14 மாதங்களுக்கு பின், நேற்று உச்சத்தை தொட்ட பங்குச்சந்தை; அடுத்தடுத்து என்ன ஆகும...
'வார்த்தை'யால் வந்த வினை; மோதிக்கொள்ளும் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் - என்ன பிரச்னை?
கர்நாடகா சட்டமன்ற தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்டன. இது தான் கர்நாடகா அரசின் தலைமைக்கான இப்போதைய போட்டிக்கு அடிப்படை காரணம்.
உறுதி
2023-ம் ஆண்டு கர்நாடகா தேர்தல் வெற்றியின் போது, முதல் இரண்டரை ஆண்டு கர்நாடகாவின் முதலமைச்சராக தற்போதைய முதலமைச்சர் சித்தராமையா இருப்பார் என்றும்... அடுத்த இரண்டரை ஆண்டுகள் கர்நாடகாவின் முதலமைச்சராக தற்போதைய துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இருப்பார் என்றும் காங்கிரஸ் மேலிடம் உறுதியளித்ததாக கூறப்படுகிறது.

தற்போது இரண்டரை ஆண்டுகள் முடிந்துவிட்டது. கர்நாடகா முதலமைச்சர் ஆவதற்கான காய்களை நகர்த்தி வருகிறார் டி.கே.சிவக்குமார். ஆனால், முதலமைச்சராகவே தொடர சித்தராமையா விரும்புகிறார்.
இந்தப் பிரச்னை இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே வெளியே தெரிய ஆரம்பித்தது. இருந்தும், சித்தராமையா, டி.கே.சிவக்குமார் இருவரும் ஒற்றுமையாக இருப்பதுபோல காட்டிக்கொண்டனர்.
ஆனால், இப்போது இருவரும் பொதுவெளியில் வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
டி.கே.சிவக்குமார் பேசியது என்ன?
நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட டி.கே.சிவக்குமார் , "வார்த்தையின் சக்தி தான் உலகத்தின் சக்தி என்று கூறுவார்கள். சொன்ன வார்த்தையை காப்பாற்றுவது தான் உலகின் மிகப்பெரிய சக்தி ஆகும்" என்று பேசியிருந்தார்.

சித்தராமையா பதிவு
இதற்கு பதிலடி தரும் வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் சித்தராமையா, "உலகத்தை மக்களுக்காக மேம்படுத்தாது என்றால் வார்த்தை ஒரு சக்தி இல்லை.
கர்நாடகா மக்கள் தந்திருக்கும் தீர்ப்பு நொடிக்கானது அல்ல... அது ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பொறுப்பிற்கானது. நான் உள்பட அனைத்து காங்கிரஸாரும் மக்களுக்காக இரக்கம், நிலைத்தன்மை மற்றும் தைரியத்துடன் பணிபுரிந்து வருகிறோம்.
கர்நாடகாவிற்கான எங்களது வார்த்தை முழக்கம் அல்ல... அது எங்களுக்கு உலகம்" என்று பதிவிட்டுள்ளார்.
இந்த 'வார்த்தை' போரை காங்கிரஸ் மேலிடம் எப்படி சரிசெய்ய போகிறதோ?
A Word is not power unless it betters the World for the people.
— Siddaramaiah (@siddaramaiah) November 27, 2025
Proud to declare that the Shakti scheme has delivered over 600 crore free trips to the women of our state. From the very first month of forming the government, we transformed our guarantees into action; not in… pic.twitter.com/lke1J7MnbD














