செய்திகள் :

வாளுடன் வன்முறை வீடியோ: 34 வழக்குகள், 9 கைது, 210 அக்கவுண்ட்கள் முடக்கம்; சிவகங்கையில் அதிரடி

post image

கைகளில் வாள்களையும் கத்திகளையும் ஏந்திக்கொண்டு, இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் எக்ஸ் பக்கங்களில் "விரைவில் தலைகள் சிதறும்!" என வாள் காட்டி வன்முறை வசனம் பேசி ரீல்ஸ் மோகத்தில் திரிந்த இளைஞர்களுக்கு சிவகங்கை மாவட்டக் காவல்துறை அதிரடி காட்டியுள்ளது.

சிவகங்கையை மையமாகக் கொண்டு கடந்த சில வாரங்களாகச் சமூக வலைத்தளங்களில் கேங் வார் மோதல்களும், வன்முறையைத் தூண்டும் வகையில் ஆயுதங்களுடன் வன்முறை வசனம் பேசும் பதிவுகளும் அதிகரித்து வந்தன.

சிவகங்கை மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த சில இளைஞர்களும் இதில் கைகோத்துக்கொண்டு, சமூக விரோதக் கருத்துகளைப் பதிவிட்டு பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்து வந்தனர்.

இதனைக் கட்டுப்படுத்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா, உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவல்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் இறங்கினர். வன்முறையைத் தூண்டும் பதிவுகளை உன்னிப்பாக ஆராய்ந்து அதிரடி சட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

அதிரடி வேட்டையின் நிலவரப்படி

வன்முறையைத் தூண்டிய பதிவுகள் தொடர்பாக மொத்தம் 34 முதல் தகவல் அறிக்கைகள் (FIRகள்) பதிவு செய்யப்பட்டுள்ளன.

வாள்களைக் காட்டி வன்முறை வசனம் பேசிய சிவகங்கையைச் சேர்ந்த ரிஷி ராஜா (19), கவி சரண் (18) உள்ளிட்ட 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சமூக வலைத்தள மோதல்களில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்கள் பிடிக்கப்பட்டு, இளைஞர் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

வன்முறையைத் தூண்டும் வகையிலும் பழிவாங்கும் நோக்கத்துடனும் இயங்கி வந்த 210 சமூக வலைத்தளக் கணக்குகள் அதிரடியாக முடக்கப்பட்டுள்ளன.

எச்சரிக்கும் காவல்துறை

"சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் இளைஞர்களும் பொதுமக்களும் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். லைக்ஸுக்காகவும் வியூஸுக்காகவும் சோசியல் மீடியாவில் வாளாட்டி வன்முறை வசனம் பேசினாலோ, தனிநபர்களை அச்சுறுத்தி சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தினாலோ பாரதிய நியாய சன்ஹிதா (BNS) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் (IT Act) ஆகியவற்றின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை பாயும்" எனச் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா திட்டவட்டமாக எச்சரித்துள்ளார்.

இணையத்தில் வன்முறையைப் பரப்பி கெத்து காட்ட முயன்ற இன்ஸ்டா ரவுடிகள், தற்போது போலீசாரின் இந்த அதிரடியால் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

US Elections: அமெரிக்க செனட் வரலாற்றில் முதல் தன்பாலின ஈர்ப்பாளர்; இணையுடன் மேடையேறிய கிறிஸ் பப்பாஸ்

அமெரிக்க செனட் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம், அந்நாட்டுச் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிப்படையான தன்பாலின ஈர்ப்பாளர் - ஆண் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த... மேலும் பார்க்க

இடைத்தேர்தல் ரேஸ்: ED போடும் பிரஷர்... விராலிமலையை வசமாக்க முயற்சியில் 'ரசகுல்லா' விஜயபாஸ்கர்!

பொங்கல், தீபாவளி வந்தாலே போதும்... புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதி வாக்காளர்களுக்குப் பரிசுகளையும் இனிப்புகளையும் வாரி வழங்கி வழங்குவது முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் நெடுநாள் பாணி. இப்ப... மேலும் பார்க்க

6am Special Show: "பொழுதுபோக்குக்கு முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வளர்ந்திருக்கிறது?" - சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெ... மேலும் பார்க்க

'முதலமைச்சரே மாணவர்களிடம் பாரபட்சம் காட்டலாமா?' - சர்ச்சையாகும் தவெகவின் கல்வி விருது!

'தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா' என்ற பெயரில் தவெக சார்பில் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகளில் மாநில, மாவட்டளவில் மதிப்பெண் எடுத்த மாணவ மாணவிகளுக்கு முதல்வர் விஜய் விருது வழங்கியிருக்கிறார... மேலும் பார்க்க

அக்னிவீரர்கள்: கூடுதலாக 2 ஆண்டுகள் ராணுவப் பணி; நிரந்தரப் பணிக்குத் மீண்டும் வாய்ப்பு; முழு விவரம்

ராணுவத்தில் சேர வேண்டும், நாட்டுக்காகப் பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் அக்னிபத் திட்டத்தில் இணையும் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. நான்கு ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும் என்ற நிலை... மேலும் பார்க்க

வேட்பாளரை அறிவித்த மதபோதகர்; சலசலப்பில் TVK டு வராத முதல்வர்; ஏக குஷியில் நிர்மல் தரப்பு! | கழுகார்

சலசலப்பில் நெல்லை த.வெ.க!வேட்பாளரை அறிவித்த மதபோதகர்...அம்பாசமுத்திரம் உள்பட 5 தொகுதி இடைத்தேர்தல் மீதான எதிர்பார்ப்பு எகிறிவரும் நிலையில், இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்... மேலும் பார்க்க