செய்திகள் :

'வந்தே மாதரம்' மசோதா: `நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகி' - கனிமொழி கண்டனம்

post image

'வந்தே மாதரம்' பாடலை அவமதித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க வழி வகுக்கும் 'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026'-ஐ கடந்த 24-ஆம் தேதி மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் அறிமுகப்படுத்தினார்.

இதன் மூலம் 'வந்தே மாதரம்' பாடலை வேண்டும் எனும்போது தடுப்பது அல்லது குழப்பம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது இந்த மசோதாவின் மூலம் குற்றமாகக் கருதப்படும்.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கிய பங்காற்றிய 'வந்தே மாதரம்' பாடலின் கண்ணியத்தையும், பெருமையையும் பாதுகாப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கம் என மத்திய அரசு விளக்கமளித்திருந்தது.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மசோதா நேற்று (ஜூலை.29) மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று மக்களைவையிலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்த மசோதாவுக்கு எதிராக திமுக உள்ளிட்ட கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

நாடாளுமன்றத்தில் விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி கனிமொழி, "தேசபக்தியை ஒரு சட்டத்தின் மூலம் மக்கள் மீது கட்டாயப்படுத்தக் கூடாது. வந்தே மாதரம் பாடலைக் கட்டாயமாக்குவது இந்தியாவின் மதச்சார்பின்மை கொள்கைக்கு எதிரானது.

புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்றம்

நாடாளுமன்றத்தில் முறையான விவாதம் நடத்தாமல் இந்த மசோதாவை நிறைவேற்றக் கூடாது. வந்தே மாதரம் பாடாவிட்டால் தேசத்துரோகிகள் என்கிறது பாஜக. ஆனால் நாட்டை பிளவுப்படுத்தும் நீங்கள்தான் உண்மையான தேசத்துரோகிகள்" என்று காட்டமாக பேசியிருக்கிறார்.

'தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு திருத்த மசோதா 2026' மசோதா இரு அவைகளிலும் நிறைவேறியிருக்கும் நிலையில், குடியரசு தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டமாக வடிவம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை: `எந்த layout வந்தாலும் என்னிடம் அப்ரூவல் வாங்கிய பிறகே அனுமதி'- எம்எல்ஏ கார்த்திகேயன்

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர் ஊராட்சியில் சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் கலந்துகொண்டு பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: 88 மணி நேர தாக்குதலின் ரகசியங்களை முதன்முறையாக உடைத்த அஜித் தோவல்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா நடத்திய 88 மணி நேர ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) அஜித் தோவல் முதன்முறையாக விரிவாக பேசியிருக்கிறார். ... மேலும் பார்க்க

சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள்: ``தமிழ்நாடு அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும்" - சிபிஎம் சண்முகம்

கர்​நாடக மாநிலம், சாம்​ராஜநகர் மாவட்​டத்​தில் உள்ள ஹனூர் அரு​கில், காவிரி வனவிலங்கு சரணால​யத்​துக்கு உட்​பட்ட ஷாக்யா வனப்​பகுதி உள்​ளது. நேற்று அதி​காலை 5 மணி​யள​வில் தோமை​யார்​பாளை​யத்தை ஒட்​டி​யுள்ள... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``பெற்றோரின் புகாரைப் பெற மறுத்த குற்றச்சாட்டில் உண்மையில்லை" - அமைச்சர் சம்பத் குமார்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க

அமுதன் கொலை: ``இதற்கு பிறகும் வாயைத் திறக்காமல் மயக்கத்தில் இருக்குறீர்களே CM sir?"- அப்பாவு காட்டம்

கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர்-பொள்ளாச்சி சாலையில் உள்ள பிரபல கல்வி நிறுவனத்தில் மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவர் அமுதன் தனது நண்பருடன் நடந்துச் சென்றுகொண்டிருந்தபோது அவர்களை வழிமறித்து சக மா... மேலும் பார்க்க