செய்திகள் :

"வரலாற்றை திருத்துவது சரியில்லை; நானும் சபையை வழிநடத்தியிருக்கிறேன்"- சிபிஎம் முன்னாள் பெண் எம்எல்ஏ

post image

தமிழக சட்டசபையில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவல் பணிக்காக தனது அறைக்குச் சென்றபோது, துணை சபாநாயகரும் அவையில் இல்லை. இதனால் மாற்று அவைத் தலைவராக த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா அவையை வழி நடத்தினார். இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் சத்யபாமா என்றும், த.வெ.க இதை சாதித்து காட்டியது என்றும் சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன. அதேசமயம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ லீமாரோஸ் தான் இதற்கு முன்பு சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தியதாக கூறியுள்ளார். இது குறித்து முன்ளார் எம்.எல்.ஏ லீமாரோஸ் கூறுகையில், "தமிழகத்தினுடைய சட்டமன்றத்தில் த.வெ.க கட்சியைச் சார்ந்த பெண் சட்டமன்ற உறுப்பினர், நேற்றைய தினம் மாற்று சபாநாயகர் என்கிற பொறுப்பில் சபையை நடத்தியதை பாராட்டுகின்றோம்.

​ஆனால், தமிழகத்தினுடைய வரலாற்றிலே முதன்முறையாக ஒரு பெண் மாற்றுத் தலைவர் சபாநாயகராக இருந்ததாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது, அது உண்மையல்ல.

த.வெ.க எம்.எல்.ஏ சத்யபாமா

2006 – 2011 காலகட்டத்தில் மாற்று சபாநாயகர் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த லீமா ரோஸாகிய நானும், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த யசோதா அம்மா அவர்களும் அந்த மாற்றுத் தலைவர்கள் பட்டியலில் இருந்தோம். ​நானும் சமூக நலத்துறையின் மானியக் கோரிக்கையின் போது 2009-ம் ஆண்டு அந்த சபையை மாற்றுத் தலைவர் என்கிற முறையில் வழிநடத்தி இருக்கின்றேன்.

சி.பி.எம் முன்னாள் எம்.எல்.ஏ

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த யசோதா அம்மா அவர்களும் மாற்றுத் தலைவர் என்கிற முறையில் சபையை வழிநடத்தி இருக்கின்றார்கள். ​எனவே, இது ஏதோ த.வெ.க எம்.எல்.ஏ தான் வரலாற்றிலேயே முதன்முறையாக சபாநாயகராக மாற்றுத் தலைவராக இருந்து சபை வழிநடத்தி இருக்கின்றார்கள் என்ற தவறான தகவலை மாற்ற வேண்டும். வரலாற்றைத் திருத்துவது சரியில்லை" என்றார்.

'அதிகாரிகள் செய்தது தவறு; வருந்துகிறோம்' - தவெக அமைச்சர்கள் சந்திப்பு குறித்து பெ.சண்முகம்

கடந்த மாதம், தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராக இரண்டு சம்பவங்கள் நடந்தன.ஒன்று, குஜிலியம்பாறை வட்டாட்சியர் அந்தச் சுற்றுவட்டாரத்தில் உள்ள கம்யூனிஸ்டுகளின் பெயரைச் சேகரிக்கச் சொல்லியிருந்தார்.இ... மேலும் பார்க்க

"பாபநாச அணை திறக்க போராடிய விவசாயிகளை அராஜக கைது செய்த தவெக அரசு" - கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி விவசாயிகள் கைது செய்யப்பட்டதை எதிர்த்து தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி."பாபநாசம் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கக் கோரி, நியாயமான உரிமைக்காக... மேலும் பார்க்க

'வழக்குகள் வாபஸ்; உணவுப்படி 50 ரூபாய்...' - தூய்மைப் பணியாளர்களுக்கு அமைச்சர்கள் கொடுத்த வாக்குறுதி!

பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு குறித்து நீண்ட நாட்களாக போராடி வரும் தூய்மைப் பணியாளர்களுடன் தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். இந்தப் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்கள் போரட்டம்: "உறுதியாக முதல்வர் சந்திப்பார்; பணி நிரந்தரம்.?" - ராஜ்மோகன்

கடந்த 16 நாட்களாக, சென்னை ரிப்பன் பில்டிங்கில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.இன்று காலை அவர்களைச் சந்தித்து அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், நிர்மல் குமார் ஆகியோர் பேச்சுவா... மேலும் பார்க்க

'பார்த்து ரொம்ப நாளாச்சுன்னு வந்தோம்!'- கம்யூனிஸ்ட் அலுவலகத்துக்கு தவெக அமைச்சர்களின் திடீர் விசிட்!

தவெக அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ், நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் திடீரென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்துக்கு சென்று அக்கட்சியின் தலைவர்களோடு ஆலோசனை நடத்தியிருக்கிறார்கள். பெ.சண்முகம் - அ... மேலும் பார்க்க

பிரதமர் வேட்பாளராக விஜய்: ’என்னை சிக்கலில் விட்டு விடாதீர்கள்?’ – அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது பேசிய அவர், “முதலமைச்சர் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கவும், போதை பொருளை கட்டுப்படுத்தவும்... மேலும் பார்க்க