செய்திகள் :

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்!" - முதல்வர் விஜய் அறிவிப்பு | Live

post image

``வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்." - முதல்வர் விஜய்

``விவசாயிகள் நெல் மற்றும் கரும்பை விளைவிக்கவும் விற்பனை செய்யவும் உடல் பொருள் ஆவி அத்தனையையும் கொடுக்கின்றனர். அரசின் நிதிநிலைமை சரியில்லையெனினும் விவசாயிகளுடன் நிற்க விரும்புகிறோம். வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்கப் போகிறோம்.

அந்த வகையில் சன்ன ரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு - 2850 ரூபாயும் பொது ரக நெல்லுக்கு - 2600 ரூபாயும் கரும்புக்கு டன்னுக்கு - 4000 ரூபாயும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்."

- முதல்வர் விஜய்

செல்போன் பயன்படுத்தாதீங்க! - எச்சரித்த சபாநாயகர்

ஐ.யூ.எம்.எல் கட்சியை சேர்ந்த அமைச்சர் ஷாஜகான் தமிழ்த்தாய் வாழ்த்து தீர்மானத்தில் பேசுகையில் மொபைல் போனை பார்த்து பேசினார். அவர் பேசி முடித்தவுடன், 'அவைக்குள் மொபைல் பயன்படுத்தக் கூடாது என விதி இருக்கிறது. அடுத்த முறை அதை பின்பற்றுங்கள்' என சபாநாயகர் எச்சரித்தார்.

வன்னிஅரசு - சபாநாயகர் உரையாடல்

வன்னிஅரசு : `கன்னட தேசிய இனமக்கள் தங்களுக்கென ஒரு கொடியை அடையாளமாக வைத்து பொதுவெளியில் பயன்படுத்துகின்றனர்.'

சபாநாயகர் : `நிறைய நல்ல விஷயங்களை பேசிவிட்டீர்கள்...போதும்...'

வன்னிஅரசு : `மேதகு பிரபாகரன் அவர்களே இதை தடுக்கலாமா...'

சபாநாயகர் : `தீர்மானத்துக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுங்கள்...'

வன்னிஅரசு : `தமிழ்த் தேசியத்துக்கு எதிரான யாவருக்கும் பாரதிதாசனின் 'பொங்கு தமிழருக்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு..' என்பதையே கூற விரும்புகிறேன்.'

அமைச்சர் வன்னிஅரசு பேச்சு

"தமிழ்நாடு, தமிழர் என்கிற அடையாளத்தை தொடர்ந்து விதைத்து வருகிற அரசியல்தான் இன்னமும் தமிழகத்தில் நீடித்து வருகிறது.

இந்திய அரசியலமைப்பு வழங்கியுள்ள பண்பாட்டு சுதந்திரத்தின் அடிப்படையில், தமிழரின் பண்பாடான தமிழ்த்தாய் வாழ்த்தை பொது இடங்களில் முதலில் பாட வேண்டும் என்கிற தீர்மானத்தை வரவேற்கிறோம்.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம். ஒரே நாடு ஒரே மொழி என தேசிய இனத்தின் அடையாளத்தை மட்டுப்படுத்துவதற்கு எதிரான வரலாற்று தீர்மானம் இது".

வன்னியரசு
வன்னியரசு

சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

"1991 இல் அவையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட வேண்டுமென முடிவெடுத்தவர் புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதாதான்".

ஜே.சி.டி.பிரபாகர்
ஜே.சி.டி.பிரபாகர்

எடப்பாடி பழனிசாமி பேச்சு

இன்றைய கூட்டத்தொடரின் தொடக்கத்தில் 'தமிழ்தாய் வாழ்த்து' குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அது குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது...

"தமிழர்களின் பண்பாட்டு அடையாளத்தை காக்க அதிமுக எப்போதும் போராடியிருக்கிறது. அண்ணாவும், எம்.ஜி.ஆரும், அம்மாவும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்கள் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைகழகத்தை உருவாக்கினார். தமிழ்நாடு நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அம்மா அறிவித்தார்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது யாருக்கும் எதிரான நடவடிக்கை அல்ல. அது தமிழுக்கு வழங்கும் மரியாதை. தேசப்பற்றும் மொழிப்பற்றும் வேறில்லை. இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம். தமிழர் என்பதிலும் அதே அளவுக்கு பெருமை கொள்வோம். அதற்காக இந்த அரசின் தீர்மானத்தை அதிமுக ஆதரிக்கிறது".

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

பட்ஜெட் விவாதக் கூட்டத்தொடரின் நான்காவது நாள் இன்று.

இன்றைய கூட்டத்தொடரில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இன்றைய கூட்டத்தொடரின் முக்கிய நிகழ்வுகளை இந்த Live Blog-ல் தெரிந்துகொள்ளுங்கள்.

'எங்களுக்காக ஒரு பைசா செலவளித்திருப்பாரா?' - எடப்பாடிக்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்

சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வரும் நிலையில், திடீரென அவையிலிருந்து வெளியே வந்த அதிமுக எம்.எல்.ஏ சி.வி.சண்முகம் பத்திரிகையாளர்களை சந்தித்திருந்தார். CV Shanmugamசி.வி.சண்முகம் பேசியதாவத... மேலும் பார்க்க

தேசியக் கொடிக்கு பதிலாக காவிக்கொடி கொடுத்த பாஜக அமைச்சர்; கடுப்பான அமித் ஷா! - நடந்தது என்ன ?

இந்தியக் குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருது, புதுச்சேரி காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டது. காவல் துறையின் மிக உயரியதான அந்த விருதை கொடுப்பதற்காக, ஆகஸ்ட் 8, 9 என இரண்டு நாள் பயணமாக புதுச்சேரி வந்தார் ... மேலும் பார்க்க

`அந்த தாக்குதலில் நான் உயிரிழந்திருப்பேன்' - கல், ஷூ, சகதியால் மம்தா பானர்ஜி கார் மீது தாக்குதல்

மேற்கு வங்கத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு, அங்கு பா.ஜ.க ஆட்சியமைத்துள்ளது. ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கட்சியில் அதிரு... மேலும் பார்க்க

FCRA 2026: ``சமூக அமைப்புகளின் சொத்துக்களை அபகரிக்கும் சர்வாதிகார ஆக்கிரமிப்பு" - மாணிக்கம் தாக்கூர்

இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் (NGO), அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புகள் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதைக் கட்டுப்படுத்தவும் முறைப்படுத்தவும் 2010-ம் ஆண்டு 'வெளிநாட்டு நன்கொ... மேலும் பார்க்க

Gaza: `அதிபர் ட்ரம்ப்பின் 15 அம்ச ஆவணம்' - நெதன்யாகு நிராகரிப்பும் அமெரிக்கா பதிலும்!

காசாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்த 15 அம்ச அமைதித் திட்டத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார். கடந்த 2023 அக்டோபர் 7 அன்று, காசாவில் இஸ... மேலும் பார்க்க