செய்திகள் :

`லாபத்தில் 10% பங்கு கேட்டார்'- ஸ்பிரிட் படத்திலிருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டதன் பின்னணி என்ன?

post image

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே ஆரம்பத்தில் ஸ்பிரிட் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் இப்படத்தில் நடிக்க தீபிகா படுகோனோ பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். பகலில் மட்டும் 8 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்று தெரிவித்தார். இதனால் அப்படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டுள்ளார். ஸ்பிரிட் படத்தை தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்குகிறார். பிரபாஸ் நடிக்கும் இப்படத்தில் இருந்து தீபிகா படுகோனே நீக்கப்பட்டது குறித்து இயக்குநர் சந்தீப் ரெட்டியின் சகோதரர் பிரனய் ரெட்டி வங்கா அளித்துள்ள பேட்டியில், தீபிகா படுகோனே இப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது குறித்து புதிய காரணத்தை தெரிவித்து இருக்கிறார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், ''தீபிகா படுகோனேயுடன் படத்தின் தயாரிப்பாளர் 18 மாதங்கள் பேச்சுவார்த்தை நடத்தினார். தீபிகா படுகோனேயின் சம்பளம் தவிர்த்து படத்தின் லாபத்தில் ஒரு பங்கு கேட்டார். படத்தின் லாபத்தில் 10 சதவிகிதம் கேட்டார்.

தீபிகா, சந்தீப்

அவர் எதையும் கேட்கலாம். கொடுக்கத் தயாராக இருந்தால், நாங்கள் கொடுக்கலாம். ஆனால் பொருளாதாரம் (பட்ஜெட்) நமக்கு வேலை செய்ய வேண்டும்.

அது வேலை செய்யவில்லை என்று நினைத்தோம். அதனால்தான் வேறு வழிகளைத் தேட ஆரம்பித்தோம். நாங்கள் அவருடன் கதை மற்றும் கதாபாத்திரம் பற்றி விவாதித்தோம். தனிப்பட்ட முறையில் பேசப்பட்ட விஷயங்களை வெளிப்படுத்தக் கூடாது. ஆனால் அவர் அனைத்தையும் கசியவிட்டார். அதனால்தான் நாங்கள் வருத்தம் அடைந்தோம். தீபிகா படுகோனே சம்பளத்தில் கூடுதலாக 5 முதல் 6 கோடி ரூபாய் கேட்டது மட்டும் பிரச்னைக்கு காரணம் அல்ல'' என்று தெரிவித்தார்.

தீபிகா படுகோனேவிற்கு பதில் நடிகை ஸ்பிரிட் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ட்ரிப்டி டிம்ரி அறிவிக்கப்பட்டார். தீபிகா படுகோனே தனிப்பட்ட முறையில் விவாதிக்கப்பட்ட கதை குறித்து வெளியில் கசியவிட்டதாக சந்தீப் ரெட்டியும் குற்றம் சாட்டி இருந்தார். அதேசமயம் 8 மணி நேரம் பணி என்பதை வலியுறுத்தியதில் எந்தவித தவறும் இல்லை என்று தீபிகா படுகோனே தெரிவித்து இருந்தார். ஸ்பிரிட் படம் வரும் மார்ச் மாதம் திரைக்கு வர இருக்கிறது. தீபிகா படுகோனே இரண்டாவது குழந்தையின் பிரசவத்திற்காக பெங்களூருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று இருக்கிறார்.

பாலியே அமைதியாகும் ஒரு நாள்... ‘Nyepi’யை அவமதித்த சுற்றுலாப் பயணிக்கு ஓராண்டு சிறை!

ஓராண்டு சிறை! பாலி சுற்றுலாப் பயணிக்கு நடந்தது என்ன?Instagram-ல் ஒரு பதிவு...பாலியில் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படும் ‘ந்யேபி’ (Nyepi) அமைதியின் நாளன்று, அதன் விதிகளை மீறி சமூக வலைதளத்தில் அவதூறு வீடி... மேலும் பார்க்க

Vikram: கிப்பன் குரங்கு விவகாரம்; ஆப்பிரிக்க பூனை உட்பட 11 விலங்குகளை வண்டலூருக்கு மாற்றும் வனத்துறை

அரிய வகை மனித குரங்கு இனமான லார் கிப்பன் குட்டியுடன் விளையாடிய வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கினார், நடிகர் விக்ரம். வனத்துறையினரால் அடுத்தடுத்து நடத்தப்பட்ட விச... மேலும் பார்க்க

காவல் நிலைய வளாகத்திற்குள் போலீஸ் பைக்குகளுக்கு தீவைப்பு; அறந்தாங்கியில் பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் பேராவூரணி சாலையில் உள்ள காவல் நிலைய வளாகத்திற்குள் புகுந்து, நள்ளிரவில் 3 பைக்குகளுக்கு மர்ம நபர் தீ வைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரப்பரப்பையும் அதிர்ச்சியை... மேலும் பார்க்க

`கணிதம் கடினமல்ல' கற்றலில் விளையாட்டை புகுத்திய இளைஞர்; வெறுப்பை உதறி கணிதத்தை விரும்பும் குழந்தைகள்

“கணிதம் கஷ்டம்… எனக்கு கணிதமே வராது!” — பள்ளி வகுப்பறைகளில் பல குழந்தைகளிடம் இருந்து கேட்கப்படும் வார்த்தைகள் இவை. ஆனால், கணிதத்தைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; அதை கற்றுக்கொடுக்கும் முறையில்தான் மாற... மேலும் பார்க்க

தரையில் காலெடுத்து வைத்தால் எரியும் உடல்; குளத்திலேயே வசித்துவந்த சிறுவன் - மீட்ட ஆனந்த் அம்பானி!

மேற்கு வங்க மாநிலம், முர்ஷிதாபாத் அருகில் உள்ள பெல்தங்கா என்ற இடத்தைச் சேர்ந்த இக்பால் ஷேக் என்ற 16 வயது சிறுவன், கடந்த பல ஆண்டுகளாக தரையில் வாழும் நாட்களை விட அதிகமான நாட்களைக் குளத்து நீரில் கழித்து... மேலும் பார்க்க

1.5 டன் எடை, ரூ.5 லட்சம் விலை - அந்தியூர் கோயில் திருவிழாவில் கவனத்தை ஈர்த்த ஜாஃப்ராபாடி எருமை!

ஈரோடு மாவட்டம், அந்தியூர் புதுப்பாளையம் பகுதியில் அமைந்திருக்கிறது சிறப்பு வாய்ந்த குருநாத் சுவாமி திருக்கோயில். ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். தேர் திருவி... மேலும் பார்க்க