்க

அஞ்சாதே : நல்லதும் கெட்டதும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 17

`சினி'ஸ்கோப் 17அஞ்சாதேமருத்துவமனையில் இருக்கும் கிருபாவின் அப்பாவுடைய சிகிச்சைக்காக சத்யா பணத்தைக் கட்டிவிட்டுப் போகிறான். பணத்துக்காக அலைந்து திரிந்துவிட்டு வரும் கிருபா, அதன் பொருட்டு தங்கை உத்ராவிட... மேலும் பார்க்க

AR Rahman: `சிறகு கொடுக்கும் மேடை' - ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விக்ரம் & பூஜா

புதிதாகத் தொடங்கப்பட்டிருக்கும் சோனி விழா சேனலில் ஒளிபரப்பாகவிருக்கும் 'தமிழ் ஐடல்' நிகழ்ச்சியின் முதல் சீசனை, 'விக்கல்ஸ்' விக்ரம் மற்றும் பூஜா வெங்கட் இணைந்து தொகுத்து வழங்குகிறார்கள். இசையமைப்பாளர் ... மேலும் பார்க்க

Deepa Venkat: "இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்க வரக் காரணம் இதான்" - தீபா வெங்கட் ஷேரிங்ஸ்

ரியோ நடிப்பில் உருவாகியிருக்கும் 'ராம் & லீலா' நாளை திரைக்கு வருகிறது. அறிமுக இயக்குநர் ராமசந்திரன் கண்ணன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் சேத்தன், தீபா வெங்கட் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில... மேலும் பார்க்க

Rio Raj: அப்போது 'ராம் இன் லீலா', இப்போது 'ராம் & லீலா'; சென்சாரினால் பட தலைப்பில் ஏற்பட்ட மாற்றம்!

'ஆண்பாவம் பொல்லாதது' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் ரியோ நடித்திருக்கும் 'ராம் & லீலா' படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது. அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிர... மேலும் பார்க்க

Kamal Haasan: "இந்தியாவின் கதைகள் உலகளாவிய பார்வையாளர்களைக் கவரும் வலிமை கொண்டவை!" - கமல்ஹாசன்

Essel குழுமம் தொடங்கப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு செய்திருப்பதையொட்டி, Zee தமிழ், Zee திரை மற்றும் தமிழ் Zee 5 இணைந்து சென்னை ITC கிராண்ட் சோழா ஹோட்டலில் மிகப் பிரமாண்டமான விழாவை நடத்தியது. தமிழ் திரையு... மேலும் பார்க்க