செய்திகள் :

'வருங்கால பிரதமர் விஜய்!' கலக குரல் எழுப்பும் அமைச்சர்கள் - காங்கிரஸை சீண்டுகிறதா த.வெ.க?

post image

தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும் நிலையில், `முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர்' என தவெகவினர் குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் சரத்குமார், 'விஜய்தான் அடுத்த பிரதமர்' எனக் கூறினார்.

தவிர சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி, "இன்றைய CM.. வருங்கால PM.. வருங்காலத்தில் தவெக ஆட்சி மட்டுமே இருக்கும். இன்றைய முதல்வர் விஜய் வருங்கால பிரதமர் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்தும் கிடையாது. நாம் அனைவரும் இணைந்து ஒவ்வொரு நொடியும் அதை நோக்கியே பயணிப்போம்" என்று பேசினார்.

மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர்

இதைக் குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர், ``அவர்கள் கருத்தை சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. தவெகவினர் இன்னும் ரசிகர் மன்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸை சீண்டுகிறதா? தவெக... என்ற பேச்சுகள் அடிபடத் தொடங்கின. இந்நிலையில் தவெக தரப்பில் சில நிர்வாகிகளிடம் பேசினோம்.

"அரசியல் இயக்கங்களில் நிர்வாகிகளும், தொண்டர்களும் தங்கள் தலைவர்கள் மீது வைக்கும் அன்பையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. அதை ரசிகர் மன்ற மனநிலை என்று எளிதாகக் கடந்துபோய்விட முடியாது.

ஒரு புதிய அரசியல் கட்சி உருவாகும்போது, அதன் தொண்டர்களுக்கு இருக்கும் எழுச்சியும் எதிர்பார்ப்பும்தான் கட்சியின் வளர்ச்சிக்கு அடிப்படை சக்தியாக இருக்கிறது.

நாங்கள் மாற்று அரசியலை முன்வைத்து அமைதியான முறையிலும் ஜனநாயகப் பாதையிலும் பயணிக்க விரும்புகிறோம். வட இந்தியாவில் எங்கள் தலைவருக்கு நல்ல வரவேற்பும் இருக்கிறது.

மக்களின் உண்மையான தேவைகளுக்காகவும் மாற்றத்திற்காகவும் நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்பதில் மட்டுமே எங்களது கவனம் முழுமையாக இருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மூத்த தலைவர்களின் கருத்துக்களை நாங்கள் கவனத்தில் கொள்கிறோம். அதேவேளையில் மக்களுக்கான எங்களது பணிகளே தவெகவின் அரசியல் முதிர்ச்சியை வரும் காலத்தில் வெளிப்படுத்தும்.

கட்சி தலைவர்கள் தங்களின் தொண்டர்களை உற்காகப்படுத்த பல்வேறு கருத்துகளை தெரிவிப்பது வழக்கமானது தான். காங்கிரஸ் கூட கடந்த ஆட்சி காலத்தில் திமுக கூட்டணியில் இருந்த போது, `தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை அமைப்போம்' என்றார்கள். அது திமுக ஆட்சிக்கு எதிரான கருத்து என்று எடுக்க முடியுமா?

கூட்டணி கணக்குகள் எல்லாம் தேர்தல் நேரத்தில் இருக்கும் நிலவரங்கள் அடிப்படையில் எடுக்க கூடிய முடிவுகள். இது நாடாளுமன்ற தேர்தல் சீசன் இல்லை. இன்னும் அதற்கு காலம் இருக்கிறது. அப்போது எங்களின் தலைவர் முடிவு செய்வார்." என்று தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு; ஆளுநரைச் சந்தித்த JCD பிரபாகர் - என்ன பேசினார்கள்?

தமிழ்நாட்டில் தவெக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்தக் கூட்டத்தொடரில் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகருக்கு அரசியல் கட்சியினர் மற்றும் மக்களிடையே பாராட்டுகள் கிடைத்தன. இன்று சென்ன... மேலும் பார்க்க

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தனித்துக் களமிறங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள்! - யார் எங்கே?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி, தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரத்தில் இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இந்த இரு தொகுதிகளிலும் அதிமுக வென்றிருந்தது. மதுராந்தகத்தில் மரகதம... மேலும் பார்க்க

BRICS: "இன்று உலகளவில் பதற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன" - மோடி பேச்சு

டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டின் நிறைவு நாள் இன்று. மாநாட்டில் இன்று இந்தியப் பிரதமர் மோடி காலநிலை மாற்றம் குறித்து, “இந்திய நாகரிகத்தில், இயற்கை அன்னையாகப் போற்றப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே... மேலும் பார்க்க

"தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” - நிர்மல் குமார்

மிசா சட்டத்தின் கீழ் கைதான திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாக பேசியதாக, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமாரை எதிர்த்துத் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போ... மேலும் பார்க்க

"நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" - தவெகவிற்கு ஆ.ராசா எச்சரிக்கை

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் திமுகத் தலைவர் ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டது குறித்துச் சர்ச்சையாகப் பேசியிருந்தார். விஜய்யின் இந்தப் பேச்சிற்கு எதிர்ப்புத் தெ... மேலும் பார்க்க

"பாஜக-வை எதிர்க்க பயப்படும் தவெக; பாராட்டியாவது கருத்து சொல்லலாம்!" - தோழர் பாலபாரதி கிண்டல்!

சட்டமன்றக் கூட்டத்தொடரில், காவல்துறை மானியக் கோரிக்கையின்போது முதல்வர் அளித்த ஆவேச உரை, அரசியல் அரங்கில் பலத்த சர்ச்சையையும் விமர்சனத்தையும் உருவாக்கியிருக்கிறது. இந்த நிலையில், த.வெ.க அரசுக்கு ஆதரவு ... மேலும் பார்க்க