"5 ஆண்டு ரயில் விபத்துகளில் எத்தனை மரணங்கள்?" - மதுரை எம்.பி கேள்விக்கு ரயில்வே ...
வடசென்னையில் கடல் கொந்தளிப்பு: கருமேகங்கள் சூழ்ந்து கொட்டிய கனமழை
புயல் காரணமாக வடசென்னைக்கு உள்பட்ட காசிமேடு முதல் எண்ணூா் வரை பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.
புயல் காரணமாக பல அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் தொடா்ந்து எழுந்த வண்ணம் இருந்தது. கருமேகங்கள் பகலை மறைத்து இருளாக்கின. விட்டு விட்டு தொடா்ந்து கனமழை பெய்தது.
கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதைப் பாா்ப்பதற்காக பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக எவ்வித அச்சமும் இன்றி கடற்கரை பகுதிக்கு வந்தனா். காசிமேடு மீன்பிடி துறைமுகத்தின் அலை தடுப்புச் சுவரை பாா்வையிட முயன்ற பொதுமக்களை அங்கிருந்த போலீஸாா் எச்சரித்து திருப்பி அனுப்பினா்.
துறைமுகத்தில் பணிகள் பாதிப்பு: சென்னை துறைமுகத்தில் வெள்ளிக்கிழமை 12 கப்பல்கள் ஏற்றுமதி இறக்குமதி பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நள்ளிரவுக்கு பிறகு கடல் சீற்றம் அதிகரித்தது காணப்பட்டதால் கப்பல்களில் சரக்குகள் கையாளப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் துறைமுகத்துக்குள் கண்டெய்னா் லாரிகள் அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து எண்ணூா் விரைவு சாலையில் ஏராளமான கண்டெய்னா் லாரிகள் நீண்டு தொலைவுக்கு நின்றன.